வேதம் மட்டுமே! – ஜே.சி.ரைல். Sola Scriptura! – J.C.Ryle.
—– Reformation Day Special ——
ஜெபத்திற்கு அடுத்தபடியாக, நடைமுறை பக்திக்குரிய வாழ்விற்கு, வேத வாசிப்பு போன்ற முக்கியமானது எதுவும் இல்லை. வேதத்தை வாசிப்பதினால், நாம் எதை விசுவாசிப்பது, எப்படியாக இருப்பது, எதை செய்வது, நிம்மதியாக வாழ்வது எப்படி, நிம்மதியாக மரிப்பது எப்படி, என்பதை கற்றுக்கொள்ளலாம்.
வேதம் மட்டுமே, “கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்குகிறது.” (2 தீமோ 3:15). வேதம் மட்டுமே, பரலோகத்திற்கு செல்லும் வழியை காட்டுகிறது, நீ அறிய வேண்டிய யாவற்றையும் கற்பிக்கிறது. நீ விசுவாசிக்க வேண்டிய அனைத்தையும் சுட்டிக்காட்டுகிறது, மேலும், நீ செய்ய வேண்டிய அனைத்தையும் விளக்கி காட்டுகிறது.
வேதம் மட்டுமே, நீ ஒரு பாவி என்றும், கடவுள் முற்றிலும் பரிசுத்தமானவராகவும், மன்னிப்பு, சமாதானம், கிருபையை (இயேசு கிறிஸ்து) பெரிதான விதத்தில் அளிக்கிறவராக காட்ட முடியும்.
வேதத்தை கொண்டு, பரிசுத்த ஆவியானவர், இருதயத்தை ஆழமாய் சந்திக்கும் பொழுது, ஆத்துமாக்கள், தேவன் பக்கமாக மனந்திரும்புகிறார்கள். இவ்வண்ணமாகவே, வேதமானது, ஆயிரக்கணக்கான ஒழுக்க ரீதியான அற்புதங்களை செய்திருக்கிறது. ஆம், குடிக்கு அடிமையானவர்கள் விடுதளையாக்கப்பட்டிருக்கிறார்கள், ஒழுக்ககேடான மக்கள், பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறார்கள், திருடர்கள், நேர்மையானவர்களாகவும், வன்முறையாளர்கள், சாந்தகுணமுள்ளவர்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
வேதாகமம், மனிதர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டி போட்டுவிடுகிறது. ஆம், அது அவர்களுடைய பழைய காரியங்களை எல்லாம் ஒழித்து, அவர்களுடைய வழிகளெல்லாம், புதிதாக்குகிறது. உலக மக்களை, முதலாவது, தேவனுடைய இராஜ்ஜியத்தை தேட கற்றுக்கொடுக்கிறது. உலக இன்பங்களை நேசிக்கிற மக்களை, கடவுளை நேசிக்கிற மக்களாக மாற்றுகிறது. கீழ் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மனித ஆசைகளை, முற்றிலுமாக, திருப்பி, மேல் நோக்கி ஓடச்செய்கிறது. உலகத்தை மட்டுமே சிந்தித்துக்கொண்டிருக்கும் மனிதனை, பரலோகத்தை சிந்திக்கும் மனிதனாக, மாற்றி விடுகிறது.
வேதாகமம், ஒரு மனிதனை. “எல்லாம் நன்மைக்கே” என்று சொல்லி, முறுமுறுப்பு இல்லாமல், துன்பங்களை தாங்கக்கூடியவனாக்குகிறது. மரணத்தை கண்டு “ நான் பயப்படேன்” என்று சொல்கிறவனாக்குகிறது. நியாயத்தீர்ப்பு மற்றும் நித்தியத்தை குறித்து பயபடாதவனாக்குகிறது.
ஒரு மனிதன், தன் ஆத்துமாவில் தூங்கிக்கொண்டு இருக்கிறானா? வேதம், அவனை எழுப்புகிறது.
அவன், துக்கமுள்ளவனாய் இருக்கிறானா? வேதம், அவனை ஆறுதல் படுத்துகிறது.
