போதகரின் தனிப்பட்ட ஜெபம் – ஜாப் சாங். The Pastor’s Private Prayer – Geoff Chang.

Published June 30, 2022 by adming in Pastor's Blog

போதகரின் குணத்தை பற்றிய இந்தத் தொடரில் இதுவரை, போதகரின் பக்தி மற்றும் அவரது ஊழியத்தின் மீது போதகரின் பரிசுத்தத்தின் பங்கைக் கருத்தில் கொண்டோம். அந்த கட்டுரைகள் பெரும்பாலும் எச்சரிக்கையாக இருந்தன, ஊழியத்தில் வரும் குறிப்பிட்ட சோதனைகளுக்கு எதிராக போதகர்களை எச்சரித்தன. ஆனால் போதக குணத்தில் வளர ஒரு போதகர் நேர்மறையாக எதை வளர்க்க வேண்டும்? ஸ்பர்ஜனின் முதல் பதில், போதகரின் தனிப்பட்ட ஜெபத்தில் வெளிப்படுத்தும், கிறிஸ்துவுடன் கூடிய ஐக்கியத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை கொண்டிருப்பதே ஆகும்.

பிரச்சனை : ஊழியத்தில் அதிகாரப்போக்கு

ஒரு ஊழியன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்று, சம்பிரதாயம் அல்லது அதிகாரப்போக்கு என்று ஸ்பர்ஜன்  அழைக்கிறார். அவர் சொல்லுவதை இங்கு கவனியுங்கள்:

  “ஒரு ஊழியன் சந்திக்கக்கூடிய மிக மோசமான சோதனை, ஒரு அதிகாரபோக்குள்ள நடவடிக்கையின்படி செய்வதாகும். ஒரு அதிகாரப்போக்கு கொண்ட ஊழியனாக கடமைக்கென்று வேத வாசிப்பது, அவ்வண்ணமாக ஜெபிப்பது, அனைத்து ஆவிக்குரிய காரியங்களை தனிப்பட்ட விதத்தில் எடுத்துக்கொள்ளாமல், ஊழியன் என்ற அதிகாரத்தில் செய்வதினால், அவனுடைய தனிப்பட்ட விசுவாசமும், மனந்திரும்புதலையும் இழப்பது மிகப் பெரிய நஷ்டம்.

நான் அதிகாரத்தன்மை கொண்ட ஊழியத்தை வெறுக்கிறேன், ஆனால், பல சமயங்களில், அது என்னுடைய வாழ்க்கையில், உள்ளே வருவதை காண்கிறேன். சிலர் பிரசங்க பீடத்தில் ஏறினவுடனே, சக மனிதர்களை போல உணராமல் இருப்பர். நான் விரும்புவது, பாவிகளுக்கு ஒரு பாவியாய்,கிருபையினால், மீட்கப்பட்ட பாவியாய், பாவிகளில் பிரதான பாவியான எனக்கு, பரிசுத்தவான்களில் மிகச் சிறியவர்களை விட சிறியவனாய் இருக்கிற எனக்கு, கிறிஸ்து என்மேல் காண்பித்த அன்பை குறித்து, பிரசங்கிக்கவே விரும்புகிறேன். சந்தேகமேயில்லை, உங்கள் பிரசங்க புத்தகத்தை உங்களுடன் எடுத்துச் சென்றவுடன், ஒரு மிஷினெறி போல எண்ணம் உண்டாகிறது, அதே வேளை, தேவனுடைய கிருபையினால் தான் ஒரு இரட்சிக்கப்பட்ட பாவி என்று உணருவதில்லை. நான் உங்களை வேண்டிக்கொள்கிறேன், உங்களை நீங்களே ஒரு மிஷினெறி போல எண்ணிக்கொள்ளாதிருங்கள், மாறாக, நீங்கள் கிறிஸ்து இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால், கழுவப்பட்ட ஒரு பாவி என்று உணருங்கள். உங்களுடைய ஊழியத்தை கடமைக்கென்று செய்வீர்களானால், அது ஒருபோதும் பிரயோஜனம் இல்லை. மாறாக, உங்களுடைய ஊழியத்தில், உங்கள் ஆத்துமாவை நீங்கள் ஒப்புக்கொடுத்து, பாவிகள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று, உங்கள் இருதயம் பாரப்பட்டு உழைக்கும்போது, நீங்கள் செய்கிற ஊழியம் பிரயோஜனமாய் இருக்கும். நல்ல குணங்களுக்கு எதிராக போராடாதிருங்கள். ஆனால், நம்முடைய நல்ல பழக்கங்களை எந்த வழியிலாவது, தீய நோக்கத்திற்காக, பயன்படுத்தக்கூடிய சாத்தானின் நயவஞ்சகத்திற்கு எதிராக போராடுங்கள்.”

