Labour to be rich in faith – Thomas Brooks.
1.) விசுவாசம் ஆத்துமாவின் மிகப்பெரிதான பாதுகாவலன்
எபேசியர் 4:16 ல் இவ்விதமாக படிக்கிறோம், “பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். ‘எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள்.’ உங்கள் போர் அணிகலன்கள் எதையும் தவிர்த்து விடாதீர்கள். ஆனால், எல்லாவற்றிக்கும் மேலாக, விசுவாசம் என்னும் கேடகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எப்படி கேடயம், சரீரத்தை பாதுகாக்கிறதோ, அவ்விதமாக ஒரு விசுவாசியின் ஆத்துமாவை, விசுவாசம் பாதுகாக்கிறது. ஆம், பிசாசினுடைய, எல்லாவித கொடிய, அக்கினியாஸ்திரங்களுக்கு எதிராக அவனை பாதுகாக்கிறது. விசுவாசம், ஆத்துமாவை வலிமையாக்குகிறது, விசுவாசம், ஆத்துமாவை வெற்றியுள்ளதாக்குகிறது, அது சிறைபிடிப்பை சிறைப்படுத்துகிறது, பிசாசை சங்கிலியினால் கட்டுகிறது, அது அவனை ஒவ்வொரு ஆயுதத்திலும் முறியடிக்கிறது. ஆகவே எல்லாவற்றிக்கும் மேலாக, விசுவாசத்தில் சிறப்பாய் வளர உழையுங்கள்.
2) இரண்டாவதாக, விசுவாசத்தின் வளர்ச்சி, மற்ற அனைத்து கிருபையில் வளர உதவுகிறது.
விசுவாசம் எவ்வளவு செழிப்பாய் இருக்கிறதோ, அந்த அளவுக்குத்தான், மற்ற கிருபைகளும் செழிப்பாய் இருக்கும். நீ இதில் சிறப்பாய் இரு, மற்ற அனைத்து காரியங்களிலும், சிறப்பாய் இருப்பாய். இதில், பலவீனமாய் இருப்பாய் என்றால், மற்ற அனைத்து காரியங்களிலும், பலவீனமாய் இருப்பாய். விசுவாசம், மற்ற அனைத்து கிருபைகள் மேல், தாக்கத்தை ஏற்படுத்துகிறதாய் இருக்கிறது. விசுவாசம் என்பது, முத்துக்களை கொண்டு கட்டின வெள்ளி நூலுக்கு ஒப்பாய் இருக்கிறது. அந்த வெள்ளி நூல் என்ற விசுவாசமானது மற்ற அனைத்து முத்துக்களான கிருபைகளை, சுறுசுறுப்பாக்கி, பலப்படுத்துகிறது. எந்த ஒரு மனுஷன், விசுவாசத்தில் செழிப்பாய் இல்லையோ, மற்ற அனைத்து கிருபைகளிலும் செழிப்பாய் இருக்க முடியாது. விசுவாசம் எப்படியோ, அப்படிதான், ஒவ்வொருத்தருடைய நம்பிக்கை, சந்தோஷம், பயம், அன்பு, தாழ்மை, பொறுமை இருக்கும். ஆகையால், முக்கியமாக, நீ இந்த விசுவாசம் என்ற கிருபையில் அதிகமாய் செழித்தோங்க, உழைக்க வேண்டும்.
3) ஒரு ஆவிக்குரிய மனுஷனில் காணப்படும் கிருபைகளிலெல்லாம், விசுவாசமானது மிகுந்த உபயோகரமான கிருபையாய் இருக்கிறது. ஆகையால், எல்லாவற்றை கட்டிலும், விசுவாசத்தில் சிறப்பாய் விளங்கிட, நீ உழைக்க வேண்டும்.
விசுவாசம், ஒரு கிறிஸ்தவனுடைய வலது கண், அது இல்லாமல், அவன் கிறிஸ்துவை பார்க்க முடியாது. அது அவனுடைய வலது கை, கிறிஸ்துவுக்காக, அவன் எதையும் செய்ய முடியாது. அது அவனுடைய நாவு, கிறிஸ்துவுக்காக, எதுவும் அவன் பேச முடியாது. அது அவனுடைய, மிக முக்கியமான உயிராய் இருக்கிறது. அது இல்லாமல், அவன் கிறிஸ்துவுக்காக, வாழ முடியாது.
