Four Reasons Why God’s Power Is Sometimes Hidden – William Gurnall. ஏன் சில நேரங்களில் தேவனுடைய வல்லமை மறைக்கப்படுகிறது? நான்கு காரணங்கள் – வில்லியம் குர்னால்.

Published May 29, 2023 by adming in Pastor's Blog

சோர்ந்து போகும் ஆத்துமா இவ்விதமாக கூறுகிறது. “சோதனையை எதிர்த்து போராடுவதற்குண்டான பலத்திற்காக, நான் மறுபடியும், மறுபடியும் ஜெபிக்கிறேன். இந்த நாள் மட்டும், என் கை பலமிழந்து, கிடக்கிறது. எவ்வளவு  அதிகமாக, முயற்சி செய்தாலும், என்னால் எதிர்த்து செயல்பட முடியவில்லை. தேவனுடைய வல்லமை உண்மையாகவே என்னிடத்தில் இருக்கும் பட்சத்தில், ஏன் என்னுடைய கிறிஸ்தவ வாழ்வு வெற்றிகரமாக இல்லை?”

1. தேவனுடைய வல்லமையை கவனிக்காமல் இருந்திருக்கலாம்.

மறுபடியும் ஒரு தடவை சோதித்துப்பார். நீ ஏற்கனவே கவனியாமல் விட்ட, சில மறைந்திருக்கிற பலத்தை கண்டு கொள்ளலாம். ஒருவேளை, நீ ஜெபித்து, பதிலுக்காக, எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற வேளையில், ஆம், முன் பக்க கதவு வழியாக, வருமென்று நீ காத்திருந்த வேளையில், அவர் பின் பக்கம் வழியாக, சந்தித்திருக்கலாம். நான் இங்கே என்ன சொல்ல வருகிறேன் என்றால், நீ உன்னுடைய பிரச்சனையிலிருந்து, உடனடி தீர்வு எதிர்பார்த்தாய், ஆனால், தேவன் அதற்கு பதிலாக, நீ இன்னும் உற்சாகமாய் ஜெபிக்கிறதிற்கு உண்டான பலத்தை கொடுத்தார். ஆம், குழந்தை, எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக அழுகிறதோ, அவ்வளவுக்களவு, பலமிக்கதாய் இருக்கும் என்று, எந்த ஒரு மருத்துவரும் சொல்லுவார்.

அதுமட்டுமல்ல, முன்புவிட, இப்பொழுது, உன்னுடைய சுயத்தை வெறுத்து செல்லுவதற்குண்டான அதிகமான பலத்தை நீ காணலாம். மேலும், உன்னுடைய மாம்சத்தில், கொடுக்கப்பட்டுள்ள, இந்த முள்ளினாலே, நீ இன்னுமாய் தாழ்த்தப்படுகிறாய் அல்லவா? அப்படியென்றால், நீ உன்னுடைய பெருமை என்கிற எதிரியோடு, நன்றாக போராடியிருக்கிறாய் என்று அர்த்தம். தேவனுக்கு முன்பு, நம்முடைய சுய பெருமையை உடைத்து நம்மை தாழ்த்துவது எவ்வளவு பெரிதான விஷயம்.?

2. தேவன் வேண்டுமென்றே அவருடைய வல்லமையை காண்பிக்க தாமதப்படுத்தலாம்.

நீ காத்திருக்க தயாராக இருக்கும் வரை, நீ காத்திருந்தபோது, தேவன் இன்னும் பதில் அளிக்கவில்லை என்றால், அதற்காக, உன்னுடைய பொறுமையின்மையானது, அவர் அலட்சியப்படுத்துகிறவர், என்று குற்றம் சாட்டி விட வேண்டாம். மாறாக, உன்னை நீயே இப்படியாக சொல்லிக்கொள், “என் பிதா என்னை விட ஞானமுள்ளவர். அவர் என்ன எனக்கு தேவையோ, எப்பொழுது எனக்கு தேவையோ, அப்பொழுது அனுப்புவார். எனக்கு தெரியும், அவர் தம்முடைய வல்லமையை கான்பிக்காதபடி தவிர்க்கிறார் என்றால், அது என்னுடையே நன்மைக்கே ஆகும் என்று அவர் அறிவார்.”

