சீர்திருத்த இறையியல்: எல்லா மகிமையும் தேவன் ஒருவருக்கே – ஜாஷ்வா மில்ஸ். Reformation Theology: Soli Deo Gloria – Joshua Mills.

Published October 28, 2021 by adming in Pastor's Blog

சோலி டியோ க்ளோரியா (Soli Deo Gloria) – எல்லா மகிமையும் தேவன் ஒருவருக்கே – என்ற முழக்கம் சீர்திருத்தம் ஏற்பட்ட நாள் முதல் வந்ததாகும். அவருடைய கிருபையின் ஐஸ்வரியத்தின்படியே, நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். இதுவே கிறிஸ்தவத்தின் உயிர் நாடியாக இருக்கிறது. இவை அனைத்தும், தேவனுடைய மகிமைக்கேதுவாக, நடத்தி செல்லுகிறது. வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை, பின்வரும் சரியான கேள்வியை கேட்கிறது. மனிதன் படைக்கப்பட்டதின் பிரதான நோக்கம் என்ன? வேறு விதத்தில் கேட்போமானால், மனிதன் எதற்காக படைக்கப்பட்டான்? அவனுடைய வாழ்வின் நோக்கம் என்ன? இதற்குண்டான பதில்: மனிதனின் பிரதான நோக்கம், தேவனை மகிமைப்படுத்தவும், அவரில் என்றென்றும் மகிழ்ச்சியாய் இருப்பதுமே ஆகும். (ரோமர் 11:36).

கிறிஸ்துவின் இரத்தத்தினாலே, மீட்கப்பட்ட நாம் ஒவ்வொருத்தரும், , ஒரே ஒரு வேட்கையோடு வாழ வேண்டும்:  அதுவே, “எல்லா மகிமையும் தேவன் ஒருவருக்கே”. நம்முடைய அனைத்து செயலிலிருந்து வெளிப்படுவது : தேவன் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக! என்பதே. நம்முடைய வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும், காணப்படவேண்டிய நோக்கம், தேவன் ஒருவருக்கே, மகிமையும், கனத்தையும் கொண்டு வருவது ஆகும். நம்முடைய ஒவ்வொரு நினைவும், ஒவ்வொரு செயலும், அந்த கடவுள் ஒருவரையே மகிமைப்படுத்துகிறதாய் இருக்க வேண்டும்.

இந்த மகத்துவமான காரியத்தை அணுகுவதற்கு, இன்றைக்கு பல வழிகள் உள்ளன. இதை குறித்து எழுதுவோமானால், எழுதிக்கொண்டே இருக்கலாம். “தேவன் ஒருவருக்கே மகிமை” என்ற முழக்கத்திற்கு, நான் வேதத்திலிருந்து, பல காரியங்களை எடுத்து பேசலாம். இருந்தாலும், இந்த ஆக்கத்தின் நோக்கம், ஒரு ஆத்துமாவின் நடைமுறை வாழ்விற்கு பிரயோஜனபடுகிறதாய் இருக்க வேண்டும். இந்த ஆக்கத்தை படிக்கிற ஒவ்வொரு வாசகரும், வேதத்தின் சாராம்சமானது ‘தேவன் ஒருவருக்கே மகிமை’ என்று ஆழமாய் உணர்ந்து, அறிந்திருப்பர் என்று நம்புகிறேன். இந்த காரணத்தினால், நான் பின்வரும் கேள்விகளை எழுப்ப ஆசைபடுகிறேன். அவருடைய கிருபையினாலும், விசுவாசத்தினாலும், கிறிஸ்துவினால் மட்டுமே, மீட்கப்பட்ட கிறிஸ்தவர்களாய் நாம், தேவனுக்கு மகிமையாய் எப்படி வாழுகிறோம்?  தொமஸ் வாட்சன் எழுதின A Body of Divinity என்ற புத்தகத்திலிருந்து, நமக்கு உதவும் மூன்று புத்திமதிகளை கற்றுக்கொள்ள இருக்கிறோம்.

பணியில் திருப்தி

இந்த சமூக ஊடக காலத்தில், ஒரு சோதனையானது, நம்முடைய சபை வாழ்க்கையை எப்பொழுதும் பாதிக்கிறதாய் இருக்கிறது. அது என்னவென்றால், நாம் ஆண்டவருக்கு கொடுக்கும் நம்முடைய பணியில் காணப்படும் ‘அதிருப்தி’ ஆகும். சமூக வலை தளங்களில், பலர் செய்வதை பார்த்துவிட்டு, உடனே நீ, செய்யவேண்டிய அளவு செய்யவில்லை என்று எண்ணுவதாகும்.  ஒரு பெரிய சபையில், போதகர், பிரசங்கிப்பதை கேட்கிறாய். உன் சபையில், அன்பான சகோதரி செய்யும் உபசரிப்பை பார்க்கிறாய். உடனே பொறாமை என்ற சோதனை வந்து விடுகிறது. உடனே அவர்களை பார்த்தும், அவர்களோடும் ஒப்பிட்டு உன்னை நீயே மதிப்பிட்டு கொள்கிறாய். அதினால், கசப்பும், சோர்வும் வந்து விடுகிறது. இவ்விதமாகவா நாம் செயல்படுவது? இல்லவே இல்லை.

