சுய-ஒழுக்கம் (இச்சையடக்கம்) என்றால் என்ன? What is Self-Discipline? – Dr.ஸ்டீவன் லாசன்.

Published August 29, 2021 by adming in Pastor's Blog

-Dr. Steven Lawson.

தனிப்பட்ட பரிசுத்த வாழ்வின் வளர்ச்சியானது, நம்முடைய சுய – ஒழுக்கத்தின் வளர்ச்சியின் அடிப்படையிலேயே அதிகமாக தீர்மானிக்கப்படுகிறது. இந்த அடிப்படையான ஒழுக்கம் இல்லாமல், கிறிஸ்துவின் கிருபையில் முன்னேறுவதில் சாத்தியமில்லை. வீட்டிலோ, தொழிலிலோ, அல்லது சபையிலோ இவ்விதமான இடங்களில் ஒழுக்கத்தை கடைபிடிப்பதற்கு முன்பு, சுய – ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது மிக அவசியம்.

உண்மையை சொல்லப்போனால், இன்றைய நாட்களில், தனிப்பட்ட ஒழுக்கம், அதிகம் விரும்பபடாத ஒரு காரியமாயிருக்கிறது. நம்முடைய சமுதாயத்தில், பெரும்பாலும் பல கிறிஸ்தவர்கள் மத்தியில் கூட, சுய – ஒழுக்கத்திற்கான எந்த ஒரு வலியுறுத்தலும் எதிர்க்கப்படுகிறது. சட்டவாதம் பேசுபவர்கள், சுய ஒழுக்கமானது, அவர்களுடைய கிறிஸ்தவ சுதந்திரத்தின்  உரிமைகளை பறிப்பது போல, உணர்ந்து, கூக்குரலிடுகிறார்கள். இந்த சுதந்திர எண்ணம் கொண்ட விசுவாசிகள், தனி ஒழுக்கமானது, தங்களுடைய கிறிஸ்துவுக்குள்ளான சுதந்திரத்தை பறித்து, ஒரு சிறு வட்டத்திற்குள் அவர்களை கொண்டுவருவதுபோல உணர்கிறார்கள்.

ஆனால், இவ்விதமான அனேக விசுவாசிகள், கிறிஸ்துவுக்குள் உள்ள அவர்களுடைய சுதந்திரத்தை தவறான விதத்தில் கையாண்டு, அதினிமித்தம், எந்த விதமான சுய ஒழுக்கம் இல்லாதவர்களாய் காணப்படுகின்றனர். அவர்கள் எவ்வளவு தூரம் அதை எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள் என்றால், அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை, ஒரு சீராக இருக்க முடியாத அளவிற்கு அதை எடுத்துச்சென்றிருக்கின்றனர். இவ்விதமாக, சுய ஒழுக்கத்திற்குண்டான  காரியத்தை அவர்கள் தவிர்க்கும் போது, அவர்களுடைய ஆவிக்குரிய முதிர்ச்சியின் வளர்ச்சியை தள்ளிப்போடுகிறார்கள். சோதனையும், பாவத்தையும் எதிர்க்க சிறிய அளவு சுய கட்டுப்பாட்டை  மட்டுமே, அவர்கள் கொண்டுள்ளவர்களாய் இருக்கின்றனர்.

நாம் தெளிவாக இருக்க வேண்டும். எங்கு ஒழுக்கம் இல்லையோ, அங்கு சீடத்துவம் இல்லை. நாம் நம்மை ஒழுங்குபடுத்தாவிட்டால், கடவுளே நம்மை ஒழுங்கு படுத்துவார். (எபி 12:5-11). ஆக, ஏதோ ஒரு வழியில், நம் வாழ்வில் ஒழுக்கம் காணப்படும். பாவத்திற்கு இடம் கொடுக்கும், நமது போக்கை கருத்தில் கொண்டு, நாம் தேவனால், ஒழுங்குப்படுத்தப்படாமல், தெய்வீக பக்தியின் நோக்கத்திற்காக, நம்மை நாமே ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும்.

