உன்னுடைய ஆவிக்குரிய வாழ்வில், ஜெபம் எந்த இடத்தில் இருக்கிறது? நம்முடைய வாழ்வில் அதற்கு என்னவிதமான முக்கியத்துவத்தை கொண்டிருக்கிறோம்? உங்கள் அனைவருக்கும் நான் விடுக்கும் கேள்வி இதுவே. வேதத்தை நன்கு அறிந்தவரும், அதன் கோட்பாடு மற்றும் இறையியலைப் பற்றிய அறிவும் உள்ள மனிதருக்கு அது எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு இந்த கேள்வி அனைவருக்கும் அவசியம். நம்முடைய வாழ்வில் ஜெபம் எந்த இடத்தை கொண்டுள்ளது? எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது? ஜெபம் இல்லையென்றால், நாம் சோர்வடைந்து, வீழ்ந்து விடுவோம் என்று உணர்கிறோமா? கிறிஸ்தவர்களாய், நாம் எங்கு நிற்கிறோம் என்பதை நம்முடைய ஜெப வாழ்க்கையே தீர்மானிக்கிறது. வேத அறிவு மற்றும் அதை விளங்கி கொள்ளுதலைவிட, ஜெபம் மிக முக்கியமானதாய் இருக்கிறது. இங்கே, நான் வேத அறிவை வளர்த்துக்கொள்ள கூடாது நான் சொல்லவில்லை. என்னுடைய வாழ்நாளில், சத்தியத்தை கற்றுக்கொள்வதிலும், அதை புரிந்து கொள்வதிலும் அனேக நேரங்கள் செலவழித்ததுண்டு. இதுவும் முக்கியம்தான். ஆனால், ஒன்றே ஒன்று, எல்லாவற்றை […]
Read More