ஒரு போதகரின் குணம் – ஜாப் சாங். The Pastor’s Character – Geoff Chang.

Published April 27, 2022 by adming in Pastor's Blog

ஸ்பர்ஜன் அவர்களுக்கு, தனது சபையான மெட்ரோ பாலிடன் டேபர்நேகல்(Metropolitan Tabernacle) மூலம் செயல்படும் பல்வேறு பணிகளில் ஒன்று, போதக கல்லூரி ஆகும். அது அவருடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இருந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மதியம், நீண்ட வாரப் படிப்புக்குப் பிறகு, ஸ்பர்ஜன் போதக ஊழியம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பாடம் எடுப்பது மாணவர்களின் விருப்பமான நேரங்களில் ஒன்றாகும். அவர் பிரசங்கித்த பல தலைப்புகளில், அவர் மிகவும் வலியுறுத்தியது போதகரின் “மேம்பட்ட பக்தியின்”(Eminent Piety) முக்கியத்துவம், அதாவது, அப்போதகரின், குணம்.

பல திறமையான போதகர்கள், பல பெரிய ஊழியர்கள், அவர்கள் தனிப்பட்ட வாழ்விலும், குணத்திலும், வழிதவறி செல்லும் நாட்களில் நாம் இன்று வாழ்கிறோம். அதன் விளைவாக, அனைத்து ஊழியங்களும் வீழ்ச்சியடைகின்றன. 19 ம் நூற்றாண்டிலும் நாம் இந்த நிலைமையை பார்க்கலாம். ஸ்பர்ஜன் அவர்கள், இதை தெளிவாக புரிந்திருந்தார். அதினால்தான், போதகர்களாக விரும்பும் மாணாக்கர்களுடைய வாழ்வில், “மேம்பட்ட பக்தி” யை முதலாவது தகுதியாக வைத்தார். தேவனுடைய வார்த்தையை எடுத்து போதிக்கும், போதகராக உள்ள அனைவரும், தீமோத்தேயுவுக்கு பவுல் கூறும் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும். “உன்னைக்குறித்தும் உபதேசத்தை குறித்தும் எச்சரிக்கையாய் இரு.” இதை தான், ஸ்பர்ஜன் “ஊழியக்காராரின் சுய கண்காணிப்பு” (the minister’s self watch)என்று அழைத்தார்.

ஏன் போதகருடைய குணம் மிக அவசியமாய் இருக்கிறது?

நாம் நம்முடைய சொந்த கருவிகளாக இருக்கிறோம்.

ஸ்பர்ஜன் இவ்விதமாக கூறுகிறார்:

ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில் சொல்லுவோமானால், நாம் நம்முடைய சொந்த கருவிகள். ஆகவே, நம்மை நாமே ஒழுங்காக வைத்திருக்க வேண்டும். நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்பினால், நான் என் சொந்தக் குரலை மட்டுமே பயன்படுத்த முடியும்; ஆகவே, நான் என்னுடைய குரல் திறன்களை பயிற்றுவிக்க வேண்டும். நான் என் சொந்த மூளையால் மட்டுமே இதை நான் சிந்திக்கவும், என் சொந்த இதயத்தால் மட்டுமே இதை நான் உணரவும் முடியுமாதலால், நான் என்னுடைய அறிவு மற்றும் உணர்ச்சி திறன்களை கற்பிக்க  வேண்டும். நான், என்னுடைய சொந்த புதுபிக்கப்பட்ட சுபாவத்தினால் மட்டுமே, ஆத்துமாக்களுக்காக, அழவும், வேதனை படவும் முடியும். அதினால், கிறிஸ்துவில் இருந்த மன உருக்கத்தை, நான் ஜாக்கிரதையாக, காக்க வேண்டும். என்னை கண்காணிப்பதில், நான் புறக்கணித்து, என்னுடைய நூலகத்தை, புத்தகத்தால், நிரப்புவதோ, சமுதாயத்தை ஒழுங்கமைப்பதோ, திட்டங்களை தீட்டுவதோ வீண். ஏனென்றால், புத்தகங்கள், மற்றும் இவ்விதமான அமைப்புகள் அனைத்தும், தொலைவிலிருந்து செயல்படும் என்னுடைய பரிசுத்த அழைப்புக்குண்டான கருவிகள் ஆகும். பரிசுத்த பணிக்கென்று, என்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகியவைகள், எனக்கு அருகாமையில் செயல்படும் கருவிகளாக இருக்கின்றன. என்னுடைய ஆவிக்குரிய திறன்களும், எனது உள் வாழ்க்கையும் என்னுடைய போர்க் கோடாரி மற்றும் போர் ஆயுதங்கள் ஆகும்.”

