தேவனே, இந்த பாவத்தை அடித்து நொறுக்கும்! – தொமஸ் வாட்சன். Lord, smite this sin! – Thomas Watson.
“உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது. உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.” சங்கீதம் 119:140
நாம் தேவனுடைய வார்த்தையின் பரிசுத்தத்தை நேசிக்கிறோமா? தேவனுடைய வார்த்தையானது, பாவத்தை அடித்து நொறுக்கி, பரிசுத்தத்தில் முன்னேறவே போதிக்கப்படுகிறது. நாம், அதினுடைய ஆவிக்குரிய தன்மையையும், பரிசுத்த தன்மையையும் நேசிக்கிறோமா? பிரசங்கத்தை கேட்கிற அநேகர் அதினுடைய சொல்லாற்றலையும், அழகையும்தான் ரசிக்கின்றனர். அவர்கள், ஒரு நிகழ்ச்சிக்காக வருவது போல (எசே 33:31,32) அல்லது தோட்டத்தில் உள்ள பூக்களை பறிப்பது போல வருகிறார்கள். ஆனால், அவர்கள், தங்களின் பாவ இச்சைகள் அடித்து நொறுக்கப்படவோ அல்லது தங்களின் இருதயம் சுத்திகரிக்கப்படுவதற்கு வருவதில்லை. இவர்கள் மதியீனமான ஸ்திரீயை போன்று இருக்கிறார்கள். ஆம், அவள், தன்னுடைய முகத்தை அலங்கரிக்கிறாள், ஆனால், அவளுடைய உடல் நலத்தையையோ புறக்கணிக்கிறாள்.
தேவனுடைய வார்த்தையின் உணர்த்துதலை நாம் நேசிக்கிறோமா? நம்முடைய பாவத்தை குறித்து கண்டித்து உணர்த்தும்படியான, நம்முடைய மனசாட்சியை கடிந்து கொள்ளும் தேவனுடைய வார்த்தையை நேசிக்கிறோமா? சில நேரங்களில், கடிந்து கொண்டு போதிக்கும்படியாக, ஊழியக்காரனின் கடமையாய் இருக்கிறது. ஒரு ஊழியக்காரன், பிரசங்கபீடத்தில், இனிமையான வார்த்தையை பேசத்தெரிந்தவன், அதே, நேரத்தில் கடிந்து கொள்ளாதவனாய் இருப்பானென்றால், அவன், கூர்மையாக இல்லாத, அழகான கைப்பிடி கொண்ட கத்தியை போன்றவனாய் இருக்கிறான். “சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள்.” (தீத்து 2:15) “Rebuke them sharply!” (Titus 2:15).
கிறிஸ்தவனே, தேவனுடைய வார்த்தையானது, உன்னுடைய பாவத்தை குறித்து கண்டித்து, “நீயே அந்த மனுஷன்” என்று சொல்லும்போது, இவ்விதமான கடிந்துகொள்ளுதலை நேசிக்கிறாயா? ஆவியின் பட்டயமாகிய தேவனுடைய வார்த்தையானது, உன்னுடைய பாவத்தையும், உன்னையும் வகையறுக்கும்போது, ஆண்டவரை ஸ்தோத்தரிக்கிறாயா? அப்படியாக, நீ செய்வாயானால், இதுவே கிருபையின் அடையாளம். நீ உண்மையாகவே, தேவனுடைய வார்த்தையை நேசிக்கிறவன் என்று காண்பிக்கிறது.
ஒரு பொல்லாத இருதயம், தேவனுடைய வார்த்தையின் இனிமையை நேசிக்கும், ஆனால், அதினுடைய கடிந்து கொள்ளுதலை நேசிக்காது. “ஒலிமுகவாசலிலே கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைத்து, யதார்த்தமாய்ப் பேசுகிறவனை வெறுக்கிறார்கள்.” (ஆமோஸ் 5:10). “You hate the one who reproves, and despise him who tells the truth!” (Amos 5:10). அவர்களுடைய கண்கள், அக்கினியாய் பற்றியெரிந்து, விஷப்பாம்பை போல, கடைசியாக, விஷத்தை கக்குகிறவர்களாய் இருக்கின்றனர். “ இவைகளை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.” (அப் 7:54). ஸ்தேவான், அவர்களுடைய பாவத்தை சுட்டி காண்பித்த பொழுது, அதை அவர்கள் தாங்கிக்கொள்ள முடியாதபடி, மிகுந்த கோபமடைந்தனர்.