அவர், உனக்குண்டான விடுதலையை தள்ளிப்போடுவதற்குண்டான காரணம் என்னவெறால், உனக்கு விசுவாசத்தை கொடுத்து, பலமாய் வளர வாய்ப்பை கொடுக்கிறார். ஒரு தாய், தன் குழந்தைக்கு, நடக்க கற்றுக்கொடுக்கும்பொழுது, அவள், சற்று சிறிய தூரம் தள்ளி நின்று, அக்குழந்தை தன்னிடம் வருவதற்கு, தன் இரு கைகளையும் நீட்டி, சைகை காட்டி அழைக்கிறாள். இப்பொழுது அத்தாயானவள், தன் சொந்த பெலத்தை, ஒவ்வொரு முறையும், அக்குழந்தையிடம் காண்பிப்பாளென்றால், அக்குழந்தை, போதுமான பயிற்சியற்று, அதற்கு தேவையான பயிற்சி கொடுக்காததினால், அதின் கால்கள் பலமற்றதாகவே காணப்படும். அத்தாயானவள், தன் குழந்தையை உண்மையாகவே நேசிப்பாளென்றால், அக்குழந்தையின், எதிர்கால நலத்திற்காக, தற்பொழுது, சிறிது காலம், அக்குழந்தை சிரமத்தை அனுபவிக்க அனுமதிப்பாள். அவ்வண்ணமாகவே, கடவுள், தம் பிள்ளைகளை நேசிக்கிறார். அவர், சில நேரங்களில், நிலையற்று, தடுமாறிக்கொண்டிருக்கும், விசுவாசம் என்னும் கால்களை, பலப்படுத்த, போராட அனுமதிக்கிறார்.

அதுமாத்திரமல்ல, அவர், தம்முடைய வல்லமையை, பெரிதான விதத்தில், காண்பிக்கவைக்கும் தருணமாக, பாடுகளை உபயோகப்படுத்துகிறார். ஒருவேளை, ஒரு குழந்தை, ஆற்றின் ஓரத்திலே, தட்டு தடுமாறி, நடந்துக்கொண்டு, கீழே விழுவதற்கு ஏதுவான, ஆபத்தான சூழ்நிலையை சந்திக்கும் என்றால், அக்குழந்தையை பார்க்கும் தாயானவள், என்ன செய்வாள்? ஆம், அவள், அக்குழந்தையை உடனே காப்பாற்ற ஓடுவாள். அத்தகைய சூழ்நிலையில், அவளுடைய கரமும், அரவணைப்பும், இன்னும் பலமுள்ளதாய் காணப்படும்.

   நீ ஒருவேளை, ஏழ்மையாயும், நடுக்கத்துடனும், விசுவாசத்தில் பலவீனனாயும் இருக்கலாம். இருந்தும், உன்னுடைய கிருபை, உயிரோடிருந்து, உன்னை வழிநடத்துகிறது. பாவத்தினாலும், பிசாசினாலும், அலைகழிக்கப்பட்டு, ஆம், புயலினால், அடிபட்டு, நசிந்து போன ஒரு படகை போன்ற உன்னை, தேவன் பாதுகாப்பாய், கரைசேர்ப்பதில், அவருடைய மகத்துவமான பலன் தெரிகிறதில்லையா?

3. ஆசீர்வாதத்திற்குண்டான தடைக்கு காரணம் உன்னில் இருக்கலாம்.

விடுதலைக்காக, நீ தேவனிடம் மன்றாடும்போது, உன்னுடைய இருதயம் சரியான வழியில், இல்லையென்றால், தேவனுடைய வல்லமையை நீ எதிர்பார்க்க முடியாது. நீ ஒருவேளை தேவனுடைய வல்லமையை காணமுடியாதபடி, உணருவாயானால், பின்வரும் கேள்விகளை, உன்னை நீயே கேட்டுக்கொள்.