    வேத வார்த்தையின் ஊழியம் என்று வரும்போது, நாம் சுவிசேஷத்தை, அறிவிப்பதற்கான கருவியாக இருக்கிறோம். நாமே நற்செய்தியாக இருக்கிறோம் என்று சொல்லவில்லை. ஆம், நாம் களிமண் ஜாடிகள், சுவிசேஷத்தின் பொக்கிஷத்தை சுமக்கிறோம். ஆனால் அதே சமயம், நம் வாழ்க்கையை எப்படி நடத்துகிறோம் என்பதும் முக்கியம். பவுல், தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார்,

2தீமோ2:20 “ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். 21. ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.”

ஒரு திறமையான ஊழியரை உருவாக்க வேண்டும் என்று நாம் நினைக்கும் மற்ற எல்லா விஷயங்களையும் பற்றி யோசிப்பது சுவாரஸ்யமானது: சமீபத்திய லேப்டாப், ஒரு பெரிய போதகர் நூலகம், சக்திவாய்ந்த பைபிள் படிப்பு மென்பொருள் கருவி, பிரசங்க விளக்கப்படங்களுக்கு உதவும் ஆதாரங்கள், இன்னும் அநேகம் உண்டு. தொடர்ந்து சொல்லிக்கொண்டே போகலாம். லைஃப்வே(Lifeway) கிராஸ்வே (Crossway) லோகோஸ்க்கள்(Logos) போன்ற பைபிள் மென்பொருள் அனைத்தும் உங்களை வாங்க தூண்டும் கருவிகள். இவ்விதமான போதக சம்பந்தமான அனைத்து கருவிகளுக்கு  பஞ்சமே இல்லை. ஒரு வகையில், இவை அனைத்தும் நன்றாக இருக்கிறது. ஆனால் நாளின் முடிவில், கடவுளுடைய வார்த்தையின் ஒரு ஊழியராக, அந்த விஷயங்கள் சுவிசேஷத்தை சுமப்பவை அல்ல. நீயே சுவிசேஷத்தின் பாத்திரம், கருவி. ஆயிரக்கணக்கான புத்தகங்களை வைத்திருக்கும் ஒரு போதகராக, ஸ்பர்ஜன் அவர்கள், இறுதியில், குணமும், வாழ்க்கையுமே முக்கியம் என்று நமக்கு நினைவூட்டுகிறார்.

ரொபர்ட் முர்ரே மெச்சின் (Robert Murray M’Cheyne)  அவர்கள், ஜெர்மன் இறையியல் படிக்க சென்ற தன்னுடைய ஊழியக்காரன் நண்பணுக்கு எழுதுகிறார்,


“நீ ஜெர்மன் தேசத்திற்கு பொருந்திபோக அதிகமாக பிரயாசப்படுவாய் என்று எனக்குத் தெரியும், ஆனால் உள் மனிதனின் சுபாவத்தை மறந்துவிடாதே – அதாவது இதயம். குதிரைப்படை அதிகாரி எவ்வளவு விடாமுயற்சியுடன் தனது கத்தியை சுத்தமாகவும் கூர்மையாகவும் வைத்திருக்கிறார்; ஒவ்வொரு கறையையும் அவர் மிகுந்த கவனத்துடன் நீக்குகிறார். நீ தேவனுடைய பட்டயம், அவருடைய கருவி என்பதை நினைவில் வைத்துக்கொள் –  நீ அவருடைய பெயரை சுமக்க அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரம் என்று நான் நம்புகிறேன். பெரிதான அளவில் சொல்லுவோமானால், கருவியின் தூய்மை மற்றும் முழுமைக்கு ஏற்ப, வெற்றி இருக்கும். பிரமாதமான திறமைகளை தேவன் அதிகமாய் ஆசீர்வதிப்பதில்லை, மாறாக, அவருடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாய் இருப்பவர்களே அதிகமாய் ஆசீர்வதிக்கிறார். ஒரு பரிசுத்தமான ஊழியன் தேவனுடைய கையில் ஒரு பயங்கரமான ஆயுதம்.”