வேறு வார்த்தைகளில் கூறுவோமானால், நாம் பரிசுத்தத்தைத் தொடரும்போதும், பாவத்தை எதிர்த்துப் போராடும்போதும், நாம் சுவிசேஷத்தை மையமாக வைத்திருக்க வேண்டும். நமது தனிப்பட்ட பாவம் மற்றும் நம் இதயத்தின் சோதனைகள் மீது ஆழ்ந்த விழிப்புணர்வையும் வருத்தத்தையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்துவில் கடவுளின் கிருபையைச் சார்ந்து வாழ வேண்டும். பின்னர் நாம் கிருபையால் இரட்சிக்கப்பட்ட பாவிகளாய் பேசுகிறோம். இப்படித்தான் நமது பரிசுத்தம் மற்றவர்களை கவர்ந்து இழுக்ககூடியதாய் மாறுகிறது.

நற்செய்தியைப் பற்றிய நமது தனிப்பட்ட பதறுதலைத் தவிர, பக்தி மற்றும் பரிசுத்தத்திற்கான நமது முயற்சிகள் அனைத்தும் நமது சொந்த பரிசுத்தம் மற்றும் ஊழியத்திற்கு முட்டுக்கட்டையாக மாறும். விசித்திரமான விஷயம் என்னவென்றால், மக்கள் எப்போதும் தங்கள் போதகரிடம் அதிகாரப்போக்கை கவனிப்பதில்லை. சபையிலுள்ள ஆவியில் குளிர்ந்துபோன  மக்கள், தங்கள் போதகர், தங்களுக்கு முன்பாக எந்த ஆவிக்குரிய வாழ்க்கையையும் காட்டவில்லை என்பதை பொருட்படுத்த மாட்டார்கள். ஒரு ஊழியக்காரர் வெளிபுறமான பக்தியின் தோற்றத்தை வைத்துக்கொண்டாலும் கூட, சபையானது, பொருளாதாரத்திலும், மற்ற காரியங்களிலும் வளருவதாய் காணப்படலாம். ஆனால் இறுதியில், போதகரைப் பொறுத்த வரையில், இவை அனைத்தும் வெளிப்புற சடங்குகள் மாத்திரமே. அவரின்  ஆவிக்குரிய வாழ்க்கைக்கு சம்பதப்பட்டதில்லை

ஸ்பர்ஜன் இங்கு ஒரு சம்பவத்தை விவரிக்கிறார்:

நான், படித்தேன், “ஒரு இரட்சிக்கப்படாத ஊழியர், ஒரு விலையுயர்ந்த ஆர்கன் (Organ), தெய்வ பயமில்லாத பாடகர்களின் கூட்டம், தங்களை உயர்வாக எண்ணிக்கொள்ளும் சபை கூட்டம், ஆகிய இவை ஒரு அழிவின் மகத்துவமான ஆயுதம்.” என்பது. அதை எழுதினவரின் கருத்து, இதை விட ஒரு பெரிய அழிவின் ஆயுதமாக இருக்க முடியாது  என்பதே. ஆராதிக்கும் ஸ்தலத்திற்கு சென்ற மக்கள் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு, அவர்களை கிறிஸ்தவர்களாக கருதிக்கொண்டு, ஒரு சொற்பொழிவை கேட்பதைப்போல கேட்டுக்கொண்டு, இசையினால், தங்கள் காதுகளை குளிர்வித்துக்கொண்டு, இன்னும் நல்ல பழக்கவழக்கங்களை கூட கான்பிக்கிறவர்களாய் இருக்ககூடும். இவர்கள் பக்தியில் சிறந்தவர்கள் அல்ல, வெளியில் இது அழகாக காணப்பட்டாலும், ஆவிக்குரிய ரீதியில், இது ஒரு வித்தியாசமும் கொண்டு வருவதில்லை. இவ்விதமாய் இருக்கும் ஆயிரக்கணக்கானோர், தங்களை தாங்கள் பாராட்டிக்கொண்டும், தங்களை இவ்வளவாக பக்தியாய் வைத்திருப்பதற்கு தேவனை துதிக்கிறவர்களாய் இருக்கிறார்கள். ஆனால், அதே சமயத்தில், கிறிஸ்துவுக்குள், மறுபிறப்பு அடையாதவர்களாய், பக்தியின் வேஷத்தை அணிந்துக்கொண்டு, அதன் பலனை மறுதலிக்கிறவர்களாய் இருக்கிறார்கள். பாரம்பரியத்தை மேன்மைப்படுத்துகிற, கட்டமைப்புக்குள்ளாக இருக்கும் இடத்தில், தலைமை தாங்குகிற எவரும், தேவனுக்கு, ஊழியம் செய்வதை காட்டிலும், பிசாசுக்கே அதிகம் சேவை செய்கிறவர்களாய் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்டதான வார்த்தைகள், நம்முடைய ஊழியர்களை பற்றி சொல்லப்படாமல் இருப்பதாக.

