பிசாசின் சோதனைகளினாலே தாக்கப்படுதல் – தொமஸ் வாட்சன். Buffeted by Satan’s temptations! – Thomas Watson

Published January 26, 2024 by adming in Pastor's Blog


Why does God allow His people to be buffeted by Satan’s temptations? He does it for many wise and holy ends.

ஏன் தேவன், தம்முடைய பிள்ளைகளின் வாழ்வில், பிசாசின் சோதனைகளினால் தாக்கப்பட அனுமதிக்கிறார் ? ஆம், அவர் பல ஞானமான மற்றும் பரிசுத்தமான நோக்கங்களுக்காக அதை செய்கிறார்.

தேவன், அவர்களுடைய அன்பை பரிசோதிக்க, தம்முடைய பிள்ளைகள் சோதிக்கப்பட அனுமதிக்கிறார். சோதனையை நாம் சந்திக்கும்படியான வேளையில், அச்சோதனையை விட்டு விலகி, அதற்கு புற முதுகு காட்டி செல்லும்போதுதான், நாம் தேவனிடத்தில் எவ்வளவாய் அன்பு காட்டுகிறோம் என்று பரிசோதிக்கப்படுகிறது. பிசாசு, பாம்பை போல், தந்திரமாய் வந்து, கவர்ச்சியாய் ஆப்பிள் பழத்தை காட்டினாலும், தேவன் மீது அன்பு கொண்டவன், அத்தடைபட்ட பழத்தை தொடமாட்டான். ஆம், பிசாசானவன், உலகத்தின் அனைத்து ராஜ்யத்தையும், அதின் மேன்மையையும், கிறிஸ்துவுக்கு அளித்த பொழுது, இயேசுவானவர், அதை புறம்தள்ளினதினால், அவருடைய அன்பு, தம் பிதாவினிடத்தில் எவ்வளவாய் இருந்தது என்று காட்டப்பட்டது. உண்மையான அன்புக்கு லஞ்சம் தேவையில்லை. பிசாசின் அக்கினியாஸ்திரங்கள் ஆக்ரோஷமாய் இருக்கும்பொழுது, பரிசுத்தவானின் அன்பு, அவனுடைய பிதாவினிடத்தில், இன்னும் ஊக்கமாய் இருக்கும். “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால், என் கற்பனைகளைக் கைகொள்ளுங்கள்.” (யோவான் 14:15)

தேவன், அவர்களுடைய தைரியத்தை  பரிசோதிக்க, தம்முடைய பிள்ளைகள் சோதிக்கப்பட அனுமதிக்கிறார்.

அநேகர், சோதனையை எதிர்கொள்ள தைரியமற்றவர்களாய் இருக்கிறார்கள். பிசாசு, அவனுடைய தந்திரமான, ஆசையான வார்த்தைகளை முன் வைக்கும் போது, அதற்கு, அதி சீக்கிரத்தில் இணங்கி விடுகின்றனர். அவர்கள், திருடன், ஒருவனை அணுகும்போது, உடனே, தன்னுடைய காசுப்பையை கொடுத்துவிடுகிற, கோழையை போல இருக்கின்றனர். ஒரு கிறிஸ்தவன், வீரமுள்ளவனாய் இருக்கிறான். அவன், தன், வாளை எடுத்து, சாத்தானை எதிர்கொண்டு, வீழ்த்துவானே தவிர, அதற்கு, இணங்க மாட்டான். வீரத்தின் ஆவியை கொண்ட பரிசுத்தவான், யுத்த களத்தில், நின்று, பிசாசோடு சண்டையிட்டு, விசுவாசத்தின் வல்லமைகொண்டு, பிசாசை ஓடச்செய்கிறவனாய் இருப்பான்.

தேவன், பெருமையிலிருந்து அவர்களை காத்துக்கொள்ள, தம்முடைய பிள்ளைகள் சோதிக்கப்பட அனுமதிக்கிறார்.