சிலர் சொல்லுவதுண்டு, மீதிய அரசன், எதை தொட்டாலும், தங்கமாய் மாறுமாம். நான் உறுதியாய் சொல்லுகிறேன், விசுவாசமானது, எதை தொட்டாலும், தங்கமாகும். அதாவது, விசுவாசமானது, வாக்குத்தத்தை தொடும்போது, அது நன்மைக்கேதுவாக மாறுகிறது. விசுவாசத்தை கொண்டு நாம் என்னவெல்லாம் செய்கிறோமோ, அது நம்முடைய ஆத்தும நன்மைகேதுவாக மாறுகிறது. விசுவாசம் தேவனை பார்த்து சொல்லுகிறது, ‘இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.’ கிறிஸ்துவை பார்த்து, தோமாவுடன் சொல்லுகிறது, ‘என் ஆண்டவரே! என் தேவனே!’ அது நீதியின் கிரீடத்தை பார்க்கும்பொழுது, ‘எனக்காக நீதியின் கிரீடம் வைக்கப்பட்டுள்ளது’ என்று சொல்லுகிறது. விசுவாசம் என்பது நம்மை ஊட்டி வளர்க்க ஆகாரம், மற்றும் நம்மை உற்சாகப்படுத்த திராட்சை சாறு, மற்றும் நம்மை பலப்படுத்துவதற்கான ஒரு நல்ல விஷயமாய் இருக்கிறது. விசுவாசம் என்பது நம்மைக் காக்கும் பட்டயமாகவும், நம்மை வழிநடத்தும் வழிகாட்டியாகவும், நம்மைத் தாங்கும் ஒரு தடியாகவும், நம்மைக் குணப்படுத்த ஒரு மருந்தாகவும், நம்மை ஆறுதல்படுத்த ஒரு நண்பனாகவும், நமக்கு பரலோகத்தைத் திறக்கும் பொன் சாவியாகவும் இருக்கிறது. ஆம், ஒரு விசுவாசிக்கு, அனைத்து கிருபைகளை காட்டிலும், விசுவாசம் என்கிற கிருபை, மிக பிரயோஜனமுள்ளதாய் இருக்கிறது. ‘விசுவாசமில்லாமல் தேவனிடத்தில் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்.’ (எபி 11:6; 4:2) நீ செய்யும் அனைத்து ஜெபங்கள், நீ கேட்கும் அனைத்து பிரசங்கங்கள், நீ சிந்தும் அனைத்து கண்ணீர், நீ கொடுக்கும் அனைத்து உதவிகள், இவை அனைத்தும், விசுவாசம் என்ற கையால் நிர்வகிக்க முடியாவிட்டால், அனைத்தும் இழப்புதான்.
4) நீ எல்லாவற்றை காட்டிலும், விசுவாசத்தில் செழித்தோங்க, அதிகமாக உழைக்க வேண்டும். ஏனென்றால், ஒருவனுடைய ஆவிக்குரிய வாழ்வில், அவனுடைய அனைத்து கிருபைகளை காட்டிலும், விசுவாசமே அவனை உற்சாகமுள்ளவனாகவும், உயிரோட்டமுள்ளவனாகவும் ஆக்குகிறது. ஆம், நான் சொல்லுகிறேன், விசுவாசத்தை காட்டிலும், வேறு எதுவும், அவனை உற்சாகமுள்ளவனாகவும், சுறுசுறுப்புள்ளவனாகவும், மாற்றாது. எபிரெயர் 11 ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட அத்தனை விசுவாச வீரர்களை நாம் பார்க்கலாம். அவர்கள், வெறும் தேவனுடைய கட்டளைனிமித்தமாக, தங்கள் தேசங்களையும், சொந்த பந்தங்களையும் விட்டார்கள். விசுவாசம், ஆத்துமாக்களை மிகுந்த உற்சாகமுள்ளதாக மாற்றுகிறது. விசுவாசம், வேலை செய்தாலொழிய வேற எந்த வேலையும் நடக்காது. விசுவாசம், சாலமோனின் புத்திசாலியான ஸ்திரீயை போன்றது. அவள் தன்னுடைய வேலையாளை சுறுசுறுப்பாக்கியது. விசுவாசமானது, வேலையில் சந்தோஷத்தை கொடுக்கிறது. ‘ஆபிரகாம், என்னுடைய நாளை காண ஆசையாயிருந்தான், கண்டு களிகூர்ந்தான்.’ விசுவாசம், நம்பிக்கையை வளர்க்கிறது. ரோமர் 8:24,25; விசுவாசம் தேவனுகேற்ற துக்கத்தை உண்டாக்குகிறது. சக 12:10. அது பொறுமையை உண்டாக்குகிறது. விசுவாசமானது ஒரு மனிதனை ஆண்டவருக்காக பணி செய்யவும், பாடுபடவும், பொறுமையாய் காத்திருக்கவும், அவரில் நடக்கவும், செய்கிறது. ஆகவே, நீ விசுவாசத்தில் அதிகமாய் செழித்தோங்க, உழைக்க வேண்டும்.
5) நீ எல்லாவற்றை காட்டிலும், அதிகமாய் விசுவாசத்தில் செழித்தோங்க வேண்டும். ஏனென்றால், பிசாசானவன், உன் விசுவாசத்தை பலவீனப்படுத்த முழு மூச்சாய் செயல்படுவான். ஓ! பிசாசின் பெரிதான திட்டம், உன்னுடைய வெளிப்புற காரியங்களை காட்டிலும், உட்புற காரியங்களைத்தான் முக்கியமாக பலவீனப்படுத்துவான். பிசாசு, ஒரு மனிதனிடம், நிறைய அறிவு, பக்தி, பொன், ஆகியவற்றால் திருப்தி செய்து, அவனுடைய ஆத்துமாவையோ விசுவாசம் அற்றதாய் அல்லது விசுவாசத்தில் குறைவுள்ளதாய் வைத்திருக்க விரும்புவான். பிசாசின் பெரிதான திட்டம் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை பெலவீனப்படுத்துவதே ஆகும். பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். (லூக்கா 22:31,32). சாத்தான் உன் விசுவாசத்தை பார்த்து பற்கடிக்கிறவனாய் இருக்கிறான். உன் விசுவாசத்தை மேலும் பலவீனப்படுத்தவும், முறியடிக்கவுமே அவனுடைய திட்டமாய் இருக்கிறது.
தொடரும்…
No Response to “Labour to be rich in faith – Thomas Brooks.”