Fighting Pornography, Man to Man – Dr. Owen Strachan. ஆபாச படம் பார்ப்பதை எதிர்த்து போராடுதல் – Dr.ஓவன் ஸ்ட்ரசன்.

Published March 30, 2023 by adming in Pastor's Blog

இன்றைய வாழ்க்கையின் எளிமையான உண்மைகளில் ஒன்று: நாம் பாலிய உறவு சம்பந்தப்பட்ட கலாச்சாரத்தில் இருக்கிறோம். ஆண்களாகிய நாம் இதை நன்றாக உணர்கிறோம். சராசரியாக, ஆண்களாகிய நம்மிடம் பெண்களை விட வலுவான பாலிய ஈர்ப்பு (செக்ஸ் டிரைவ்) உள்ளது. மேலும் நாம் கண்ணால் பார்த்து அறியும்படியான காரியங்களில் சார்ந்தவர்களாக இருக்கிறோம். இது இன்று வெட்கக்கேடான பாலுணர்வை தூண்டி அதில் ஆதாயம் தேடுகிறவர்களுக்கு சுலபமாக உள்ளது. நாமும் சில வேளைகளில் இதற்கு தொடர்பு உடையர்வர்களாகி விடுகிறோம். இது உண்மைதான், நீங்கள் வெளியே கடைகளுக்கு செல்லும்போது அல்லது உடற்பயிற்சி ஸ்தலத்திற்கு செல்லும்போது ஒவ்வொரு திருப்பத்திலும் நீங்கள் ஒழுக்கமின்மையை எதிர்கொள்கிறீர்கள். உண்மைதான், உங்கள் ஃபோன், டிவியை ஆன் செய்யும் போது ஒவ்வொரு முறையும் பாலுறவு சம்பத்தபட்ட காட்சிகள் வந்து போவதை பார்க்கலாம்.

ஆனால் ஆபாசப் படங்களைக் கருத்தில் கொள்ளும்போது இது எவ்வளவு உண்மையாய் இருக்கிறது. ஆபாசப் படங்கள் நம் கலாச்சாரத்தில், நமது அன்றாட அனுபவத்தில் ஊடுருவிவிட்டன, நாம் “ஆபாச கலாச்சாரத்தில்” வாழ்கிறோம் என்று முடிவு செய்வது தவறில்லை. அளவீடுகளின்படி, ஒரு மாதத்தில் 50-100% ஆண்கள் ஆபாச படங்களை பார்ப்பதில் ஈடுபடுகின்றனர். இதற்குக் காரணம் ஆபாசப் படங்கள், நான் சொன்னது போல், நமது டிஜிட்டல் உலகத்தின் எல்லா மூலைகளிலும் “ஊடுருவி” உள்ளது.  கடந்த நாட்களில், நீங்கள் ஆபாசப் படங்களைத் தேட வேண்டியிருந்தது, மேலும் ஒரு கவர்ச்சியான பத்திரிகையை அலமாரியில் இருந்து எடுக்க வேண்டியிருந்தது. இப்போதெல்லாம், நீங்கள் இன்ஸ்டாகிராமில் எதையாவது தேட சென்றால், ஆபாசமான, கவர்சிகரமான காட்சிகள் சோதனைக்கென்றே குப்பை மாதிரி வந்து விடுகிறது. சொல்லப்போனால், ஆபாச படம் இப்போது உங்களைத் தேடி வருகிறது.

நம்மைப் போன்ற இதயங்களை கொண்ட மக்களுடன், இதுபோன்ற கலாச்சாரத்தை எதிர்த்துப் போராட, நீங்கள் முதலில் இந்தப் பிரச்சினையைப் பற்றி சரியாக சிந்திக்க வேண்டும். அந்த நோக்கத்தில், ஆபாச படங்களை பார்ப்பதை பற்றிய நான்கு உண்மைகள் இங்கே உள்ளன. இவ்விஷயங்கள் உங்களுக்கு தெளிவுபடுத்தும் மேலும் இது உங்களுக்கு பெரிதும் உதவும் என்று நம்புகிறேன்.

