“கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.” (சங்கீதம் 119:65) சங்கீதங்கள், வேதத்தின் முக்கிய அம்சமாய் இருக்கிறது. அவை நம்முடைய மகிழ்ச்சிக்காகவும் மற்றும் பிரயோஜனத்திற்காகவும் உள்ளன. ஆம், இவை, நம்மை திருப்திபடுத்த மாத்திரமல்ல, பெலப்படுத்தும்படியாகவும் உள்ளது. இந்த சங்கீதம் தெய்வீக மற்றும் ஆவிக்குரிய விஷயங்களால் நிறைந்திருப்பத்தை நாம் பார்க்கலாம். இவ்வசனத்தை நாம் இரண்டாக பிரிக்கலாம். 1. தேவன் தாவீதுக்கு காண்பித்த இரக்கம்: அவர் அவனை நன்றாய் நடத்தினார். 2. தாவீதின் நன்றியுள்ள அறிக்கை: “கர்த்தாவே, உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்” தாவீதினிடத்தில், தேவன் காண்பித்த இரக்கத்தை கொண்டு, நாம் இங்கே கவனிக்க வேண்டியது: உபதேசம் 1 தேவன் தம்முடைய மக்களை நன்றாய் நடத்துகிறவராய் இருக்கிறார். “தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்.” (ஆதி 33:11).அனேக வேளைகளில், தேவனுடைய பிள்ளைகள், அவருடைய அன்புக்கு பாத்திரவான்களாய் நடந்து கொள்ளுகிறதில்லை. அப்படி அவர்கள் செயல்பட்டாலும், தேவன், அவர்களை நன்றாகவே நடத்துகிறவராய் இருக்கிறார். தேவன் தம் மக்களுடன் […]
Read More