Guidelines To Build Your Faith – George Muller. 1. தேவனுடைய வார்த்தையை கவனமாய் படித்து, அதை தியானம் பண்ணுங்கள். தேவனுடைய வார்த்தையை படிப்பதின் மூலம், விசேஷமாக அதை தியானிப்பதின் மூலம், விசுவாசியானவன், தேவனுடைய குணாதிசயத்தையும், அவருடைய சுபாவத்தையும் மேலும் அறிந்து, அவற்றோடு ஒன்றிப்போகிறான். தேவனுடைய நீதி மற்றும் பரிசுத்தத்திற்கு அடுத்தபடியாக, அவர் எவ்வளவு அன்புள்ளவர், இரக்கமுள்ளவர், தயையுள்ளவர், ஞானமுள்ளவர், உண்மையுள்ள பிதாவாய் இருக்கிறார் என்று உணர்ந்து கொள்ளுகிறான். ஆகையால், பல்வேறு பாடுகள், இழப்புக்கள், பொருளாதார தேவைகள் மத்தியில் செல்லும் போதும், அவன், அவனுக்கு உதவி செய்யும் தேவனுடைய செயலாற்றும் தன்மையில் இளைப்பாறுகிறவனாய் இருக்கிறான். தேவன், வல்லமையில், சர்வ வல்லவராய் இருக்கிறார் என்றும், ஞானத்தில் முடிவற்றவராய் இருக்கிறார் என்றும், அவர் தம்முடைய மக்களை, விடுவிக்கவும், உதவி செய்யவும் ஆயத்தமாய் இருக்கிறார் என்றும் அவன் தேவனுடைய வார்த்தையில் கற்றுக்கொள்ளுகிறவனாய் இருக்கிறான். தேவனுடைய வார்த்தையை படித்து, அதை தியானம் செய்வது விசுவாசத்தை உறுதிபடுத்துவதற்குண்டான […]
Read More