முதலில், நமது கலாச்சாரம் பாலுறவை (Sex) பற்றியது. நமது கலாச்சாரம், செக்ஸ், முடிவில்லா மகிழ்ச்சியை நமக்கு அளிக்கிறது என்று வாக்கு அளிக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம், எது அழகாகவும், நலமாகவும் தெரிகிறதோ, அதாவது, – பெண் உடலின் வடிவமைப்பு, மற்றும் உடலுறவு – அதுவே நமது வாழ்க்கைக்கு பிரதானம் என்று கற்பிக்கிறது. இதைதான் ஆபாச படம் கற்பிக்கிறது.  இதன் மூலம், வாழ்க்கையின் அனைத்து ஏற்ற தாழ்வுகளிலும் ஒரு பெண்ணை அன்பு செலுத்தி உடன்படிக்கை செய்வதற்கு பதிலாக, ஆபாசத்தை நுகரும் ஒரு ஆண், பெண்ணை தனது இச்சைகளின் பொருளாக தனிமைப்படுத்துகிறான். தொழில்நுட்பத்தை (பல சமயங்களில்) தனது வடிகாலாக பயன்படுத்துவதால், திரையில் வரும் பெண்களை, அவன் விருப்பத்திற்கு எவ்வளவுக்கெவ்வளவு பொருந்துதோ, அதை அவன் பொருத்திக்கொள்கிறான். அவனுடைய கடவுள், அவன் சரீரமும் மற்றும் அவனுடைய ஆசை இச்சைகளுமே. எனவே, தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றபடி, அக்கடவுளை வழிபட்டு சேவிக்கிறான்.

உங்களுக்கு ஆபாசத்தை ஊக்குவிக்குவித்து, திருமணத்திற்கு வெளியே, உடலுறுவை ஒரு பெரிய விஷயமாக கொண்டாடும் கலாச்சாரம், ஒரு பெரிய பொய்யை சொல்லிக்கொண்டே இருக்கிறது. மகிழ்ச்சியை நாம் அனுபவிக்க வேண்டும் என்று கடவுள் நினைத்ததை விட வித்தியாசமான வடிவத்தில் அது உங்களுக்கு மகிழ்ச்சியை விற்கிறது (ஆதியாகமம் 2:18-25ஐ பார்க்கவும்).

இரண்டாவதாக, ஒரு பெண் நமது இச்சைகளின் பாத்திரம் அல்ல (திருமணத்தில் கூட). முதல் உண்மைக்கு பதில் கூரும் வண்ணமாக, “எனக்கு உண்மையில் ஒரு மனைவி தேவை – ஏனென்றால், நான் விரும்பும் போதெல்லாம் உடலுறவு கொள்ளலாம், மேலும் என் இச்சைகளை வெல்லலாம்!” திருமணமான தம்பதிகளுக்கு உடலுறவு (Sex) என்ற பரிசை கடவுள் தருகிறார் என்பது உண்மை, பெருமைக்குரிய உண்மை. இது ஒரு சிறிய பரிசு அல்ல, கணவன்-மனைவி இடையேயான உடல் பந்தம் ஒரு அற்புதமான விஷயம். மேலும், நீங்கள் நேசித்து மற்றும் காதலில் வயப்பட்டு, அதில் அனுபவிக்கக்கூடிய ஒரு மனைவியைப் பெறுவது, ஒரு உதவி மற்றும் ஆசீர்வாதம் – அதில் அவமானம் இல்லை.

ஆனால் இங்கே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்: திருமணத்தை நுகர்வோராக அணுகக்கூடாது. ஆம், கணவனும் மனைவியும் காதல் ரீதியில் ஒன்றாக வேலை செய்ய வேண்டும், இது ஒரு மனைவி, தான் விரும்புவதை விட அதிகமாக உடலுறவுக்கு, தன்னுடைய வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்துகிறாள் என்று அர்த்தம். இது இரண்டு வழிகளிலும் செல்கிறது, உண்மையில், கிறிஸ்தவ திருமணத்தில், நம் சரீரம் நம்முடையது அல்ல (பார்க்க 1 கொரிந்தியர் 7:1-5). ஆனால் இந்த வழியில் தனது கணவனை ஆசீர்வதிக்க ஒரு மனைவி உறுதியளித்தாலும், அந்தப் பெண் ஒருபோதும் நமது இச்சையின் பாத்திரம் இல்லை. அவள் ஒரு வாழும் உயிரினம், தேவனுடைய சாயலில் உருவாக்கப்பட்ட ஒரு நபர், ஒரு கிறிஸ்தவராக இருந்தால், தேவனுடைய மகள் மற்றும் கிறிஸ்துவின் இணை வாரிசு. அவளை அன்புடனும், மென்மையுடனும், புரிதலுடனும், இரக்கத்துடனும் அணுகப்பட வேண்டும்.  ஆபாச படங்கள் எப்படி உன் மனைவியை அணுகவேண்டும் என்று சொல்லி கொடுப்பதில்லை. மாறாக, அவளை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்றும் அவளை எப்படி இழக்கலாம் என்று சொல்லி கொடுக்கும்.

