உன்னை நீயே கேட்டுக்கொள், “நான் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நபராய் இருக்கிறேனா? – சார்ல்ஸ் சிமியோன். Ask yourselves, “Am I this blessed person?” – Charles Simeon.
உன்னை நீயே கேட்டுக்கொள், “நான் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த நபராய் இருக்கிறேனா?
“தன் நேசர்மேல் சார்ந்துக்கொண்டு, வனாந்திரத்திலிருந்து வருகிற இவள் யார்?” (உன்னதப்பாட்டு 8:5).
உன்னை நீயே கேட்டுக்கொள், “நான் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த நபராய் இருக்கிறேனா?”
என்னுடைய பரிசுத்த நடக்கையை குறித்தும், ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள என்னுடைய முழுமையான பக்தியை குறித்தும் மற்றவர்கள் பார்க்கிறவன்னமாக, இந்த உலகத்தில் வாழ்கிறேனா?
நான், உலகத்தை நேசிப்பதற்குப் பதிலாக, அதை மந்தமான வனாந்தரமாகக் கருதுகிறேனா?
இந்தப் பொல்லாத உலகத்தின் ஆடம்பரங்களையும் மாயைகளையும், மாம்சத்தின் பாவ இச்சைகளையும் நான் கைவிடுகிறேனா?
நான் இந்த உலகத்திற்கும், அதின் ஆசை இச்சைகளுக்கும், அதின் பழக்கவழக்கங்களுக்கும், அதின் நட்புக்கும் மரித்தவனாய் இருக்கிறேனா?
நான் “அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேனா? அதினால், மரணத்தின் கொடூரமான வலியில் இருந்த மனிதனை மதிக்காமல் இருப்பேனோ? (கலா 6:14)
இந்த வனாந்தர உலகத்தின் வழியாக நான் கடந்து செல்லும்போது, “கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று” என்று சொல்லி அன்பான இரட்சகரிடம் நான் தொடர்ந்து சார்ந்து கொண்டிருக்கிறேனா? (ஏசாயா 45:24)
இவைகள் உங்களைப் பொறுத்தவரை உண்மையாக இருந்தால், உங்கள் இரக்கமுள்ளமுள்ள பிரதான ஆசாரியராக, தேவைப்படும் ஒவ்வொரு நேரத்திலும், அவர் உங்களுடன் இருப்பார்:
அவருடைய ஞானத்தால் உங்களுக்கு அறிவுரை கூற,
அவருடைய வல்லமையால் உங்களை நிலைநிறுத்த, மற்றும்
அவருடைய நன்மைகளால் உங்களை வளப்படுத்த!
இந்த மந்தமான வனாந்தர உலகில் உங்களுக்கு எவ்வளவு போதுமான ஆதரவு உள்ளது! உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும் இரட்சகர் உங்களைப் பாதுகாக்கிறார், உங்கள் மீது அக்கறை காட்டுகிறார், அவருடைய கண்மணியாக உங்களைக் பாதுகாக்கிறார்!
உங்கள் அன்புக்குரிய ஆண்டவராகிய இயேசு, “வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவர்!” (யூதா 24).
No Response to “உன்னை நீயே கேட்டுக்கொள், “நான் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நபராய் இருக்கிறேனா? – சார்ல்ஸ் சிமியோன். Ask yourselves, “Am I this blessed person?” – Charles Simeon.”