      நாம் அனைவரும் இறையியல், வேதம் மற்றும் சரித்திரத்தை வாழ்நாள் முழுவதும் படிக்கும் மாணவர்களாக இருக்க விரும்புகிறோம். வாசிப்பதற்கும், படிப்பதற்கும், எழுதுவதற்கும் நம்மையே அர்ப்பணிக்க நாம் முயல்கிறோம்… ஆனால் இதையெல்லாம் நீ செய்யும்போது, ​​”உள் மனிதனின் சுபாவத்தை மறந்துவிடாதே.” உன்னையும், உன் இதயத்தையும், உன் ஆத்துமாவையும், கிறிஸ்துவுடனான உன் சொந்த நெருக்கத்தையும் ஒரு குதிரைப்படை அதிகாரி தனது கத்தியை எவ்வாறு கவனித்துக்கொள்கிறாறோ அவ்வாறு கவனித்துக் கொள்.

ஊழியத்தில் குணத்தின் தாக்கம்.

ஒருவனுடைய ஊழியத்தில் அவனுடைய குணத்தின் தாக்கம் எவ்வளவாய் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது. ஸ்பர்ஜன் இதைகுறித்து இவ்விதமாக எழுதுகிறார்.

ஈயக் குழாய்கள் வழியாக தண்ணீர் பாயும் போது அடிக்கடி ஏற்படும் தீங்கான விளைவுகளை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்; அவ்வண்ணமாகவே, சுவிசேஷமானது, ஆவிக்குரிய ஆரோக்கியமற்ற நபர்கள் வழியாக செல்லும்போது, அதை கேட்கிற நபர்களும் பாதிக்கபடுகிற அளவிற்கு, சீரழிந்து போகலாம். தெய்வ பயமில்லாத மனிதர்கள், கால்வினிச போதனைகளை கையாளும்போது, அப்போதனையே, தீய போதனையாக மாறிவிடும் என்று அஞ்சப்படுகிறது.

ஈயக் குழாய்கள் வழியாகப் பாயும் தண்ணீரைப் போல, ஒரு மோசமான குணம் கொண்ட ஒரு போதகர் உண்மையில் அவர் பிரசங்கிக்கும் செய்திக்கு தீங்கு விளைவிப்பார். அது அவருடைய செய்தியை மாத்திரம் பாதிக்காது. மாறாக, அது அவருக்கு எதிராக செயல்படும். இது சாத்தானுடைய தந்திரத்தின் ஒரு பகுதி. இதிலிருந்து கள்ள உபதேச காரர்கள் எழும்புவது மாத்திரமல்ல, உலகபிரகாரமான பிரசங்கிகளும் எழும்புவார்கள். சிலர், சபையிலிருந்து எழும்பி, உண்மையாகவும், வல்லமையாகவும் சுவிசேஷத்தை பிரசங்கிக்கலாம். ஆனால், அவர்களுடைய வாழ்க்கை ஒழுக்க கேடாய் இருக்குமென்றால், பவுல், கூறும் வண்ணமாக, “அவர்கள் தேவ பக்தியின் வேஷத்தை தரித்து, அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாய் இருப்பார்கள்.”

ஸ்பர்ஜன், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரம்(clockwork ministers) உள்ள ஊழியர்களை குறித்து, தன் மாணாக்கர்களிடம் எச்சரிக்கிறார். அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரம்தான் கிறிஸ்தவர்களாய் இருப்பார்கள், கிறிஸ்துவை சேவிப்பார்கள்.

     “இங்கே, செய்யப்பட வேண்டியவைகளை செய்யாமல் விடுகிற பாவங்களை (sins of commission) மாத்திரம் நான் எச்சரிக்காமல், செய்யப்படகூடாதவைகளை செய்கிற பாவங்களை (sins of omission) குறித்தும் எச்சரிக்கிறேன். அனேக பிரசங்கிகள், பிரசங்க பீடத்திலிருந்து இறங்கின உடனே, தேவனை சேவிக்க மறந்து விடுகிறவர்களாய், அவர்களுடைய வாழ்க்கை, எதிமாறானதாய் அனேக சமயங்களில் காணப்படுகிறது. எனக்கு அருமையான நண்பர்களே, இவ்விதமான போக்கை வெறுத்துவிடுங்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரம் ஊழியம் செய்யும் ஊழியர்கள்,  பிரசங்க பீடத்தை விட்டு வெளியே வந்த உடனே, தேவனுடைய நிலைத்திருக்கும் கிருபையில் தங்காதபடி, தற்காலிகமான ஆதிக்கத்தினால் தாக்கப்பட்டு, ஊழியம் செய்கின்றனர். ஆனால், உண்மையான ஊழியர்கள் எப்போதும் ஊழியர்களாகவே இருக்கின்றனர்.”