மூன்றாவதாக, நீங்கள் காம இச்சையை கொல்ல வேண்டும், அதை வளர்க்கக்கூடாது. நமது இச்சைகளை மதிக்க நமது கலாச்சாரம் இன்று நம்மைத் தூண்டுகிறது. நமது வலுவான இயற்கை ஆசைகள், உண்மையில், நாம் யார் என்பதை உண்மையாக கூறுகிறது. நமது கலாச்சாரம் “உனக்கு பிடித்ததை செய்” என்று கூறுகிறது. ஆனால் இயேசுவானவர் மிகவும் வித்தியாசமான ஒன்றைக் கூறுகிறார்: கடவுளுடைய பரிசுத்தத்தின் வெளிச்சத்தில், பாவம் எது என்பதை அடையாளம் காணச் சொல்கிறார், பின்னர் அதைக் கொல்ல வேண்டும் என்று சொல்லுகிறார். மத்தேயு 5:29ல், அவர் இந்த கடுமையான வார்த்தைகளை நமக்குத் தருகிறார்: “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.”

நாம், நமது பாவ இச்சைகளையும் ஆசைகளையும் வளர்த்துக் கொள்ளக்கூடாது என்பதே இதன் பொருள். நம் மனைவியல்லாத ஒருவரிடம் நாம் பாலியல் ரீதியாக ஈர்க்கப்பட்டால், அது நம் நினைவில் தோன்றினாலும் கூட, அதற்காக நாம் மனந்திரும்பி கடவுளிடம் பாவ அறிக்கை செய்து ஒப்புரவாக வேண்டும். நாம் பாலுறவு சம்பந்தப்பட்ட இச்சைகளை கொல்ல வேண்டும், அதை வளர்க்கக்கூடாது. இந்த நேரத்தில் உங்களுக்கு ஆபாசப் படம் பார்க்கும் பழக்கம் இருக்கலாம்; துரதிர்ஷ்டவசமாக, பல ஆண்கள் இதை செய்கிறார்கள். வேதம் உங்களுக்கு உதவ இங்கே உள்ளது, ஆனால் அது உங்கள் பாலுறவு இச்சைகளை நிர்வகிப்பதற்கு எந்த உதவியும் செய்யப்போவதில்லை. ஆபாசத்தை கட்டுப்படுத்தும் உத்தி எதுவும் இல்லை; நம்மிடம் அதை அழிக்கும் உத்தி மட்டுமே உள்ளது (கொலோ. 3:1-18). பரிசுத்த ஆவியின் வல்லமையால், நாம் நமது பாவ இச்சைகளை அழித்து, அதினால், சுதந்திரம் பெறுகிறோம்.

மேலும், எண்ணிக்கையிலும், ஜெபத்திலும் வலிமை உள்ளது. உங்கள் மனைவி மற்றும் உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் கணக்கு கொடுக்கிறவர்களாய் (Accountability) இருப்பது நல்லது. தேவன், நம்மை, விசுவாச மக்கள் கூட்டம் என்ற சமுதாயத்தில் இருக்கும்படியாகவே வடிவமைத்திருக்கிறார். மேலும் நம் வாழ்வில் உள்ள பாவங்களை எதிர்கொள்ள ஒருவருக்கொருவர் உதவ நாம் அழைக்கப்பட்டுள்ளோம். ஆபாச படத்தை பார்க்கும் பழக்கத்தை, இரகசிய பாவமாக இருக்க விடாதீர்கள். அதை எதிர்கொண்டு, அதைக் கொன்று, உங்கள் மனைவி மற்றும் நண்பர்களுக்கு கணக்கு கொடுக்கிற பொறுப்பாளியாக இருங்கள்.