பதில் : தனிப்பட்ட ஜெபம்

எனவே தீர்வு என்ன? சம்பிரதாயத்திற்கு எதிராக நாம் எவ்வாறு போராடுவது? நாம் தனிப்பட்ட ஜெப வாழ்க்கையை, கடவுளுடனான நம்முடைய ஐக்கியத்தை வளர்ப்பதன் மூலம் நாம் போராடுகிறோம். மேலும் ஸ்பர்ஜன் குறிப்பாக ஜெபத்தை வலியுறுத்துகிறார்…. வேத வாசிப்பு மட்டுமல்ல, ஜெபம், அதாவது கிறிஸ்துவுடனான ஐக்கியம். ஜெபம், கால்வின் சொல்வது போல், நம்முடைய விசுவாசத்தின் முக்கிய வெளிப்பாடு ஆகும். ஜெபம் என்பது விசுவாசத்தை வெளிப்படுத்தும்படியான காரியமாய் இருக்கிறது. கடவுள் இருக்கிறார் அல்லது கடவுள் தேவை என்று நீங்கள் நம்பவில்லை என்றால், நீங்கள் ஜெபிக்க வேண்டாம். ஆனால் கேட்கும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நீங்கள் நம்பினால், அவர் உங்களுக்குத் தேவை என்று நீங்கள் நம்பினால், அந்த நம்பிக்கையை நீங்கள் வெளிப்படுத்தும் வழி ஜெபம்.

நல்ல சுவிசேஷகர்களாக, நாம் இயல்பாகவே பைபிள் வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறோம், அது சரிதான். நாம் கடவுளிடமிருந்து கேட்கும் இடம் வேதம். ஆனால் நாம் அந்த வேத படிப்பை முழுவதுமாக எடுத்துக்கொண்டு ஜெபத்தில் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஜெபம் என்பது, அந்த வேத வாசிப்பு அனைத்தையும் எடுத்துக்கொண்டு, அதை கடவுளோடு ஐக்கியமாக மாற்றி, அதை உள்வாங்கி, நம்முடையதாக ஆக்குவது. மேலும் இது இறையியல் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாய் இருக்கிறது. ஸ்பர்ஜன் இவ்விதமாக எழுதுகிறார்,

ஒருவன் கடவுளோடு ஐக்கியப்படுகிற ஜெபத்தின் மூலம், கிடைக்கும் ஆழமான ஆவிக்குரிய சுத்திகரிப்பை போன்ற ஒன்றை கல்லூரி படிப்பு அவனுக்கு கொடுப்பதில்லை.  ஒரு பக்குவப்படாத ஊழியன் பிரசங்க தயாரிப்பில், பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கும்போது, ஜெபமானது, பெரிய குயவனின் கையில் இருக்கும் கருவியாகும், அதைக்கொண்டு  அவர் அப்பாத்திரத்தை வடிவமைக்கிறார். நம்முடைய நூலகங்கள் மற்றும் படிப்புகள் அனைத்தும் ஜெபத்துடன் ஒப்பிடும்போது வெறும் வெறுமைதான். ஆம், நாம், தனிப்பட்ட ஜெபத்தினால், வெற்றி பெறுகிறோம், வளர்கிறோம், வலிமை பெறுகிறோம்.