நாம் தேவனுக்கு மகிமையாய் எவ்வாறு வாழ்வது? இதை குறித்து தொமஸ் வாட்சன் எழுதுகிறார்:

“நம்மைவிட, மற்றவர்களிடத்தில் காணப்படும் திறமைகளும் தாலந்துகளும், தேவனுடைய நாமத்தை மகிமைப்படுகிறதாய் இருக்கும்பொழுது, நாம் அதினால்  திருப்தியும், சந்தோஷமும் பெற்றால்,  அவருடைய நாமத்தை மகிமைபடுத்துகிற குறிக்கோள் கொண்டவர்களாய் இருப்போம். இதினால், அவருடைய மகிமை உயர்த்தப்படுகிறதாய் இருக்கிறது. தன்னுடைய இருதயத்தில், கடவுளை கொண்டிருக்கிறவன், அவனுடைய நோக்கத்தில் கடவுளுடைய மகிமையை கொண்டிருப்பவன், கடவுள் மாத்திரமே உயர்த்தப்பட வேண்டும் என்று வாஞ்சிப்பான். நீதியின் சூரியன் பிரகாசிப்பதற்கு, என்னுடைய விளக்கு அனையட்டுமே!”

கடவுளுடைய பராமரிப்பில் திருப்தி.

இன்றைய நாட்களில் காணப்படும், பல்வேறு சூழ்நிலைகளை பார்த்து. திகைத்துப்போய் நிற்கிறாயா? கடந்த வருடத்தில், நீ போட்ட திட்டங்கள், நிறைவேறாமல் போனதினால், சோர்வுற்று காணப்படுகிறாயா? உன்னுடைய எதிர்கால நினைவுகளை பார்க்கும்பொழுது, உனக்கு சாதகமாக எதுவும் நிகழாத வண்ணம் இருக்கிறதா? உடனே இவ்விதமாக நீ சொல்ல ஆரம்பித்து விடலாம். “நான் அதையோ, இதையோ பெற்றிருந்திருப்பேனென்றால், நல்லாதிருக்கும்.” நம்முடைய ஒவ்வொரு நாள், நிகழ்வுகளும், நம்முடைய அன்பின் பிதாவின் கரத்தை கொண்டு நிகழ்கிறது என்று அறிந்திருந்தாலும், நம்முடைய நடைமுறை வாழ்வில் மறந்துவிடுகிறோம். கர்த்தருடைய பராமரிப்பின் கீழ், நாம் கற்றுக்கொள்ளும் திருப்தியான மனப்பான்மையானது, நம் ஆண்டவரை மகிமைப்படுத்துகிறதாய் இருக்கும். தொமஸ் வாட்சன் இவ்விதமாக எழுதுகிறார்.

“கர்த்தருடைய பராமரிப்பானது, நம்மை எங்கே வைத்துள்ளதோ, அங்கே நாம் திருப்தியாய் இருக்கும்போது, நாம் தேவனை மகிமை படுத்துகிறோம். தேவன் நம்மை வடிவமைக்கும் விஷயத்தில், நாம் திருப்தியாய் இருக்கும்போது, சர்வ ஞானமுள்ள தேவனை மகிமைப்படுத்துகிறவர்களாய் இருப்போம். தேவன் தாமே என்னை இந்த நிலையில் வைத்திருக்கிறார். அவருக்கு சித்தமானால், என்னை உயர்த்தி இருக்கலாம். அனால், அது எனக்கு ஒருவேளை, பிசாசின் கன்னியில் சிக்குவதற்கு வாய்ப்பாக கூட இருக்கலாம். ஆகவே, இதை, அவருடைய அனந்த ஞானத்தினாலும், அன்பினாலும் எனக்கு செய்திருக்கிறார். ஆதலால், கர்த்தர், அனுமத்திதிருக்கிற இந்த சூழ்நிலையில், திருப்தியோடு அமர்ந்திருப்பேன். இது நிச்சயமாக தேவனை மகிமைப்படுத்துகிறதாய் இருக்கிறது.”