நான்காவதாக, உங்களுக்கு ஆபாச படங்களை பார்ப்பதில் பிரச்சனை இருந்தால், நீங்கள் அதின் நச்சுத்தன்மையினால் பாதிக்கப்பட்ட நபராக  இருக்க வேண்டிய அவசியமில்லை, மாறாக நீங்கள் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு, உங்கள் வாழ்வை புதுபித்துக்கொள்ளலாம்.  இன்று ஆபாசப் படத்தின் பயன்பாடு மற்றும் அதின் அடிமைத்தனம் பற்றி நாம் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும். குறிப்பிட்டுள்ளபடி, நமது டிஜிட்டல் கலாச்சாரத்தில் அனைவரும், ஸ்மார்ட்போன் வைத்திருப்பதால், பாவத்தை தூண்டும் ஒரு கருவியை நாம் சுமந்து செல்கிறோம். இத்தகைய சூழலில், பல ஆண்கள் பெரிய அளவில் காம இச்சையை  எதிர்த்துப் போராடுகிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவராக இருந்தால், நான் உங்களுக்கு சொல்லுவது, நீ ஒரு நச்சுத்தன்மைகொண்ட மனுஷன் அல்ல, மாறாக, நீ ஒரு பாவி. ஒரு நச்சுத்தன்மையுள்ள மனிதனுக்கு உண்மையான மதிப்பு இல்லை, இன்று நம் கலாச்சாரம் பொதுவாக ஆண்களிடம் சொல்வது இதுதான். ஆனால் வேதம் சொல்லுகிறது, ஒரு பாவமுள்ள மனிதன் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டுள்ளான், அவனுக்கு உண்மையான மதிப்பும், கனமும் இருக்கிறது, ஆனால், அவனுடைய  பாவ மன்னிப்புக்கு கிறிஸ்துவின் இரத்தம் தேவைபடுகிறது (எபிரேயர் 9:22). நீ கிறிஸ்துவை விசுவாசித்தால், உன்னுடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் – தேவனுடைய இரக்கத்தினாலும், கிருபையினாலும், நீ மீட்கப்பட்டு புதுப்பிக்கப்படுவாய்.

இப்படியாக, மாற்றப்பட்ட உன் வாழ்வு, நீ ஒரு காலத்தில், ஆபாச படங்களை பார்ப்பதற்கும், உன் ஆசை இச்சைகளை நிறைவேற்றுவதற்கும் செலவழித்த நேரம், உன் பெலன், கவனம், ஆகியவற்றை நன்மையான காரியங்களுக்கு உபயோகப்படுத்தலாம். நீ திருமணமாகாத நபராக இருப்பாய்யென்றால், உன்னுடைய சொந்த சபைக்காக நீ உழைக்கலாம். வேலையில் கடினமாக உழைக்கலாம், இருளில் வெளிச்சமாக இருக்கலாம். நீ திருமணமானவராக இருந்தால், நீ ஒரு நல்ல, தெய்வ பக்தியுள்ள கணவராக வாழலாம். உன்னுடைய நாட்களை வீணடிப்பதை நிறுத்திவிட்டு, உன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை நேசிக்கவும், அவர்களோடு உன் நேரத்தை செலவு செய்யவும் ஆரம்பிக்கலாம். நீ மாம்சத்தால் ஆளப்படுவதை நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக பரிசுத்த ஆவியானவரால் ஆளப்படலாம். (ரோமர் 8:9). இதைத்தான் தேவன் உங்களிடத்தில் விரும்புகிறார்.

