இரட்சிப்பை மிகவும் பெரியதாக மாற்றுவது எது?-மார்டின் லாய்ட் ஜோன்ஸ். What Makes Salvation So Great – Martyn Lloyd Jones.

Published August 29, 2023 by adming in Pastor's Blog

இன்னும் அற்புதமானது வேறு எங்கே இருக்கிறது?

இந்த நவீன உலகத்தில், இந்த “மிகப்பெரிய இரட்சிப்பு” போன்ற அற்புதமானது வேறு எதுவும் இல்லை. (எபி 2:3) பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்ற அறிவுக்கு ஒப்பிடத்தக்கது எதுவாக இருக்கும்? இன்று இரவில் நான் இறந்தாலும் பரவாயில்லை என்று தெரிந்தும், நிம்மதியாக படுத்து உறங்குவதை விட அற்புதம் வேறு எதுவாக இருக்கும்? நான் கடவுளுடைய கோபாக்கினையிளிருந்து தப்பிக்கப்பட்டு, நித்தியமான வாழ்வை பெற்ற நிச்சயத்தை உடையவனாய் இருக்கிறபடியால், நான் இன்றைக்கு இறந்தாலும், அடுத்த நொடி பொழுதில், அவருடைய பிள்ளையாக, பரலோகத்தில் விழித்துக்கொள்கிறவனாய் இருப்பேன் என்ற ஆழமான நிச்சயத்தை பெற்ற அற்புதத்தை காட்டிலும் வேறு எதுவாக இருக்கும்? ஓ, கிறிஸ்துவின் ஐக்கியம் எவ்வளவு அற்புதமானது.

ஆனால், இன்னும் அற்புதமான ஒன்று இருக்கிறது – அதுதான் வரவிருக்கும் உலகம். இந்த உலகம் அழிவதற்குகேதுவான உலகம். இது ஒரு பாவம் நிறைந்த உலகம். இப்படிப்பட்ட உலகத்தை மேம்படுத்த, புதிய ஏற்பாடு எதுவும் சொல்லவில்லை. உண்மையில் சொல்லப்போனால், இவ்வுலகம், இன்னும் போக போக, மோசமாகத்தான் போகும் என்றுதான் சொல்லுகிறது. ஆனால், “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) என்று புதிய ஏற்பாடு சொல்லுகிறது.

ஓ, கிறிஸ்துவோடு கொண்ட ஐக்கியம் எவ்வளவு அற்புதமானது.

கிறிஸ்துவானவர், தேவ குமாரனாய், நியாயத்தீர்ப்பை கொடுக்கும் படியாக, இவ்வுலகத்திற்கு வருவார் என்று புதிய ஏற்பாடு சொல்லுகிறது. இவ்வுலகத்தில் உள்ள அனைத்தும் நெருப்பினால் உருகி, வெந்து, அழிக்கப்பட்டு, அனைத்தும் புதிதாக்கப்படும். இப்படிப்பட்ட புதிய வானம், புதிய பூமியில் யார் வாழ்வார்கள்?

கிறிஸ்தவனுடைய பொக்கிஷம்

நீயும், நானும் கிறிஸ்தவர்களாய் இருப்போமென்றால் – “இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.”(எபி 2:5). “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” (எபி 1:14). “இரட்சிப்பின் சுதந்திரவாளிகள்” -ஆம், அவர்கள்தான் நாம். “நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே” (ரோமர் 8:17). “ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது” (ரோமர் 8:22,23,19).

ஒருவேளை, இவ்வுலகம், அணுகுண்டுவினால் தாக்கப்பட்டு, அழிக்கப்பட்டு போனாலும், கிறிஸ்தவனுக்கு ஒரு கவலையும் இல்லை. அவனுடைய பொக்கிஷம் இவ்வுலகத்தில் அல்ல. அவனுடைய பொக்கிஷம், அவன் வைத்திருக்கிற வங்கி கணக்கிலோ, அல்லது அவனுடைய வேலையிலோ அல்ல. அவன் மற்றுமொரு உலகத்திற்காக வாழ்பவன். அவன் தன் இருதயத்தை வருகிற உலத்தின் மகிமையின்மேல் வைத்திருப்பவன். “இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே” (எபி 2:5)

அதினால்தான், “இவ்வளவுபெரிதான இரட்சிப்பினாலே” இது அளிக்கப்படுகிறது. விவரிக்க முடியாத ஒரு மகிமைக்காக நாம் தயாராகி வருகிறோம். நம்முடைய ஆண்டவர் சொல்லுவதை கேளுங்கள், “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். (யோவான் 14:1-3) இந்த உலகம்தான்  “இவ்வளவு பெரிதான இரட்சிப்பினாலே” (எபி 2:3) நமக்கு அளிக்கப்படுகிறது.

இதை நீ விசுவாசிக்கிறாயா? இதிலே நீ களிகூருகிறாயா?


David Martyn Lloyd-Jones was a Welsh Congregationalist minister and medical doctor who was influential in the Calvinist wing of the British evangelical movement in the 20th century. For almost 30 years, he was the minister of Westminster Chapel in London

No Response to “இரட்சிப்பை மிகவும் பெரியதாக மாற்றுவது எது?-மார்டின் லாய்ட் ஜோன்ஸ். What Makes Salvation So Great – Martyn Lloyd Jones.”

Leave a Comment