உன்னுடைய ஜெப வாழ்க்கை எவ்விதமாக இருக்கிறது? – மார்டின் லாயிட் ஜோன்ஸ். How’s Your Prayer Life? – Martyn Lloyd-Jones

Published February 26, 2022 by adming in Pastor's Blog

உன்னுடைய ஆவிக்குரிய வாழ்வில், ஜெபம் எந்த இடத்தில் இருக்கிறது? நம்முடைய  வாழ்வில் அதற்கு என்னவிதமான  முக்கியத்துவத்தை கொண்டிருக்கிறோம்? உங்கள் அனைவருக்கும் நான் விடுக்கும் கேள்வி இதுவே. வேதத்தை நன்கு அறிந்தவரும், அதன் கோட்பாடு மற்றும் இறையியலைப் பற்றிய அறிவும் உள்ள மனிதருக்கு அது எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு இந்த கேள்வி அனைவருக்கும் அவசியம். நம்முடைய வாழ்வில் ஜெபம் எந்த இடத்தை கொண்டுள்ளது? எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது? ஜெபம் இல்லையென்றால், நாம் சோர்வடைந்து, வீழ்ந்து விடுவோம் என்று உணர்கிறோமா? கிறிஸ்தவர்களாய், நாம் எங்கு நிற்கிறோம் என்பதை நம்முடைய ஜெப வாழ்க்கையே தீர்மானிக்கிறது. வேத அறிவு மற்றும் அதை விளங்கி கொள்ளுதலைவிட, ஜெபம் மிக முக்கியமானதாய் இருக்கிறது. இங்கே, நான் வேத அறிவை வளர்த்துக்கொள்ள கூடாது நான் சொல்லவில்லை. என்னுடைய வாழ்நாளில், சத்தியத்தை கற்றுக்கொள்வதிலும், அதை புரிந்து கொள்வதிலும் அனேக நேரங்கள் செலவழித்ததுண்டு. இதுவும் முக்கியம்தான். ஆனால், ஒன்றே ஒன்று, எல்லாவற்றை காட்டிலும், மிக அதிகமான, முக்கியமான காரியம் என்னவென்றால், ஜெபம். என்னுடைய வேத விளங்குதலைகுறித்து, நான் அறிந்து கொள்வதற்கு, ஒரே ஒரு சோதனை, நான் எவ்வளவு நேரம் ஜெபத்தில் செலவழிக்கிறேன் என்பதை பொறுத்தே இருக்கிறது. இறையியல், ஒட்டுமொத்தமாக, கடவுளை பற்றிய அறிவாக இருப்பதால், நான் எவ்வளவு அதிகமாக இறையியல் அறிந்திருக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக ஜெபத்தினால் கடவுளை அறிய முற்பட வேண்டும். ஆம், அவரை பற்றி அறிந்து கொள்வது அல்ல, அவரையே அறிந்து கொள்வது ஆகும். இரட்சிப்பின் முழு கருப்பொருளே, கடவுளை பற்றிய அறிவுக்குள்ளாக கொண்டு வருவதே ஆகும். மனந்திரும்புதலை குறித்து, நான், அறிவாற்றலாக பேசலாம், ஆனால், எது நித்திய ஜீவன்? தேவன் அனுப்பின, ஒரே மெய்யான கடவுளாகிய இயேசு கிறிஸ்துவை அறிவதே ஆகும். நான் பெற்றிருக்கிற என்னுடைய எல்லா அறிவும், ஜெபத்திற்குள்ளாக என்னை வழிநடத்தவில்லையென்றால், எங்கேயோ தவறு நிகழ்கிறது என்று அர்த்தம். ஆம், அப்படிதான். கடவுளை பற்றிய அறிவை குறித்ததான விலைமதிப்பு, ஜெபத்தின் முக்கியத்துவத்தை அறியச் செய்கிறது. அப்படியாக, ஜெபத்திற்கு நேரத்தை ஒதுக்கி, அதில் அதிகமாக நான் செலவிடும்பொழுது, ஜெபத்திற்குண்டான மகிழ்ச்சியை பார்க்கலாம். என்னுடைய வாழ்வில், இவ்விதமான முடிவுகளை நான் பார்க்கவில்லை என்றால், அதில் ஏதோ தவறு மற்றும் போலித்தனம் உள்ளது, இல்லையெனில் நான் அதை தவறான முறையில் கையாளுகிறேன் என்று அர்த்தம்.

ஜெபம், என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது. மனித ஆத்மாவின் மிக உயர்ந்த செயல். மண்டியிட்டு கடவுளை நேருக்கு நேர் சந்திக்கும் போது, அவன் மிகப்பெரிய மற்றும் உயர்ந்தவனாகவும், காணப்படுகிறான்.

Taken From https://www.monergism.com/blog/hows-your-prayer-life-0


David Martyn Lloyd-Jones was a Welsh Protestant minister and medical doctor who was influential in the Calvinist wing of the British evangelical movement in the 20th century. For almost 30 years, he was the minister of Westminster Chapel in London. 



No Response to “உன்னுடைய ஜெப வாழ்க்கை எவ்விதமாக இருக்கிறது? – மார்டின் லாயிட் ஜோன்ஸ். How’s Your Prayer Life? – Martyn Lloyd-Jones”

Leave a Comment