பெருமை, கிருபையை வளரக்கூடாதபடி, அதை கீழ்ப்படுத்துகிறது. எப்படி, நமக்கு தலைவலி ஏற்படும்போது, நமக்கு எதுவும் செய்ய தோணாதோ, அப்படியே, எங்கு நம், வாழ்வில், பெருமை மேலோங்கி இருக்கும்போது, அங்கு கிருபைக்கு வேலையே இல்லை. தேவன் பெருமைக்கு எதிர்த்து நிற்கிறார். ஆம், தம்முடைய பிள்ளைகளை தாழ்மைக்குள்ளாக வைத்துக்கொள்ள, சில நேரங்களில், தேவன், சோதனையில் விழுவதற்கு அனுமதிக்கிறார். “அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம், நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னை குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.” (2 கொரி12:7). ஆம், மாம்சத்தில் உள்ள முள்ளானது, பெருமையை உடைக்கவே இருந்தது. என்னை பெருமைக்குள்ளாக கொண்டு வரும் ஒரு பணியை விட, என்னை தாழ்மைகுள்ளாக கொண்டு வரும் சோதனையே மேலானது. ஒரு கிறிஸ்தவன், பெருமைக்காரனாய் இருப்பதைவிட, அப்பெருமையிலிருந்து, அவனை குணப்படுத்த, சிறிது காலம், தேவன், அவனை பிசாசின் கரத்தில் விழச்செய்கிறார்.

சோதனை, சோர்வு ஊடாய் கடந்து போகும் பிள்ளைகளுக்கு, ஏற்ற வார்த்தை சொல்லி, அவர்களை ஆற்றி, தேற்றுவதற்கு உரிய மக்களாய் மாற்ற, தேவன், தம்முடைய பிள்ளைகள், சோதிக்கப்பட, அனுமதிக்கிறார். பவுல், சோதனை என்ற பள்ளியில் பயிற்சிவிக்கப்பட்டவனாய் காணப்பட்டான். “சாத்தானாலே நாம் மோசம் போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்.” 2 கொரி 2:11. சொரி-மணல் இருக்கும் இடத்தில் சவாரி செய்த ஒரு மனிதன், அந்த ஆபத்தான வழியில் மற்றவர்களுக்கு வழிகாட்டத் தகுதியானவன். அப்படித்தான், சாத்தானால் தாக்கப்பட்டு, கர்ஜிக்கும் சிங்கத்தின் நகங்களை உணர்ந்தவனே – சோதனைக்கு உள்ளான ஒருவனைச் சமாளிக்கத் தகுதியானவன்.

பரலோகத்தின் மேல் வாஞ்சையும், பற்றும் அதிகரிக்கவே, தேவன்,  தம்முடைய பிள்ளைகள் சோதிக்கப்பட அனுமதிக்கிறார். பிசாசு, எப்பொழுதும் பரிசுத்தவான்களை தொந்திரவு பண்ணவும், விரக்தியடைய செய்கிறவனாயும் இருக்கிறான். அவன் கண்ணிகளை வைக்கிறவனாயும், அக்கினி பொறிகளை எறிகிறவனாயும் இருக்கிறான். இதினிமித்தமாகவே, தேவ பிள்ளைகள், இவ்வுலகத்தை விட்டு செல்ல ஏங்குகிறவர்களாயும், புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், மேலே பறந்து சென்று, அங்கு இளைப்பாறவே விரும்புகிறவர்களாயும் இருக்கின்றனர். பரலோகம், இளைப்பாறுதலுக்கான இடம். அங்கு எந்தவித சோதனைக்கேதுவான தாக்குதல்கள் கிடையாது. எப்படி கழுகு உயர பறந்து, அனைத்து ஆபத்துகளிலிருந்து தப்பி, மரத்தின் உச்சியில் அமர்ந்து, இளைப்பாறுகிறதோ, அவ்வண்ணமாகவே, விசுவாசிகள், பிசாசின் அனைத்து தாக்குதலிலிருந்து தப்பி, பரலோகத்தில் இளைப்பாறுகிறவர்களாய், இருக்கின்றனர். பிசாசிற்கு அங்கு வேலையில்லை.

பரலோகம், மிக உயரமான மலைக்கு ஒப்பிடப்படுகிறது. ஆம், பிசாசின், அக்கினியாஸ்திரங்கள் தாக்காதபடி, அது மிக உயரமாய் இருக்கிறது. மரணம் என்பது விசுவாசிகளுக்கு, சோதனை தாக்குதல்கள் நிரம்பிய, யுத்த களத்திலிருந்து, விடுதலையாக்கப்பட்டு, பரலோகத்தில், மகிமைகரமான, வெற்றிகரமான, கிரீடத்தை பெறவே வழியாய் இருக்கிறது.

No Response to “பிசாசின் சோதனைகளினாலே தாக்கப்படுதல் – தொமஸ் வாட்சன். Buffeted by Satan’s temptations! – Thomas Watson”

Leave a Comment