நாம் தேவனுடைய வார்த்தையின் கடிந்து கொள்ளுதலை நேசிக்கிறோமா என்று எப்படி அறிந்து கொள்வது?
1. ஒரு இருதயத்தை ஆராய்ந்து பார்க்கும் ஊழியத்தின் கீழ் உட்கார வாஞ்சிக்கும் பொழுது. வேலை செய்யாத மருந்துகளை குறித்து எவன் ஒருவன் அக்கறை கொள்ளுவான்? ஒரு உண்மையான, தேவ பக்தி கொண்ட மனுஷன், அவனுடைய மனசாட்சியை கடிந்து கொள்ளாத ஊழியத்தின் கீழ், உட்கார ஆசைப்படமாட்டான்.
2. தேவனுடைய வார்த்தையானது, நம்முடைய பாவத்தை உணர்த்தி காட்டும்படியாக, நாம் ஜெபிக்கும் பொழுது. நம்முடைய இருதயத்தில், கேடான இச்சைகளை வைத்திருபோமென்றால், அதை கண்டு பிடித்து, அழிக்கவே ஆசைபடுவோம். நாம், பாவத்தை மூடுவதற்கு அல்ல, அதை குணப்படுத்தவே விரும்புவோம்.
3. நம் தேவனுடைய வார்த்தைப்பக்கமாய் நம்முடைய இருதயத்தை திறக்கும்போது, இவ்விதமாக சொல்லுவோம், “தேவனே இந்த பாவத்தை அடித்து நொறுக்கும்!”
4. கடிந்துகொள்ளுதளுக்காக, நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கும்பொழுது. நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை.” (சங்கீதம் 141:5). “Let a righteous man strike me, it is a kindness; let him rebuke me, it is oil on my head. My head will not refuse it.” (Psalm 141:5). தாவீது கடிந்துகொள்ளுதலினிமித்தம், சந்தோஷப்பட்டான்.
ஒருவேளை, ஒரு மனிதன், சிங்கத்தின் தாக்குதலுக்கு உட்பட்டிருக்கும் பொழுது, இன்னொருவன், அச்சிங்கத்தை கொன்று, அவனை காபபாற்றுவானென்றால், அவனுக்கு, அவன் நன்றி உள்ளவனாய் இருப்பானல்லவா? அவ்வண்ணமே, நாம், சிங்கம், என்ற பாவத்தின் தாக்குதலில் இருக்கும்பொழுது, ஒரு ஊழியன், தேவனுடைய வார்த்தையின் கடிந்துகொல்லுதலினாலே, அப்பாவத்தை கொன்று நம்மை காப்பாற்றுவாறென்றால், அவருக்கு நாம் நன்றி உள்ளவர்களாய் இருப்போம் அல்லவா?
ஒரு கிருபையுள்ள ஆத்துமா, தேவனுடைய வார்த்தையான கூர்மையான ஈட்டி, தனது பாவத்தின் புண்களைத் துளைக்கும்போது, சந்தோஷப்படுகிறது. ஆம், அவனுடைய காதில் அணிந்துகொள்ளும் ஆபரணத்தை போல, ‘கடிந்துகொள்ளுதல்’ என்ற ஆபரணத்தை அணிந்துக்கொள்ளுவான். “கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொர்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி.” (நீதி 25:12). “Like an earring of gold or an ornament of fine gold is a wise man’s rebuke to a listening ear.” (Proverbs 25:12).
முடிவாக, பாவத்தை உணர்த்திக்காட்டும் பிரசங்கமே, ஆத்துமாவிற்கு நன்மை செய்கிறதாய் இருக்கிறது.
No Response to “தேவனே, இந்த பாவத்தை அடித்து நொறுக்கும்! – தொமஸ் வாட்சன். Lord, smite this sin! – Thomas Watson.”