பாடுகளின் வேளையில், உண்மையுள்ள ஆத்துமா பெறும் பலன்கள் – ஜோன் ப்ளவேல். What advantages sincerity gives in suffering times? – Puritan John Flavel.
1. முதலாவது, உண்மையான பக்தி, உலக சிநேகத்திற்கு இடம் கொடுக்காது. பாடுகளின் வேளையில், உலக சிநேகம், கிறிஸ்துவை விட்டு பின்வாங்கும்படியாக செய்யும். நான் மறுக்கவில்லை, இன்றைக்கு, விசுவாசிகள், உலகத்தை சார்ந்து வாழ்ந்தாலும், அதுவே, அவர்களுக்கு பிரதானமாக இல்லை. “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.” (1 யோவான் 2:15). ஒரு கிறிஸ்தவன், எவ்வளவாய் உலகத்தின் மீது அன்பு கூறினாலும், அது தேவன் மீது கொண்டுள்ள அன்புக்கு மேலாக இருக்காது. நிழலுக்கு அடியில் வாழும் வளர்ச்சியற்று, குன்றிப்போய் கிடக்கும் செடியை போல், அவன் பாதிப்படைய மாட்டான்.
எவன் ஒருவன், உலகத்தை, அதிகமாய் அன்பு கூறுகிறானோ, அவன், சோதனையை சந்திக்கிற வேளையில், கிறிஸ்துவை விட்டு விலகுகிறவனாய் இருக்கிறான். இதுவே, மத்தேயு 19:22 ல் நாம் பார்க்கும் வாலிபனின் நிலைமை. “அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.” இதுவே, 2 தீமோத்தேயு 4:10 ல் சொல்லப்பட்டுள்ள மனுஷனுடைய நிலைமை. “ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்.” நெருப்பிலே போடப்பட்ட, பச்சை மரம், எப்படி பற்றி எரியாதோ, அப்படியாக, உலக சிநேகம், தேவனுக்காய், நாம் வைராக்கியமாய் வாழுவதற்கு, நம்மை அனுமதிக்காது.
2. இரண்டாவதாக, உண்மைத்தன்மை, கிறிஸ்துவோடு, பிண்ணி, பிணைந்து, அவரோடு, இணைந்து இருக்கும். இதுவே, பெரிதான சோதனையில், பலமானதாய் இருக்கிறது. மாயமாலக்காரனுக்கு, கிறிஸ்துவோடு கொண்ட ஐக்கியம் இருக்காது. அதினால், அவரிடத்திலிருந்து, எந்த வித கிருபைகளையும் பெற முடியாது. மேலும், கிறிஸ்துவினிடமிருந்து, ஒன்றும் பெறாதவனாய் இருப்பதினால், சீக்கிரம் செலவழிந்து போக கூடிய தன்னுடைய சுய பெலத்தை கொண்டவனாய் இருக்கிறான். அதுவே, ஒரு விசுவாசியின், வாழ்வில், பாடுகள் மத்தியில், அவனுக்கு வேண்டிய, கிறிஸ்துவின் பெலனும், கிருபைகளும் பெற்றுக்கொள்கிறவனாய் இருக்கிறான். “எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.” (2 கொரி 1:5). “சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும்,.” (கொலோ 1:11). இதுவே, பாடுகளின் வேளையில், கிறிஸ்துவோடு, இணைந்திருக்கும், ஒரு விசுவாசிக்கு கிடைக்கும் பெரிதான பலன்.
3. மூன்றாவதாக, உண்மையுள்ள ஆத்துமா, கிறிஸ்துவோடு, பிணைக்கப்பட்டிருப்பதினால், அந்த ஆத்துமா, நித்தியத்தின் மேல், ஆம், பரலோகத்தின்மேல், தன் இருதயத்தை பதித்திருக்கும். “நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.” (கொலோ 3:1). நாம் கிறிஸ்துவோடு, தொடர்ந்து, இணைந்திருப்பதற்கு, இது நம்மை ஊக்கப்படுத்துகிறது. எப்பக்கத்திலிருந்து வரும், சோதனையிலிருந்து, நம்மை பாதுகாக்க இது உதவுகிறது. “விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.” (எபி 11:24-26). மோசே, இப்படியாக, செய்வதற்கு, இது உதவி செய்தது. வெலன்ஸ் பேரரசர், உலக மேன்மைகள், ஈர்ப்புகளை காண்பித்தும், அதை மறுத்த 40 ரத்த சாட்சிகளின், தைரியமான பதில் இதுவே, “நாங்கள் முழு உலகத்தையே ஒன்றுமில்லை என்று எண்ணும்போது, நீர், இந்த அற்பமான உலக காரியங்களை எங்களுக்கு ஏன் அளிக்கிறீர்? ஒரு விசுவாசிக்கு, பாடுகளும், சோதனைகளும், வரப்போகிற, நித்தியமான, பரலோக வாழ்விற்கு ஆயத்தப்படுத்தும் கருவிகளாகவும், நித்தியமான பரலோக சந்தோஷத்தை பெற்றுக்கொள்ள துரிதபடுத்தும் கருவிகளாக இருக்கின்றன.