முடிவுரை

ஆண்களுக்கு இது கடினமான நாட்கள். ஆனால் நம்மில் பலருக்கு சவால்கள் நிறைந்த இந்த நாட்கள் ஆசீர்வாதங்களும் நிறைந்ததாக இருக்கலாம். நம்மில் யாரும் பரீபூரனமானவர்கள் அல்ல. நாம் அனைவரும் பல வழிகளில் தடுமாறுகிறோம், மேலும் ஒவ்வொரு விசுவாசியும், அவன் தன் பணியில், முன்னேறி கொண்டிருக்கிறான். (யாக்கோபு 3:2). ஆனால் ஆபாச படத்தை பார்ப்பதை பற்றிய நல்ல செய்தி இதுதான்: அது கடவுள் அல்ல. அது அனைத்து சக்தியும் வாய்ந்தது அல்ல. அதை நீ வணங்கி, அதற்கு இணங்க தேவையில்லை. கடவுள் எவ்வளவு பெரியவர் என்பதை நீ பார்க்கும்போதும், ​​பாவம் எவ்வளவு கொடூரமானது என்பதை நீ புரிந்துகொள்ளும்போதும், கிறிஸ்து எவ்வளவாய் மன்னிகிறவர் என்பதை நீ புரிந்துகொண்டால், நீ மாற்றத்தை ஏற்படுத்த தயாராக இருப்பாய்.

இது உங்கள் அடுத்த படி: சுதந்திரமாக வாழுங்கள். உங்கள் தொழில்நுட்ப சாதனங்களை புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் அணுகுங்கள். உங்கள் இச்சைகளால் உங்களை ஆள விடாதீர்கள்; மாறாக, தேவனுடைய சத்தியம், தேவ ஆவியானவரால் ஆளப்பட விடுங்கள். அனாவசியமாக ஒரு பெண்ணை குறித்து, டிஜிட்டல் திரையில்(ஸ்மார்ட் போன், டி.வி) ஆராய்ச்சி செய்வதை நிறுத்துங்கள்; மாறாக, உங்களுக்கு முன்னால் இருக்கும் உங்கள் சொந்த மனைவியை நேசிக்கத் தொடங்குங்கள், உங்கள் கால்களை வந்து கட்டிப்பிடிக்கும் உங்கள் சொந்த குழந்தைகளை நேசியுங்கள். இதை முக்கியமாக அறிந்து கொள்ளுங்கள்: உங்கள் கடந்த காலத்தில் எந்த பாவமாக இருந்தாலும், தேவனுடைய கிருபை இன்னும் வலிமையானது. தேவன், போராடுபவர்களையும், தடுமாற்றம் உள்ளவர்களையும், நம்பிக்கையற்றவர்களையும் எடுத்துக்கொண்டு, அவற்றைத் தன் அன்பின் கோப்பைகளாக மாற்ற விரும்புகிறார்.

நாம் ஒரு பாலிய உறவு சம்பந்தப்பட்ட கலாச்சாரத்தில் இருக்கலாம், ஆனால் விசுவாசிகள், அதை விட மிகப் பெரிய ஒன்றின் ஒரு பகுதியாக உள்ளனர்: அதாவது பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த கலாச்சாரம். முதலாவது, சொல்லப்பட்ட காரியம், மாம்சத்தை திருப்திப்படுத்தி, அழிவுக்கு வழிவகுக்கிறது; ஆனால், இரண்டாவது தேவ ஆவியின் மூலம், தேவனால் ஆளப்பட்டு, அவரது மகிமைக்காக வாழ செய்கிறது.

Taken with permission from: https://www.drjamesdobson.org/blogs/fighting-pornography-man-to-man


Dr. Owen Strachan is Provost and Research Professor of Theology at Grace Bible Theological Seminary.  He is married and the father of three children. Strachan has authored numerous books, including Reenchanting Humanity: A Theology of Mankind, The Pastor as Public Theologian: Reclaiming a Lost Vision (with Kevin Vanhoozer) and Christianity and Wokeness: How the Social Justice Movement is Hijacking the Gospel – and the Way to Stop it. Strachan is the former president of the Council on Biblical Manhood & Womanhood, the former director of The Center for Public Theology at MBTS and is the President of Reformanda Ministries.

No Response to “Fighting Pornography, Man to Man – Dr. Owen Strachan. ஆபாச படம் பார்ப்பதை எதிர்த்து போராடுதல் – Dr.ஓவன் ஸ்ட்ரசன்.”

Leave a Comment