“தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர் தமக்கு பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார். கர்த்தர் தம்மில் அன்புகூறுகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.” (சங் 145; 18-20) இம்மூன்று வசனங்களிலிருந்து, நாம் கற்றுகொள்ளும் சத்தியம் மிக அருமையானது. இங்கே, ஒரு விசுவாசியின் மூன்று செயல்களும், அதினால் வரும் பலன்களை நாம் பார்க்கலாம். முதலாவதாக, 18 ம் வசனத்தின்படி -ஒவ்வொரு விசுவாசியும் ஜெபிக்கிற மனுஷனாய் இருக்கிறான். ஆம், ஜெபம், அவன் வாழ்வின் மூச்சு, ஜெபம் செய்வதை தவறமாட்டான். ஏனென்றால், அவன், தன் பிதாவோடு, தனிப்பட்ட விதத்தில், அவர் சமூகத்தில், காத்திருப்பதையே வாஞ்சிக்கிறவனாய் இருப்பான். மேலும், அவன், உண்மையாய் ஜெபிக்கிறான். அப்படியென்றால், பாரத்தோடு, ஒப்புகொடுத்த மனதோடு, தன் இருதயத்தை ஊற்றி ஜெபிக்கிறான். அப்படியாக ஜெபிக்கும்போழுது, அவனுடைய ஜெபம் கேட்கப்படுகிறது. “கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” […]
Read More