இன்னும் அற்புதமானது வேறு எங்கே இருக்கிறது? இந்த நவீன உலகத்தில், இந்த “மிகப்பெரிய இரட்சிப்பு” போன்ற அற்புதமானது வேறு எதுவும் இல்லை. (எபி 2:3) பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்ற அறிவுக்கு ஒப்பிடத்தக்கது எதுவாக இருக்கும்? இன்று இரவில் நான் இறந்தாலும் பரவாயில்லை என்று தெரிந்தும், நிம்மதியாக படுத்து உறங்குவதை விட அற்புதம் வேறு எதுவாக இருக்கும்? நான் கடவுளுடைய கோபாக்கினையிளிருந்து தப்பிக்கப்பட்டு, நித்தியமான வாழ்வை பெற்ற நிச்சயத்தை உடையவனாய் இருக்கிறபடியால், நான் இன்றைக்கு இறந்தாலும், அடுத்த நொடி பொழுதில், அவருடைய பிள்ளையாக, பரலோகத்தில் விழித்துக்கொள்கிறவனாய் இருப்பேன் என்ற ஆழமான நிச்சயத்தை பெற்ற அற்புதத்தை காட்டிலும் வேறு எதுவாக இருக்கும்? ஓ, கிறிஸ்துவின் ஐக்கியம் எவ்வளவு அற்புதமானது. ஆனால், இன்னும் அற்புதமான ஒன்று இருக்கிறது – அதுதான் வரவிருக்கும் உலகம். இந்த உலகம் அழிவதற்குகேதுவான உலகம். இது ஒரு பாவம் நிறைந்த உலகம். இப்படிப்பட்ட உலகத்தை மேம்படுத்த, புதிய ஏற்பாடு எதுவும் சொல்லவில்லை. […]
Read More