The Christian’s never-failing resort. – C.H.Spurgeon. கிறிஸ்தவனின் ஒருபோதும் தோல்வியடையாத புகலிடம். – சி.எச்.ஸ்பர்ஜன்.
“நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியபடுத்துங்கள்.” பிலி 4:6
ஜெபம், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒவ்வொரு இக்கட்டான நிலையிலும் கிறிஸ்தவர்களின் ஒருபோதும் தோல்வியடையாத புகலிடமாய் இருக்கிறது. உங்களது வாளை பயன்படுத்த முடியாதபோது, ஜெபம் என்கிற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளலாம். உங்கள் துப்பாகித்தூள் ஈரமாக இருக்கலாம், உங்களுடைய வில் நாண் உடைந்திருக்கலாம், ஆனால், ஜெபம் என்கிற ஆயுதமானது, எடுத்து பயன்படுத்த, எப்பொழுதும் ஆயத்தமாகவே இருக்கிறது. லிவியாதான் என்னும் சத்துருவானவன், ஈட்டியை பார்த்து சிரிக்கலாம், அதேவேளையில், ஜெபத்தை கண்டு நடுங்குகிறவனாய் இருக்கிறான். வாளும், ஈட்டியும், துருபிடிக்காத வண்ணம், அதற்கு புதுபித்தல் அவசியம். ஆனால், ஜெபம், ஒருபோதும் துருபிடிக்காது. நாம் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. அது சிறந்ததையே செய்கிறது.
ஜெபமானது, யாராலும் மூடமுடியாத திறந்த கதவு. பிசாசுகள், உங்களை எல்லா பக்கங்களிலும் சூழ்ந்திருக்கலாம் – ஆனால் மேல்நோக்கி செல்லும் பாதை எப்போதும் திறந்தே இருக்கும், அந்த சாலை தடையின்றி இருக்கும் வரை, நீங்கள் எதிரியின் கைகளில் சிக்க மாட்டீர்கள். நமது தேவைகளின் நேரத்தில் நம்மை ஆதரிக்க பரலோக உதவி நமக்கு இருக்கும் வரை, நம்மை ஒருபோதும் எந்த வித ஆதிக்கமோ, அல்லது புயல் போன்ற சோதனையோ எடுத்துப்போட முடியாது.
ஜெபமானது, கோடை காலமோ அல்லது குளிர் காலமோ, எந்த காலத்திலும், அதினுடைய செயல் குன்றிப்போகாதபடி, சிறப்பானதாகவே இருக்கும். ஜெபமானது, எந்த சூழ்நிலையிலும், அது கடுமையான இரவு நேரமாக இருக்கட்டும், வியாபாரத்தின் மத்தியிலாக இருக்கட்டும், நண்பகல் வெயில் நேரமாகவோ, எந்த சூழ்நிலையிலும், கேட்கப்படுகிறதாய் இருக்கிறது. ஆம், ஒவ்வொரு நிலையிலும், அது வறுமையோ, வியாதியோ, குழப்பமோ, அல்லது அவதூறோ, அல்லது பாவமோ, எந்த வேளையிலும், கர்த்தர், நம் ஜெபத்தை கேட்டு, பதில் அளிக்கிறவராய் இருக்கிறார்.
ஜெபம், எப்போதும் பிரயோஜனமாகவே இருக்கிறது. உண்மையான ஜெபம், எப்போதும் மெய்யான வல்லமை கொண்டது. நீங்கள் கேட்பதை எப்போதும் பெறாமல் இருக்கலாம், ஆனால், உங்களுடைய உண்மையான தேவைகள், எப்போதும் வழங்கப்படும். தேவன், ஒருவேளை, தம்முடைய பிள்ளைகளுக்கு, எழுத்தின்படி, கொடாவிட்டாலும், அவர், ஆவியின்படி கொடுக்கிறவராய் இருக்கிறார். அதாவது, அவர், ஒருவேளை, உனக்கு ரொட்டி கொடாவிட்டாலும், அதற்குரிய சிறந்த மாவை கொடுத்தால், நீர் கோபப்படுவீரா? ஒருவேளை, உம்முடைய சரீர பிரகாரமான வியாதியை குணமாக்காவிட்டாலும், இவ்விதமான வேளையை, ஆண்டவர் பயன்படுத்தி, உன்னில் இருக்கிற, ஆவிக்குரிய வியாதியை குணப்படுத்துவதினால், நீர் கோபப்படுவீரா? உன்னுடைய உபத்திரவம் நீக்கப்படுவதை காட்டிலும், அது உன்னை பரிசுத்தப்படுத்துவதற்கு ஏதுவாக இருக்குமென்றால், அது உனக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும். என் ஆத்துமாவே! ஆண்டவர், எப்பொழுதும் உன்னுடைய ஆவலை, நிறைவேற்றுகிறவராய் இருப்பதினால், உன்னுடைய ஜெபத்தையும், வேண்டுதலையும் ஏறெடுக்க மறவாதே.
“ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.” (எபி 4:16).
No Response to “The Christian’s never-failing resort. – C.H.Spurgeon. கிறிஸ்தவனின் ஒருபோதும் தோல்வியடையாத புகலிடம். – சி.எச்.ஸ்பர்ஜன்.”