இச்சையடக்கம் (சுய-ஒழுக்கம்) என்றால் என்ன?

அடக்கம் என்ற வார்த்தைக்கு கிரேக்க பதம் (enkrateia – என்கிரேடியா) அதாவது, அதிகாரம் அல்லது ஆளுமை என்ற அர்த்தத்தை குறிக்கும் krat – க்ராட் என்ற வார்த்தையிலிருந்து வந்துள்ளது. சுய – ஒழுக்கம் என்பது ஒருவரின் மீது அதிகாரம் செலுத்துவது ஆகும். இது ஒருவருடைய சுயத்தை கட்டுக்குள் கொண்டு வருகிற செயலாகும். இது எதை குறிக்கிறது என்றால், ஒருவருடைய விருப்பங்கள், எண்ணங்கள், செயல்கள் மற்றும் வார்த்தைகள் மீது சுய – ஆளுகை செய்வதை குறிக்கிறது. அதாவது, ஒரு விசுவாசி, தன் வாழ்வில் கட்டுப்படுத்த வேண்டிய கட்டுப்பாடு ஆகும். (கலா 5:23). இதே வார்த்தைதான் இச்சையடக்கம் என்ற வார்த்தையை குறிப்பதற்கு, 1 கொரி 7:9ல் சட்டத்திற்கு புறம்பான பாலிய ஆசை இச்சைகளுக்கு விரோதமாக ஒருவர் காட்ட வேண்டும் என்று பயன்படுத்தப்படுகிறது. அதேவண்ணமாக, மூப்பர்கள் “இச்சையடக்கமுள்ளவர்களாய்” இருக்க வேண்டும் (தீத்து1:8) அதாவது, உள்ளான மனப்பான்மை மற்றும் வெளிப்புற செயல்களில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆவிக்குரிய தலைமைத்துவத்திற்கு, சுயத்தை கட்டுக்குள் வைத்திருப்பது இன்றியமையாத ஒன்றாகும். இச்சையடக்கத்திற்கு நேர்மாறானது, “மாம்சத்தின் கிரியைகளை” உருவாக்கும் ஒரு சுய – மகிச்சியான வாழ்க்கை முறை ஆகும். (கலா 5:19-21). இச்சையடக்கம் இல்லாதிருப்பது, தவிர்க்க முடியாத பாவச்செயல்களுக்கு வழிவகுக்கும். ஆம், எங்கு ஒருவர் சுயத்தின் மீது அதிகாரம் கொண்டவராய் இருக்கிறாரோ, அங்கு அவர், சிற்றின்ப பசி மற்றும் பாவத்தை தேர்ந்தெடுப்பதற்கு வலுவான எதிர்ப்பை காண்பிப்பார். சுயத்தின் மீதுள்ள அதிகாரமான, கிறிஸ்துவின் கீழ்படிதலுக்கு ஒவ்வொரு சிந்தனையும், வார்த்தையும், செயலும் சிறைபிடிக்கிறது(2 கொரி 10:5). தனிப்பட்ட பரிசுத்த வாழ்வின் முன்னேற்றமானது, எப்பொழுதும் இச்சையடக்கத்தை எதிர்பார்க்கிறது.

எது இச்சையடக்கம் இல்லை?

இச்சையடக்கம் என்றால் என்ன என்பதை நன்கு புரிந்து கொள்ள, முதலாவது, அது எது அல்ல என்பதை நாம் பார்க்க வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையின் இரண்டு தவறான பார்வைகளான, பெலஜியனிசம் மற்றும் செமி – பெலஜியனிசம் இச்சையடக்கதின் உண்மையை சிதைக்கிறது.