ஜெபம் ஒரு சிறந்த படிப்பு. வேத வல்லுனர்கள் நல்ல பயிற்றுவிப்பாளர்கள்தான் ஆனால் வேதத்தை எழுதின ஆசிரியரே மிகவும் சிறந்தவராயும், ஜெபமானது, அவருக்கு நேரடியாக வேண்டுகோள் விடுக்கிறதும் மற்றும் அவரை நம் வழியில் சேர்க்கிறதுமாய் இருக்கிறது. தேவனுடைய வார்த்தையின் சாராம்சத்தை உள்வாங்கிக்கொண்டு, அதை அப்படியே ஜெபமாக்குவது மிகப் பெரிதான காரியாம்.

எனவே போதகர்களே, ஆசிரியர்களே, ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கும், உங்கள் சொந்த வாசிப்புக்காகவும், உங்கள் பிரசங்கத் தயாரிப்புக்காகவும், வேதத்தை படிப்பதிலும் நேரத்தை ஒதுக்குங்கள்… ஆனால் அந்த வாசிப்பை எப்போதும் தியானம் மற்றும் ஜெபத்துடன் இணைக்கவும். இப்படித்தான் நீங்கள் பக்தியில் வளர்கிறீர்கள். நீங்கள் தியானிக்கும் தியானப்பகுதியை அப்படியே ஜெபத்திற்கு கொண்டு வாருங்கள். உங்கள் வேத வாசிப்பு ஒரு பாடத்திற்காகவோ அல்லது பிரசங்கத்திற்காகவோ  மட்டுமல்லாமல், தேவனோடு தொடர்பு கொள்வதற்கான ஒரு வழிமுறையாக இருக்க அனுமதியுங்கள். இது தனிப்பட்ட ஜெபத்தின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

நிச்சயமாக, இது, வேதபடிப்பில் அல்லது ஒவ்வொரு காலையிலும் 30 நிமிடங்களுக்கு மட்டுமல்ல. மாறாக போதகர்களின் வாழ்க்கை ஒவ்வொரு கணமும் ஜெபத்தால் குறிக்கப்பட வேண்டும்.

“அவனுடைய மனம் தன் வேலையை நோக்கித் திரும்பும் போதெல்லாம், அவன் அதில் இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி, அவன் ஒரு வேண்டுதலை அனுப்புகிறான், அவனுடைய தூய ஆசைகளை வானத்திற்கு நன்கு செலுத்தப்பட்ட அம்புகளை போல அனுப்புகிறான். அவன் எப்போதும் ஜெபத்திலேயே உட்கார்ந்துகொண்டிருக்கவில்லை, ஆனால், அவன் ஜெப ஆவியினால் நிரப்ப பட்ட வாழ்வை கொண்டவனாய் இருக்கிறான்.  இவ்விதமாக , அவனுடைய வாழ்க்கை, தேவனோடு சார்ந்து இல்லாவிட்டால், அவன் தன வேளையில் இருந்தாலும், அவன் தன அன்றாட வேலையை செய்யவோ, தூங்கவோ, காலையில் எழுந்திருக்கவோ முடியாது. அதினால், எதோ விதத்தில், அவன் தொடர்ச்சியாய் ஜெபத்தில் தரித்திருக்கிறவனாய் இருக்கிறான். “இடைவிடாமல் ஜெபியுங்கள்” என்ற கட்டளையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் வானத்தின் கீழ் யாராவது இருந்தால், நிச்சயமாக அது கிறிஸ்தவ ஊழியன்தான்.”