அவன் தவறுகிறவனாய் இருக்கிறானா? வேதம் அவனை மீட்டெடுக்கிறது.
அவன், பலவீனனாய் இருக்கிறானா? வேதம் அவனை பலப்படுத்துகிறது.
அவன், ஆபத்தில் இருக்கிறானா? வேதம், அவனை பொல்லாப்பிலிருந்து காப்பாற்றுகிறது.
அவன், தனிமையாய் இருக்கிறானா? வேதம், அவனோடு பேசுகிறது.(நீதி 6:22)
இவை அனைத்தும், வேதமானது, அனைத்து விசுவாசிகளுக்கு, அது எளிய மக்களாக இருக்கட்டும், உயர்ந்தவர்களாக இருக்கட்டும், பணக்காரர்களாக இருக்கட்டும், ஏழைகளாக இருக்கட்டும், ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஏற்கனவே செய்தும், இப்பொழுதும், ஒவ்வொரு நாளும் செய்து கொண்டும் இருக்கிறது.
வேதம் மட்டுமே, தவறு இழைக்காத தன்மையை கொண்டிருக்கிறது. ஆம், சபையிலோ, கவுன்சில் கூட்டத்திலோ, ஊழியகாரர்களிடத்திலோ அல்ல, எழுதப்பட்ட வார்த்தையாகிய வேதத்தில் மட்டுமே தவறு இழைக்காத தன்மையை காணலாம்.
உலகில் உள்ள மற்ற எல்லா புத்தகங்களும், அவற்றின் வழியில் நல்லதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தாலும், அவை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ குறைபாடுடையவை. நீ அவைகளை எவ்வளவு அதிகமாகப் பார்க்கிறாயோ, அவ்வளவு அதிகமாக அவைகளின் குறைபாடுகள் மற்றும் கறைகள் தெரியும். வேதம் மட்டுமே முற்றிலும் சரியானது. ஆரம்பம் முதல் இறுதி வரை, அது “கடவுளின் வார்த்தை.”
ஒரு மனிதன், வேதத்தை மட்டுமே தன் சட்டமாக்கி கொள்ள வேண்டும். அவ்வேதத்திற்கு ஒத்துவராத எதையும், நம்பவும் கூடாது, பெறவும் கூடாது. அவன், அனைத்து மத போதனைகளையும், ஒரு எளிய சோதனை மூலம் முயற்சிக்க வேண்டும் – அதாவது, இது வேதத்துடன் பொருந்துமா? வேதம் என்ன சொல்லுகிறது?
ஒரே ஒரு கேள்வி: சொல்லப்பட்ட விஷயம் வேதப்பூர்வமானதா? அது இருந்தால், அது ஏற்றுக்கொள்ளப்பட்டு நம்பப்பட வேண்டும். அது இல்லை என்றால், அதை மறுத்து ஒதுக்கித் தள்ள வேண்டும்.
இந்த நாளில் மிகவும் ஆவிக்குரிய செழிப்பில் இருக்கும் சபைகள், வேதத்தை மதிக்கும் சபைகள். மிகவும் ஒழுக்க ரீதியான ஒளியை அனுபவிக்கும் நாடுகள், வேதத்தை மிகவும் பொக்கிஷமாக வைக்கும் நாடுகள். தெய்வ பயமுள்ள குடும்பங்கள் வேதத்தை படிக்கும் குடும்பங்கள். பரிசுத்தமான ஆண்களும் பெண்களும் வேதத்தை வாசிப்பவர்கள். இவைகள் மறுக்க முடியாத எளிய உண்மைகள்.
தன் ஆத்துமாவைப் பற்றி அக்கறை கொண்ட ஒவ்வொருவரும், வேதத்தை உயர்வாகப் போற்றவும் அதை தொடர்ந்து படிக்கவும், மற்றும் அதன் உள்ளடக்கங்கள் அனைத்தும் தன் வாழ்க்கையோடு சம்பந்தபடுத்திக் கொள்ள வேண்டும்.
“வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.(2 தீமோ 3:16,17)
No Response to “வேதம் மட்டுமே! – ஜே.சி.ரைல். Sola Scriptura! – J.C.Ryle.”