நான்காம் நூற்றாண்டில் பெலஜியஸ் (கி.பி 354-420) என்ற பிரிட்டிஷ் துறவி, ஒரு மனிதன் தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளவும், பரிசுத்தமாக்கிகொள்ளவும் முடியும் என்று தவறான போதனையை கற்பித்தார். ஒரு நபர் தன்னுடைய முழுமையான ஈடுபாட்டை காண்பித்த்தால், அவர் தேவ சித்தத்தை நிறைவேற்ற முடியும் என்று தவறான போதனையை போதித்தார். இதன் மூலம் பெலஜீயஸ், மனிதனுடைய மூல பாவத்தையும், மனுக்குலத்தின் முழுமையான வீழ்ச்சியையும் மறுதலித்தார். தெய்வீக சட்டத்தை பற்றிய அறிவு மட்டுமே தேவை என்று அவர் வலியுறுத்தினார். மேலும் மனிதன் தன்னுடைய சுயாதின சித்தத்தின் மூலம், அவன் தீர்மானமாக செயல்படும்போது, தன்னைத்தான் ஒழுங்குபடுத்திக்கொள்ளலாம் என்று போதித்தார்.

இந்த தவறான போதனைக்காக, கி.பி. 418ல் காத்தேஜ் கவுன்சிலால், பெலஜீயஸ் ஒரு கள்ள போதகர் என்று கண்டனம் செயப்பட்டார். வருத்தமான விஷயம் என்ன வென்றால் பெலஜியனிசம் இன்றும் நம்மிடத்தில் இருக்கிறது. இன்றும் பலர், தாங்கள் விரும்புகிறபடி இருக்கமுடியும் என்று தவறாக நினைக்கின்றனர். இந்த முட்டாள்தனமான மந்திரமானது, மனசு என்ன நினைக்கிறதோ, அதை நிறைவேற்ற முடியும் என்று கோஷமிட்டுக்கொண்டிருக்கிற, சுய-உதவி இயக்கத்தாரிடத்திலும், செழிப்பு உபதேசக்காரர்களிடத்திலும் இன்றைய நாட்களிலும் பார்க்கலாம். இச்சையடக்கத்திற்குண்டான திறமை நமக்குள் இருப்பதாக, அவர்கள் நினைக்கின்றனர்.

இரண்டாவது, தவறான போதனை, செமி-பெலஜியனிசம், அதே ஒத்த கருத்தைக்கொண்ட, இதுவும், மனிதன் தன்னைத்தான் இரட்சிக்கவும், பரிசுத்தமாக்கி கொள்ளவும் இயலும் தன்மை கொண்டவனாய் இருக்கிறான் என்று கூறுகிறது. ஒருவன் தன்னுடைய சொந்த விருப்பத்தை கொடுத்து தேவனோடு செயலாற்றுகிறான். இந்த கூட்டுப்பணியில் சுய ஒழுக்கத்திற்கு, கடவுளும், மனிதனும் – அவர்கள், அவர்களுடைய பங்களிப்பை கொடுக்கிறவர்களாய் இருக்கின்றனர். கடவுள், அதற்குண்டான கிருபைகளை கொடுக்கிறவராயும், மனிதன் மீதியான அனைத்தையும் செய்கிறான் என்றும் கூறுகிறது.

செமி-பெலேஜியனிசம் ஒரு பாதி கிறிஸ்தவனாய் மட்டும் இருக்கிறது. இது அனைத்திற்கும் ஒத்துப்போகும் தன்மையான இப்போதனை – இரண்டாம் கவுன்சிலான ஆரஞ்சு (AD 529) கள்ள போதனை என்று கூறி புறக்கணித்தது. இருந்தும், வருத்தமான விஷயம் என்னவென்றால், இத்தவறான போதனை, மனிதனை முக்கியப்படுத்தி போதிக்கும் ஆர்மீனியிச இறையியலிலும், பின்னியியசித்திலும் (Finneyism) இன்றைய நாட்களில் பார்க்கலாம்.