ஸ்பர்ஜன் தனது மாணவர்களிடம் இதைச் சொன்னபோதும், அவர் இந்தப் பகுதியில் தனது சொந்த குறைபாடுகளை உணர்ந்தார். உண்மையில், எந்த ஒரு ஊழியக்காரன், டீக்கன் அல்லது மூப்பரோ, அவர்கள் தங்கள் ஜெபத்தில், முழுமையான ஈடுபாடுடன் கொண்டவர்கள் என்று அவர்களை பற்றி தனக்குத் தெரியாது என்றும் ஏன். அவரே, தன்னை குறித்து, இவ்விதமாக சொல்லமுடியாதவராகவும் இருந்தார். உங்களுடைய சொந்த ஜெப வாழ்க்கையில் நீங்கள் குறைவுபடுவதாக உணர்ந்தால், மனம் தளராதீர்கள். இது உங்கள் தொடக்கப் புள்ளியாக இருக்கட்டும்: இதை தேவனிடம் ஒப்புக்கொண்டு அவருடைய உதவிக்காக ஜெபிக்கவும். பின்னர் நீங்கள் தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருக்க அதற்குண்டான வழியை எடுக்கத் தொடங்குங்கள்.

இந்த நாட்களில், பாட்காஸ்ட்கள், (podcasts) ஆடியோ புத்தகங்கள், நம்முடைய நவீன சாதனங்கள் ஆகியவற்றால், ஆண்டவருடைய பிரசன்னத்தில் இருப்பதற்கான வாய்ப்புகளையும், ஜெபம் செய்யக்கூடிய வாய்ப்புகளையும் அதிகமாக இழந்து வருகிறோம். நம் வாழ்வை ஆக்கிரமிக்க நிறைய இருக்கிறது, அதாவது நாம் இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் என்றால், நாம் வேண்டுமென்றே அதற்கு இடம் கொடுக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையின் போதகர்களாகவும், ஆசிரியர்களாகவும், ஜெபத்தின் வாழ்க்கையை வளர்ப்பதன் மூலம் நாம் ஆவியிலும் கிறிஸ்துவுக்கு ஒப்பானவர்களாகவும் பலமாக வளர்கிறோம்.

ஆம், ஜெப வாழ்க்கை, மற்றும் கிறிஸ்துவுடான ஐக்கியத்தை தவிர, நம்முடைய ஊழியம் வெறும் மேலோட்டமாகவே இருக்கும்.

    அதிகமாக ஜெபிப்பதைப் புறக்கணிக்கும் பிரசங்கி தன் ஊழியத்தில் மிகவும் கவனக்குறைவாக இருக்க வேண்டும். அவனுடைய அழைப்பை அவனால் புரிந்து கொள்ள முடியாது. அவன் ஒரு ஆத்மாவின் மதிப்பைக் கணக்கிடவும் முடியாதவனாயும், அல்லது நித்தியத்தின் அர்த்தத்தை மதிப்பிடவும் முடியாதவனாயும் இருக்கிறான். அவன் ஒரு சாதாரண அலுவலக ரீதியான ஊழியக்காரனாக இருக்க வேண்டும். பிரசங்க பீட சோதனையில் அகப்பட்டவனாய் இருக்க வேண்டும். ஏனென்றால் ஆசாரியனுக்கு சொந்தமான ரொட்டி துண்டு அவனுக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது, அல்லது தேவனிடத்திலிருந்து வரவேண்டிய புகழைப் பற்றி கவலைப்படாமல் வெறும் மனுஷருடைய புகழை விரும்பும், ஒரு வெறுக்கத்தக்க மாயமாலக்காரனாக இருக்க வேண்டும். அவன் நிச்சயமாக ஒரு மேலோட்டமான பேச்சாளராக மாறுவான், கிருபை எங்கு அற்பமாக மதிக்கப்படுகிறதோ, அங்கு சிறந்த அங்கீகாரத்தை பெறுகிறவனாயும், வீண் புகழ்ச்சியை நாடுகிறவனாயும் இருப்பான். ஆழமாக உழுது ஏராளமான அறுவடைகளை அறுவடை செய்பவர்களில் ஒருவனாக அவன் இருக்க முடியாது. அவன் வெறும் அலைந்து திரிகிறவன், உழைக்கிறவன் அல்ல. ஒரு போதகராக அவன் வாழ ஒரு பெயர்., அந்த பெயர் செத்துவிட்டது. நீதிமொழிகளில், சொல்லப்பட்டது போல, அவன் நொண்டியானவன் ஏனென்றால் அவனுடைய ஜெபம் அவனுடைய பிரசங்கத்தை விட குறுகியது.