“நான் சொல்லுவதை மாத்திரம் செய், நான் செய்வதை செய்யாதே” என்பது எவ்வாறு பிள்ளை வளர்ப்பிக்கு உதவாதோ, அவ்வாறு போதக பணிக்கும் உதவாது. ஆகையால், பிறரின் மீது அன்பு செலுத்துவதின் முக்கியத்துவத்தை, குறித்து, வல்லமையாகவும், பிரமாதமாகவும், பிரசங்கிக்கலாம். ஆனால், பிரசங்கிக்கிற உன் வாழ்வில் அது இல்லையென்றால், உன்னை உன் சபையார் ஒரு பொருட்டாகவே எண்ண மாட்டார்கள். அதே போல, பாவத்தின் அகோரத்தை குறித்தும், தேவனுடைய கிருபையின் மகத்துவத்தை குறித்தும், நீ மிக பிரமாதமாக பிரசங்கிக்கலாம். ஆனால், உன் வாழ்வில், அதை குறித்ததான தாக்கத்தை பார்க்கவில்லை என்றால், உன் வாழ்க்கை, உண்மையில் அந்த பிரசங்கத்தை குறைத்து மதிப்பிடுவதற்கு செய்யும்.   

 ஸ்பர்ஜன் இங்கு மறுபடியும் கூறுகிறார்,

“செயல்கள் வார்த்தைகளை விட சத்தமாக பேசுவது போல, ஒரு நோய்வாய்ப்பட்ட வாழ்க்கை மிகவும் பிரமாதமாக, அற்புதமாக பேசும்  ஊழியத்தின் குரலை திறம்பட மூழ்கடித்துவிடும்… நமது உண்மையான கட்டிடம் நம் கைகளால் செய்யப்பட வேண்டும்; நம்முடைய வார்த்தையை விட, நம்முடைய குணம் அதிகம் பேச வேண்டும்.”

இங்கு ஒரு கொள்கை இருக்கிறது. ஒரு சபையானது, பொதுவாக அதினுடைய போதகரின் எடுத்துக்காட்டை பின்பற்றும். போதகர்கள், அவர்களுடைய போதனை மற்றும் எடுத்துக்காட்டின் மூலமாகவும், அவர்களுடைய சபையை சரியான பாதையில் வைப்பதற்கு, பெரிதான விதத்தில் பங்களிக்கிறார்கள். போதகர் எங்கெல்லாம் தனது வைராக்கியத்தை காண்பிக்கிறாரோ, அங்கெல்லாம், சபையும் பின்தொடரும். பொதுவான விதிமுறை என்னவென்றால், சபையில், போதகர் , தேவனுடைய வார்த்தையை படிப்பதிலும், போதிப்பதிலும் தங்களையே ஒப்புக்கொடுக்கிறவர்களாய் இருப்பதினால், அவர், மேலான ஆவிக்குரிய நபராக கருதப்படுவர். அதாவது, நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பதில் இருக்கிறது. ஆம், ‘மேம்பட்ட பக்தி’ கொண்ட போதகர்களே நமக்கு வேண்டும்.

நாம் இதை ஸ்பர்ஜனுடைய சொந்த ஊழியத்திலேயே பார்க்கலாம். ஒரே ஒரு மைய கருத்து, அவருடைய பிரசங்கத்திலே மறுபடியும்,மறுபடியும், பார்ப்பது என்னவென்றால், கிறிஸ்துவுக்கு பணி செய்வதே ஆகும். அவர் ஞானஸ்நானம் பெற்ற நாள் முதல், ஸ்பர்ஜன், கிறிஸ்துவை பிரசங்கிப்பதும், கிறிஸ்துவுக்காக வாழ்வதுமே, தன் நேரத்தை செலவழித்தார். காரணம், அவர், தேவனுடைய தயவை பெற முயற்சிக்கிறவராய் அல்ல, மாறாக கிறிஸ்துவில் தேவனுடைய கிருபையை உணர்ந்தவராய் செயல்பட்டார். அவர், ஒரு போதகராக, தன்னுடைய சபை மக்களை, தலைவனாகிய, கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்க அழைத்தார்.