4. நான்காவதாக, உண்மைத்தன்மை, ஒரே ஒரு நோக்கத்தை கொண்டிருக்கும். அதாவது, தேவனுக்குள் களிகூரவும், அவரை பிரியப்படுத்துவதே ஆகும். பாடுகளின் மத்தியில், கிறிஸ்துவுக்குள் உறுதியாய் இருப்பதற்கு, இதை விட வேறு என்ன வேண்டும்? யாக்கோபு 1:8 ன்படி, மாய்மாலக்காரன், தன் வழிகள் எல்லாம் நிலையற்றவனாய் இருப்பதற்கு, அவன் இருமனம் உள்ளவனாய் இருப்பதே காரணம். ஆனால், கிறிஸ்துவுக்குள் இருக்கிற விசுவாசி, ஒரே மனம் கொண்டவனாய், தன் வழியில் உறுதிகொண்டவனாய், கிறிஸ்துவுக்காக வாழ்கிறான்.
5. ஐந்தாவதாக, உண்மைத்தன்மை, கிறிஸ்துவின் சித்தத்திற்கு முற்றிலும் அர்பணிக்கிறது. இதினால், பல்வேறு சிரமங்களும், அபாயங்களும், அவனுக்கு ஒரு பொருட்டாக இருக்காது. இதுவே, பரிசுத்த எண்ணெய். அவனுடைய ஆத்துமாவின் சக்கரம், கிறிஸ்துவுக்கென்று, கீழ்படிந்து, சுலபமாக ஓடுவதற்கு அது உதவுகிறது. இதுவே, பாடுகளின் வேளையிலும், அப்.21:13 ன்படி, “எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்” என்று சொல்லி, கிறிஸ்துவின் சித்தத்திற்கு, தன்னை அர்பணிக்க செய்கிறது. எவ்வளவு துன்பங்கள், பாடுகள், வந்தாலும், அவன் கிறிஸ்துவுக்காக, பொறுமையோடு சகித்து, அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்க செய்கிறது.
6. ஆறாவதாக, உண்மைத்தன்மை, இவ்வுலக காரியங்களின் அளவுகளை, நித்தியம் மற்றும் விசுவாசம் என்ற அளவுகோலைக்கொண்டு, அளவிடச்செய்கிறது. “ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.” (2 கொரி 4:18). “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.” (ரோமர் 8:18). அவன், தற்காலிகமான, உலக காரியங்களை குறித்து, புலம்பிக்கொண்டிராதபடி, நித்திய மகிமையை குறைத்து மதிப்பிடாதவனாய், காணப்படுவான். நித்தியத்தின் மேல், நம்முடைய உறுதியான பார்வை, இவ்வுலக துன்பங்களில், நம்மை ஜெயிக்கிறவர்களாய் வைக்கும்.
7. ஏழாவதாக, முடிவாக, உண்மைத்தன்மையான வாழ்வில் மட்டுமே, பாடுகளின் மத்தியில், கிறிஸ்துவுக்காக, உறுதியோடும், ஸ்திரத்தொடும், செல்லுவதற்கு, அனைத்து, பரலோக, உதவிகளை கொண்டுள்ளது. அதாவது, உண்மையுள்ளவர்களுக்காகவே, கிறிஸ்துவானவர், பரலோகத்தில், வேண்டுதல் செய்கிறவராய் இருக்கிறார். (ரோமர் 8:34). மேலும், பாடுகள் வேளையில், ஆவியானவரின் ஆறுதலும், தேவ ஆவியானவர், அவர்களில் தங்குகிறவராயும், தேவ தூதர்களின் உதவியை கொண்டவர்களாய் இருக்கின்றனர். (எபி 1:14). அனேக பரிசுத்தவான்களின் ஜெபம், வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள, விசேஷமான வாக்குத்தத்தங்கள் எல்லாம், ஒவ்வொரு, வார்த்தை, வரி முதலாய், தேவனின் உண்மைத்தன்மை அடங்கியிருக்கிறது. அதினால், ஒரு உண்மையான விசுவாசி சோதனையில் மாண்டுபோவதில்லை.
No Response to “பாடுகளின் வேளையில், உண்மையுள்ள ஆத்துமா பெறும் பலன்கள் – ஜோன் ப்ளவேல். What advantages sincerity gives in suffering times? – Puritan John Flavel.”