ஸ்பர்ஜனின் தனிப்பட்ட ஜெப வாழ்க்கையைப் பற்றிய பல குறிப்புகள் இல்லை என்றாலும், ஒன்று மட்டும் தெளிவாகிறது, அவர் தன் தனிப்பட்ட ஜெபத்தில் செலவிட்ட பிரயாசத்தை, அவருடைய ஆராதனையில் உள்ள பொதுவான ஜெபத்தில் பார்க்கலாம். ஸ்பர்ஜன் பிரசங்கத்தை விட, ஆராதனையின் மிக முக்கியமான பகுதி ஜெபம்  என்று கற்பித்தார். “ஆராதனை நேரம்” பெரும்பாலானவை கடவுளை விட மனிதனை நோக்கியே உள்ளன. ஆனால் ஜெபத்தில், சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு முன்பாக, அவரை வணங்குவதற்காக நாம் கூடிவிட்டோம் என்பதை நினைவுபடுத்துகிறோம். மற்ற சபைகளில் அவர் பிரசங்கிக்கும்போது, ​​ஜெபத்தில் இந்த அம்சங்கள் எவ்வளவு குறைவு என்று அவர் அடிக்கடி புலம்பினார்.

ஸ்பர்ஜன் தனது சபையை ஜெபத்தில் வழிநடத்தியபோது, ​​அந்தச் சந்தர்ப்பங்கள் பிரசங்கத்தைவிட அதிக சக்தி வாய்ந்ததாகவும் மறக்கமுடியாததாகவும் இருந்ததை பலர் குறிப்பிட்டனர். அவருடன் கூட இருந்தவர்களில் ஒருவர் பதிவு செய்தார்,

“ஸ்பர்ஜன் பலமுறை நிரூபித்தார், பெரிய சபையை ஜெபத்தில் வழிநடத்தும் போது, ​​​​அவர் மிகவும் ஜெபத்தில் ஆழ்ந்தார், மேலும் அவர் தன்னை தாழ்த்தி மன்றாடும்படியான ஜெபத்தில்  அல்லது நன்றியுணர்வில் முழுமையாக மூழ்கிவிட்டார், அவர் தனது சுற்றுப்புறங்களை எல்லாம் மறந்துவிட்டார், அவர் கண்களை திறந்து பார்க்கும்போது உன்னதமானவரிடத்தில், தூதர்களின் மத்தியில் இல்லாமல், இன்னும் மாம்சத்தில் இருப்பதை எண்ணி, வருந்தினார்.” அவருடைய சபை ஆராதனையில் கலந்து கொண்ட ஒருவர் இவ்விதமாக எழுதுகிறார், “அவரது பிரசங்கத்தை விட அவருடைய ஜெபம் எனக்கு அதிகமாக பிடித்து இருந்தது. அவருடைய பிரசங்கத்தில், அவர் சபை மக்களுடன் பேசினார். அவருடைய ஜெபத்தில், அவர் தேவனுடன் தொடர்பு கொண்டார். இது வழக்கமான, சம்பிரதாய செயல் இல்லை. அவருடைய சபை மக்கள், அவருடைய ஜெபத்தில் தேவனுடன் தொடர்புகொள்வதைக் கேட்டதும், அவர்கள்  அவருடன் பங்கேற்றதும், அவர்களுடைய இதயங்கள் தேவனுடைய பிரசனத்தை உணர்ந்தன. ஸ்பர்ஜன் ஒரு தனிப்பட்ட ஜெப வாழ்க்கையில் வளர்ந்து, நொடிக்கு நொடி ஜெபத்தில் கிறிஸ்துவை நெருங்கி வருவதால் மட்டுமே இது சாத்தியமானது.

The Pastor’s Private Prayer – March 21, 2022 – Dr.Geoff Chang https://www.spurgeon.org/resource-library/blog-entries/the-pastors-personal-holiness/ Used by permission.


Geoff Chang serves as Assistant Professor of Church History and Historical Theology and the Curator of the Spurgeon Library. He is a graduate of The University of Texas at Austin (B.B.A.), The Southern Baptist Theological Seminary (M.Div.). Most recently, he completed his Ph.D. at Midwestern Baptist Theological Seminary, where he wrote his dissertation on Charles H. Spurgeon’s ecclesiology. 

No Response to “போதகரின் தனிப்பட்ட ஜெபம் – ஜாப் சாங். The Pastor’s Private Prayer – Geoff Chang.”

Leave a Comment