இதற்கு பதிலாக, இதே நான்காம் நூற்றாண்டின் ஆசிரியராக இருந்த அகஸ்டின் (AD 354-430) என்பவர் சத்தியத்தை எடுத்து போதித்தார். இந்த அற்புதமான தலைவர், மனிதனுடைய இரட்சிப்பும், பரிசுத்தமாகுதலுக்குண்டான ஒரே ஆசான் கடவுள் ஒருவரே என்று ஆணித்தரமாக போதித்தார். அவருடைய சகல ஆளுகையின் கிருபையினால், தேவன் தாமே, பாவத்தில் மரித்துப்போன பாவிகளை உயிப்பிக்கிறார் என்று போதித்தார்.

ஒவ்வொரு கிறிஸ்தவனும், பரிசுத்தத்தை நாடுவதற்கு பொறுப்பாளியாய் இருக்கிறான். இருந்தும், தேவன் நம்மில், தேவ பக்தியை உருவாக்க, அவர் கட்டாயமாக, கிரியை செய்ய வேண்டும்.(பிலி 2:13-14). சரியான விதத்தில் புரிந்துக்கொண்டு, தேவன் மட்டும்தான், ஒரு விசுவாசியின் வாழ்வில் உண்மையான சுய – ஒழுக்கத்தை உருவாக்க முடியும் என்று அகஸ்தீனிய போதனை போதிக்கிறது.

 இச்சையடக்கத்தை உருவாக்குகிறவர் யார்?

“இச்சையடக்கம்” என்ற இந்த நல்லொழுக்கம் ஆவியின் கனியாகும். (கலாத்தியர் 5: 22-23), திராட்சை செடியானது, கனிகளை கொடுப்பது போல, இச்சையடக்கம், பரிசுத்த ஆவியானவராலே, உருவாக்கப்படுகிறது. சுய-கட்டுப்பாடு, ஒருபோதும், சுயமாக உருவாகும் காரியம் அல்ல. மாறாக, இது, நமக்குள் இருக்கும் கிருபையின் கிரியை. நாம், மும்முரமாக, அதை பயிற்சி செய்தாலும், நாம் வெறுமெனே இச்சையடக்கம் என்ற கனியை உடையவர்களாய் இருக்கிறோம் ஒழிய, நாம் அதை உருவாக்குகிறவர் அல்ல.

இயேசுவானவர் குறிப்பிடுகிறார், “என்னையல்லாமல், உங்களால் ஒன்றும் செய்ய கூடாது.” (யோவான் 15:5). நம்முடைய சொந்த விருப்பத்தால், கடவுளை பிரியப்படுத்தும்படியான எதையும் நாம் செய்ய முடியாது. தேவனுடைய செயலாற்றும் கிருபையால் மட்டுமே, பாவத்திற்கு எதிராக போய் கொண்டிருக்கும், நமது போரில், நாம் சுய-கட்டுப்பாட்டை கடைபிடிக்க முடியும். இதை, அப்.பவுல், இவ்விதமாக, வலியுறுத்துகிறார். “என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு.” (பிலி 4:13). அதாவது, கிறிஸ்துவே, நம்மில் வல்லமையாய் கிரியை நடப்பிக்க வேண்டும்.

ஒரு மரத்தின் கிளைக்குள் சாறு பாய்ந்து, கனியை உற்பத்தி செய்வது போல, தெய்வீக கிருபை, விசுவாசியை நிரப்ப வேண்டும். அதாவது, சுய-கட்டுப்பாடு  என்ற கனியை உற்பத்தி செய்ய வேண்டும். சுயம், எந்நாளும் ஒழுக்கத்தை உருவாக்க முடியாது. கிறிஸ்தவர்கள், பரிசுத்த ஆவியின் கட்டுப்பாட்டினுள் கீழ் வாழ்வதால் மட்டுமே, அவர்கள் சுய-கட்டுப்பாட்டில் வாழ முடியும்.

