ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல் – தொமஸ் வாட்சன். One sin lived in! Thomas Watson (1620-1686)

Published February 29, 2024 by adming in Pastor's Blog

தெய்வ பக்தியுள்ள ஒரு மனுஷன், ஒரே ஒரு பாவத்தில் வாழும்படியான வாழ்க்கை எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

1. ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், சாத்தான், இன்னும் உனக்கு எதிராக அனேக பாவங்களை கொண்டுவர வழிவகை அமைத்துவிடும். வேட்டையாடுபவன், ஒரே ஒரு இறக்கையை கொண்டு பறவையை பிடித்து வைத்துக்கொள்ள முடியும். அவ்வண்ணமாக, ஒரே ஒரு பாவத்தினால், பிசாசு, யூதாசை பிடித்து வைத்துக்கொண்டான்.

2. ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், சரியான இருதயம் அல்ல. ஒரு எதிராளியை, தனது வீட்டில், மறைத்து வைப்பவன், அவனுடைய தலைவனுக்கு துரோகி. அதுபோல, ஒரு பாவத்தில், ஈடுபடுபவன், துரோகி, நயவஞ்சகன்!

3. ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், ஒரு சிறிய திருட்டுதான், இன்னும் பெரிய திருட்டுக்கு எப்படி வழிவகுக்குதோ, இன்னும் அனேக பாவங்களுக்குள்ளாக செல்ல வழிவகுக்கும். பாவங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தப்பட்டதாய் இருக்கிறது. ஆம், ஒரு பாவம்தான், இன்னும் அனேக பாவங்களை கொண்டு வரும். தாவிதின் விபச்சாரம், கொலை செய்ய வழி வகுத்தது. ஒரு பாவம், ஒன்றோடு போகாது. கூட்டில் இருக்கும் ஒரு முட்டையானாலும், பிசாசு, அம்முட்டையின்மீது உட்கார்ந்து பாவம் என்கிற குஞ்சுகளை பொரிப்பான்.

4. ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், ஒரு பாவமோ அல்லது அதிகமான பாவமோ, அது, தேவனுடைய சட்டத்தை மீறுவதாகும். “எப்படியெனில், ஒருவன் நியாயபிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும், குற்றவாளியாயிருப்பான்.” (யாக்கோபு 2:10). குற்றம், தேசத்துரோகம் மற்றும் கொலைக்கு எதிராக ராஜா சட்டம் இயற்றலாம். இவற்றில் ஒன்றை மட்டும் ஒரு மனிதன் குற்றவாளியாக இருப்பானென்றால், அவன் அச்சட்டத்தை மீறுபவனாவான்.

5. ஒரே ஒரு பாவத்தில் வீழ்தல், கிறிஸ்துவானவர் உன் வாழ்வில் வருவதில் தடை செய்கிறாய். எப்படி தண்ணீர் போகும் குழாயில், ஒரே ஒரு கல் இருந்துக்கொண்டு அத்தண்ணீர் போவதை தடை செய்கிறதோ, ஒரே ஒரு பாவம், அவனுக்குள்ளாக, இயேசுவானவர் வருவதை தடை செய்கிறது.

6. ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், உன்னுடைய அனைத்து நல்ல செயல்களை கெடுத்து விடுகிறது. எப்படி ஒரே ஒரு செத்த ஈ விலையேறப்பெற்ற பரிமள தைலம் முழுவதையும் கெடுத்து விடுகிறதோ, எப்படி ஒரு சொட்டு விஷம், பால் அனைத்தும் கெடுத்து விடுகிறதோ, அபிமலேக் என்னும் மோசமானவன், எப்படி அவனுடைய சகோதரர்கள் 70  பேரை அழித்தானோ, ( நியாயாதிபதிகள் 9:5) அப்படியே, ஒரு மோசமான பாவம், அனைத்து ஜெபங்களையும், ஜெப வாழ்க்கையே கெடுத்துவிடும்.

7. ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், உன்னுடைய மனசாட்சியின் சமாதானத்தையே கெடுத்து விடும். ஐயோ! என்ன ஒரு கொட்டும் தேள் நமக்குள்ளே கிடக்கிறது. ஒரே ஒரு பாவம், ஒரு கிறிஸ்தவனுடைய சமாதானத்தை கெடுத்து, கொள்ளையடித்து போகிற, கடற்கொள்ளையனை போன்றது. இசைக்கருவியில் உள்ள, ஒரே ஒரு இசைக்கம்பி அறுக்கப்பட்டு போகுமானால், முழு இசையையே கெடுத்து விடும். ஆம், ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், நம்முடைய முழு சமாதானத்தையே கெடுத்து விடும்.

8. ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், முழு வாழ்க்கையே சீரழித்து விடுகிறது. ஒரு மனுஷனை கொல்லுவதற்கு, ஒரே ஒரு வியாதி போதும். சோளத்தோட்டத்தில் உள்ள வேலி நன்றாக பலமாக போடப்பட்டிருந்தும், ஒரே ஒரு சின்ன ஓட்டை இருக்குமாயின், காட்டு விலங்குகள், அதினுள்ளே வந்து, முழு காட்டையே சீரழித்து விடும். ஒரே ஒரு பாவம் உன் வாழ்வில் அனுமதிக்கும் போது, அது போதும் பிசாசு உள்ளே நுழைவதற்கு. ஒரு போர் வீரன் வீழ்த்தப்பட, எதிராளிகளின் தோட்டாக்கள் உள்ளே நுழைவதற்கு, அவனுடைய கவசத்தில், ஒரே ஒரு சின்ன இடைவெளி போதும். அதுபோலவே, ஒரே ஒரு பாவத்திற்கு நீ இடம்கொடுக்கும் பொழுது, உன்னுடைய ஆத்துமாவின் ஒரு பகுதியை பாதுகாப்பில்லாமல் விட்டுவிடுகிறாய். மேலும், நீ கடவுளுடைய கோபத்திற்குள்ளாகப்படுகிறாய்.

ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், அது ஒரு பாவமோ, அனேக பாவமோ, பரலோகத்திற்குள் நுழைய அவனை தகுதியற்றவனாக்குகிறது.

ஆகவே, ஒரே ஒரு பாவம் என்று சொல்லி, அதிலே உல்லாசமாய் இருப்பதில் எச்சரிக்கையாய் இரு. எந்த ஒரு பாவமாக இருந்தாலும், அந்த பாவதோடுள்ள உறவை முறித்து விடு. கோலியாத் என்ற பாவத்தை அழித்துவிடு. “உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பாதாக.” ரோமர் 6:12. இதுவே மூல பாஷையில், “ பாவம் என்கிற ராஜா உங்களை ஆளாதிருப்பாதாக.”  என்று சொல்லுகிறது.

கிருபை மற்றும் பாவம் ஒன்றாக இருக்கலாம், ஆனால், கிருபையும் பாவத்தின் மேல் பற்றும் ஒன்றாக இருக்க முடியாது. ஆகையால், இனி பாவத்திற்கு இடம் கொடாமல், அவற்றை ஒவ்வொரு நாளும் அழித்து போடுங்கள்.

“மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.” ரோமர் 8:13.

“ஆகையால், விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை. விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.” கொலோசெயர் 3:5

No Response to “ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல் – தொமஸ் வாட்சன். One sin lived in! Thomas Watson (1620-1686)”

Comments are closed.