“சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.” (மத்தேயு 6:39). நம்முடைய இரட்சகருடைய தனிப்பட்ட ஜெபத்தில், முக்கியமாக அவருடைய சோதனை வேளையில், கற்றுக்கொள்ளவேண்டிய அற்புதமான விஷயங்களை நாம் பார்க்கலாம். முதலாவது, அது தனிமையான ஜெபமாய் இருந்தது. ஆம், அவர், தனக்கு பிடித்த மூன்று சீடர்களிடமிருந்தும்கூட தனித்து ஜெபம் பண்ணினார். எனக்கு அருமையான விசுவாசியே, முக்கியமாக, சோதனை வேளையில், உன்னுடைய தனி ஜெபத்தில் அதிகமாய் தரித்திரு. குடும்ப ஜெபம், சபை ஜெப கூட்டம், இது மட்டும் போதாது. இவைகள் முக்கியமானதாக இருந்தாலும், தனிப்பட்ட ஜெபம் மட்டுமே, தேவன் தவிர, வேறு ஒருவரும் இதை கேட்காததினால் அதிக தாக்கமுள்ளதாயும், சிறப்பானதாயும் இருக்கிறது. இரண்டாவதாக, அது தாழ்மையான ஜெபமாய் இருந்தது. லூக்கா, முழங்கால் படியிட்டார் என்று சொல்லுகிறார். மற்ற சுவிஷேகர்கள், “முகங்குப்புற விழுந்து” என்று சொல்லுகிறார். இதை […]
Read More