கலாத்தியர் 5:22,23 ல், நாம் ஒன்பது விதமான ஆவியின் கனிகளை குறித்து படிக்கிறோம். அக்கனிகளில், ‘இச்சையடக்கம்’ (சுய-ஒழுக்கம்) கடைசியாக வருகிறது. இக்கனி, இறுதியான இடத்தை பெற்றிருப்பத்தின் மூலம், இதற்குரிய, அதி முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பெறுகிறது. உண்மையில், சொல்லப்போனால், இச்சையடக்கம் என்ற  கனியானது, பரிசுத்த ஆவியினால் உண்டாகும் முந்தைய எட்டு குணங்களின் தொகுப்பாகும். இந்த நல்லொழுக்கமானது, ஆவியின் கனிகளாகிய, மற்ற அனைத்து, அம்சங்களை உணரச் செய்கிறது.

சுய ஒழுக்கம் எப்படி இருக்கும்?

அப்.பவுல், கிறிஸ்தவ வாழ்வில், தேவைப்படும் இச்சையடக்கத்தை (சுய-ஒழுக்கம்) ஒரு தடகள பயிற்சி மற்றும் பண்டைய தடகள விளையாட்டுப் போட்டியோடு ஒப்பிடுகிறார். “பந்தயத்திற்கு போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்.” (1 கொரி 9:25). ஒரு ஓட்டப்பந்தய வீரர், பரிசை தட்டிச் செல்வாறென்றால், அவர் தன்னுடைய முழு வாழ்க்கையும், கடுமையான ஒழுக்க கட்டுப்பாட்டுடன் கூடிய பயிற்சியின் கீழ் கொண்டு வர வேண்டும். அந்த ஓட்டப்பந்தய வீரரின் கடுமையான உடற்பயிற்சியானது, அவர் தன்னுடைய தனிப்பட்ட அனைத்து சுதந்திரத்தை தீவிரமாக கட்டுப்படுத்த வேண்டும் என்று கோருகிறது. அவர் வெற்றிபெற வேண்டுமானால், அவர் பல தனிப்பட்ட சுதந்திரங்களை மறுக்க வேண்டும். சுதந்திரம் பெரும்பாலும் அங்கு உள்ள பார்வையாளர்களுக்கே ஒழிய, ஒரு சாம்பிய விளையாட்டு வீரருக்கு அல்ல. சொல்லப்போனால், அவர் சரியான உணவு, போதுமான ஓய்வு, மற்றும் கடினமான பயிற்சிகளைத் தொடர வேண்டும். அவரது, வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட வேண்டும்.

ஆகவே கிறிஸ்தவ வாழ்விலும், இவ்வண்ணமாகவே காணப்படுகிறது. “தேவ பக்திகேதுவாக முயற்சிப் பண்ணு”(1தீமோ 4:7) என்று பவுல் வலியுறுத்துகிறார். பரிசுத்த வாழ்வை தொடர ஒரு விசுவாசியானவன், வேத ரீதியான பிரசங்கம், போதனைகளை கேட்பதிலும், சபை ஆராதனை, திருவிருந்தில் பங்கெடுப்பதிலும், வேதத்தை படிப்பதிலும், தியானிப்பதிலும், ஜெபத்திலும், மற்றும் ஐக்கியத்திலும் கட்டாயம் செயல்படுகிறவனாய் காணப்படவேண்டும். வேண்டுமானால், அவன், பரிசை வெல்ல, பல நியாயமான சந்தோஷங்களை கூட மறுக்க வேண்டும்.