இருந்தபோதிலும், சபை மக்கள் இச்செய்தியை கேட்டது மாத்திரமல்ல, அதை அவர்களுடைய போதருடைய வாழ்விலும் கண்டார்கள். அவர்கள், ஏறக்குறைய, வாரத்தில் 14 முறை அவருடைய பிரசங்கத்தை கேட்டார்கள்.  பிறகு அவர் ஜெபக்கூட்டத்தை நடத்துவதும், சபை கூட்டங்களை நடத்துவதும், பிறகு அங்கத்தினர் விண்ணப்பங்களை சரிபார்ப்பதும், மெட்ரோபொலிட்டன் சபை கட்டுமான பணிக்கு தொகை சேகரிப்பதும், தனது பிரசங்கத்தை வெளியிடுவதில் ஆயத்தப்படுவதும், பத்திரிக்கைக்கு, கட்டுரைகள், புத்தகங்கள் எழுதுவதும், அவர் நடத்தின அநாதை இல்லங்களை சந்திப்பதிலும் தனது நேரத்தை செலவழித்தார். இதையெல்லாம், சபையார், தனது போதகர், கடந்து வந்த பல சோர்வுகள், வியாதிகள், முடக்கு வாத வலி போன்ற பல்வேறு போராட்டங்கள் மத்தியியும் அவர் கிறிஸ்துவுக்காக உழைத்ததை கவனித்து வந்தனர்.

உன்னுடைய போதகர், கிறிஸ்துவுக்காக தன்னையே அர்ப்பணித்து வாழுவதை பார்க்கும்போது, உனக்குள் ஒருவித உத்வேகத்தை பார்க்கலாம். அவர் பிரசங்கித்த அனைத்து பிரசங்கங்களையும் விட, அவர்களின் போதகர் வாரந்தோறும் ஊழியத்தில் தனது வாழ்க்கையை ஊற்றியதற்கான குறிப்பிடத்தக்க மற்றும் மகத்துவமான அவரது முன்மாதிரியைப் பின்பற்ற அவரது மக்களைத் தூண்டியது என்று நான் நினைக்கிறேன். ஆம், அச்சபையிலிருந்து, 66 தொண்டு நற்செய்தி ஊழியங்கள் ஆரம்பிக்கப்பட்டது. அவை அனைத்தும், அச்சபையினராலே ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் இயேசுவுக்காக பணிசெய்ய தங்கள் பங்களிப்பை கொடுத்தனர்.

முடிவுரை

எனவே உன்னையும், உன் உபதேசத்தை குறித்தும் எச்சரிக்கையாயிரு. ஆம், தேவனுடைய வார்த்தை வல்லமை வாய்ந்தது, அந்த வார்த்தையே கிரியை செய்கிறது. ஆனால் தேவன் ஒரு பிரசங்கியை அழைக்கும்போது, ​​அவர் முழு நபரையே, அவ்வார்த்தைக்கு ஊழியம் செய்யவும், அந்நபரை கொண்டு அவ்வார்த்தையை மற்றவர்களுக்கு பகிரவும் செய்கிறார். அதினால், நீ பேசும் உபதேசத்தை மட்டுமல்ல, நீ வாழும் வாழ்க்கையையும் உள்ளடக்கியது.

The Pastor’s Character – March 1,2022 – Dr.Geoff Chang,  https://www.spurgeon.org/resource-library/blog-entries/the-pastors-character/  Used by permission.

Geoff Chang serves as Assistant Professor of Church History and Historical Theology and the Curator of the Spurgeon Library. He is a graduate of The University of Texas at Austin (B.B.A.), The Southern Baptist Theological Seminary (M.Div.). Most recently, he completed his Ph.D. at Midwestern Baptist Theological Seminary, where he wrote his dissertation on Charles H. Spurgeon’s ecclesiology. 

No Response to “ஒரு போதகரின் குணம் – ஜாப் சாங். The Pastor’s Character – Geoff Chang.”

Leave a Comment