ஒரே ஒரு வேட்கையினால் ஆளப்படுதல்:

உன்னுடைய அடக்க ஆராதனையில், ஒருவர், உன்னை குறித்து, ஒரே ஒரு வரி சொல்லுவாறென்றால், என்ன சொல்லுவார்? நீ பின்பற்றிபோன நிலையற்ற, காரியங்களை குறித்து, விவரிப்பாரா? உன்னுடைய சுய லாபத்திற்காக, நீ பின்பற்றிபோன இந்த உலக சந்தோஷங்களை குறித்து, சொல்லுவாரா? அல்லது தேவனின் மகிமைக்கென்று வாழ்ந்த ஆண் – பெண் என்று உன்னைக்குறித்து சொல்லுவார்களா? ஆம், அவ்வப்பொழுது, நாம் இதை குறித்து, ஆராய்ந்து பார்க்க வேண்டும். நான் என்னுடைய மனைவிக்கு, என்னுடைய பிள்ளைகளுக்கு, பேரப்பிள்ளைகளுக்கு, என்ன ஒரு நிரந்திரமான தாக்கத்தை விட்டுச் செல்வேன்? என்று நம்மை நாமே கேள்வி எழுப்பிக்கொள்வோம்.

ஆம், ஆண்களாக, பெண்களாக, தேவனுக்காக மட்டும் வாழ்ந்தோம் என்று  நாம் மற்றவர்களால் அறியப்பட வேண்டும். தொமஸ் வாட்சன் இவ்விதமாக முடிக்கிறார்.

“நாம் தேவனுக்காக வாழும்போது, தேவனை மகிமைப்படுத்துகிறோம். (2 கொரி 5:15) நாம், அவருக்கென்று, நம்மை நாமே அர்பணித்து, அவருடைய பணியை செய்யும்பொழுது, நாம் அவருக்கு வாழுகிறோம். கடவுள் இந்த உலகத்தில் நம்மை அனுப்பியிருக்கிறார், எப்படியாக, ஒரு வியாபாரி, தன்னுடைய கப்பலை வியாபாரத்திற்காக கடல் கடந்து, அனுப்புவது போல், தேவன் நம்மை இந்த உலகத்திற்குள் அனுப்பியிருக்கிறார்.  நாம் அவருடைய விருப்பத்தின்படி, வியாபாரம் செய்கிறவர்களாயும், அவருடைய சுவிசேஷத்தை பரப்புகிறவர்களாயும் இருப்போமாயின், அவருக்காக வாழுகிறவர்களாய் இருப்போம். கடவுள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தாலந்தை கொடுத்திருக்கிறார். ஒருவன் அதை புதைத்து வைக்காமல், கர்த்தருக்கென்று பயன்படுத்துவானென்றால், அவன் கர்த்தருக்காக வாழுகிறான். பவுல் இங்கே மூன்று விருப்பங்களை கொண்டிருந்தார், அவை அனைத்தும் கிறிஸ்துவை பற்றினதாகவே இருந்தது. அவர், கிறிஸ்துவில் காணப்பட வேண்டும், கிறிஸ்துவோடு இருக்க வேண்டும், கிறிஸ்துவை மகிமைபடுத்தவேண்டும் என்பதே.”

கடைசியாக, நான் உங்களிடம் மறுபடியும் சில கேள்விகளை கேட்க ஆசைபடுகிறேன். 

“தேவன் ஒருவருக்கே மகிமை” (Soli Deo Gloria) என்ற முழக்கம் உங்கள் வாழ்க்கையின் நோக்கமாய் இருக்கிறதா? தேவன் ஒருவருக்கே மகிமையை கொண்டு சேர்க்கிற நபராய் இருக்கிறீர்களா? அல்லது கடவுளை நீங்கள் அறிந்திருக்கிறவர்களாய் இருக்கிறீர்களா? உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதா? உங்களுடைய பாவங்களை மன்னிக்க ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே என்று விசுவாசிக்கிறீர்களா? பவுல் இவ்விதமாக 2 கொரி 5:10 ல் எச்சரிக்கிறார். “ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.” தேவன் தாமே, நித்தியத்தின் பார்வையில் வாழுவதற்கு, உதவி செய்வாராக! அவருக்கே அனைத்து மகிமையும் உரித்தாகுவதாக!

Joshua J. Mills was born and raised in the Greater Toronto area. He is married to his best friend Kyla, has a Masters of Divinity from Toronto Baptist Seminary, and ministers at Trinity Baptist Church and Toronto.

This article was first published at Servants of Grace. Please go here  https://servantsofgrace.org/reformation-theology-soli-deo-gloria/  to view the original article. Used by permission.

No Response to “சீர்திருத்த இறையியல்: எல்லா மகிமையும் தேவன் ஒருவருக்கே – ஜாஷ்வா மில்ஸ். Reformation Theology: Soli Deo Gloria – Joshua Mills.”

Leave a Comment