இந்த வகையான சுய-ஒழுக்கம் (இச்சையடக்கம்) ஆவிக்குரிய வெற்றிக்காக, சிறிதும், பயிற்சி செய்யாத அரை மனது கொண்ட கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடிந்து கொள்ளுதலாகவே இருக்கிறது. அவர்கள், அரை குறை விசுவாசத்தை கொண்டு, தான்தோன்றித்தனமான வளரும் விசுவாசிகள். அவர்கள் மெத்தனமான ஆவிக்குரிய போக்கு கொண்ட பெரு வயிற்றுக்கார்கள். அவர்களுடைய வாழ்வில், சுய கட்டுப்பாடு இல்லாததினால், அவர்கள் வாழ்க்கை முறை சுயத்தின் மீது பற்றுக்கொண்டவர்கள். பவுல், மேலும் கூறுகிறார், “ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம் பண்ணேன்.” (1 கொரி 9:26). ஒரு குத்துச்சண்டை வீரர், வளையத்தில், தெளிவாக கவனம் செலுத்திய நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு ஒழுங்குமில்லாத குத்துச்சண்டை வீரர், தனது, எதிரியின் மீது, ஒரு அடியும் விழாமல், காட்டுத்தனமாக குத்துகிறார். அவ்வண்ணமாகவே, ஒரு ஒழுக்கமில்லாத விசுவாசி, பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் பெரும் தோல்விகளை சந்திக்கிறார். மாறாக, ஒரு விசுவாசி, பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், சுய-கட்டுபாட்டுடன் வாழ வேண்டும்.

ஒரு சாம்பிய ஓட்டப்பந்தய வீரர், தனது உடலை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். அப்படியில்லையென்றால், அவர் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். பவுல் இங்கே எச்சரிக்கிறார், “மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கி கீழ் படுத்துகிறேன்.”(வச.27). இங்கு பவுல், நமது சரீர பாவ இச்சைகளை, அடித்து நொறுக்கி ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இல்லையெனில், நாம் பரிசை இழப்போம்.

என்ன விலை?

வேதத்தில், தடை செய்யப்படாததை பின்பற்ற விசுவாசிகளுக்கு, கிறிஸ்துவில் சுதந்திரம் உண்டு. அதே சமயத்தில், நம்மீது ஆதிக்கம் செய்யும்படியான எதையும் அனுமதிக்க முடியாது. வெற்றி எப்பொழுதும், விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் இது பொருந்தும்.

இது, உணவு, பானம், தூக்கம், நேரம், மற்றும் பணம் போன்ற பகுதிகளில், கிறிஸ்தவர்களாகிய நாம், சுய-ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. நாம் ஈடுபடும் பொழுதுபோக்கு போன்ற காரியங்களில், சுய-கட்டுப்பாட்டை அவசியம் கடைபிடிக்க வேண்டும். பரிசை வெல்வதற்கு, எது தடையாக இருந்தாலும், நம்முடைய சுதந்திரம் உட்பட நாம் கட்டுப்படுத்த வேண்டும்.

நாம் சுய-கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டுமென்றால், நம்முடைய வாழ்வின் கட்டுப்பாட்டை இயேசு கிறிஸ்துவினிடத்தில் விட்டு விட வேண்டும். இதுவே, கிறிஸ்தவ வாழ்வின் நோக்கம். நாம் சுய-கட்டுப்பாட்டை  வெல்ல வேண்டுமெனில், நம்மை ஆட்டிப்படைக்கும் சுயத்தை விட்டு விட வேண்டும், பாவத்தை வெற்றி கொள்வதற்கு, மிகவும் அவசியமான இச்சையடக்கத்தை  பயிற்சி செய்ய தேவன் தாமே உதவி செய்வாராக.


Dr. Steven J. Lawson is founder and president of OnePassion Ministries. He is a Ligonier Ministries teaching fellow, director of the doctor of ministry program at The Master’s Seminary, and host of the Institute for Expository Preaching. He has written numerous books, including The Passionate Preaching of Martyn Lloyd-JonesThe Evangelistic Zeal of George WhitefieldJohn Knox: Fearless Faith, and The Moment of Truth

What Is Self-Discipline? – Mar 26,2021 – Dr.Steven Lawson. https://www.ligonier.org/posts/what-self-discipline. Used by permission.

No Response to “சுய-ஒழுக்கம் (இச்சையடக்கம்) என்றால் என்ன? What is Self-Discipline? – Dr.ஸ்டீவன் லாசன்.”

Leave a Comment