 நான் என்னுடைய தேவையை சந்திக்க, அவரை மட்டுமே, சார்ந்து, உண்மையாகவே, தேவனை நம்பியிருக்கிறேனா? அல்லது என்னுடைய தீர்மானம், என்னுடைய போதகர், அல்லது வெளிகாரணிகளை சார்ந்து இருக்கிறேனா? இவைகள் அனைத்தும் ஒருவேளை நல்லவைகளாக இருக்கலாம். ஆனால், இவைகள் எல்லாம், கிறிஸ்துவின் பணியாட்கள் மட்டுமே. இவைகளூடாய் நீ கடந்து, எஜமானனாகிய இயேசுவண்டை சேர். அவரை தொட்டு, விடுதலையை உன்னுடையதாக்கிகொள்.

  நான் கொண்டிருக்கிற பலத்திற்கு நன்றியுள்ளவனாய் இருக்கிறேனா? நெடுதூர ஓட்டப்பந்தயத்தில், போட்டியாளர்கள், அவர்கள், அவர்கள், ஒவ்வொரு வேகத்தில் ஓடிக்கொண்டிருப்பார்கள். ஒருவேளை, பலமுள்ள விசுவாசிகள், உன்னை கடந்து, பரம ராஜ்யத்தை நோக்கி, ஓடுவதை பார்த்து, சோர்வடைந்திருக்கலாம். அவர்களை பார்த்து, நீ அழுது கொண்டிராமல், நீ ஓடுவதற்குண்டான பலத்தை பெற்றிருப்பதற்கு, நன்றியுள்ளவனாய், இரு. பரிசுத்தவான்களாகிய சேனை வீரர்கள் கூட்டத்தில், ஒருவனாய் இருக்கிறாயா? அது கர்த்தருடைய கிருபையினால் மட்டுமே. அதற்கு, நீ மிகுந்த நன்றியுள்ளவனாய் இரு. இதை நீ நன்றாய் ஞாபகம் வைத்துக்கொள். ஒவ்வொருத்தரும், அதில் பலவீன பரிசுத்தவானாய் இருக்கலாம். யாரெல்லாம் ஓட்டத்தை முடிக்கிறார்களோ, அவர்கள் வெற்றியாளர்கள்.

  என்னுடைய பெருமை, கர்த்தருடைய வல்லமையை காண்பிக்க தடுக்கிறதா? நீ உன்னுடைய சொந்த ஆதாயத்திற்காக, பயன்படுத்துவாய் என்றால், தேவன், தம்முடைய வல்லமையை தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்க மாட்டார். உன்னுடைய பெருமையினால், நீ எவ்வளவு சீக்கிரம், அவரை விட்டு, விலகி போகிறாய்  என்று அவருக்கு தெரியும். அவர் உன்னை நேசிப்பதினால், அவருடனான, ஐக்கியத்திலிருந்து, நீ வெளியேற்றப்படும்போது, உன்னுடைய பலம் எவ்விதமானது என்று, நினைப்பூட்டுவார். இவை அனைத்தும், உன்னுடைய சொந்த நலனுக்காகவே செய்கிறார். அதினால், உன்னுடைய பெருமை, திணரடிக்கப்படும்போது, நீ அவரண்டை திரும்புவதற்கு, கட்டாயப்படுத்தப்படுகிறாய்.

4. அதிகப்படியான, இன்னல்களை, எதிர்கொண்டு, விடாமுயற்சியுடன், இருக்க, தேவன் உன்னை அழைக்கலாம்.

  ஒருவேளை, இதுவரைக்கும், சொல்லப்பட்டது எதுவும், உன்னுடைய குறிப்பான பிரச்சனைக்கு, பதில் கிடைக்காமல், இருக்கலாம். கர்த்தருக்கு முன்பாக உன்னுடைய இருதயம், சுத்தமாக இருக்கிறது. நீ உண்மையாகவே, ஜெபத்துடன் காத்திருந்தாய். இருந்தும், கர்த்தர், தம்முடைய வல்லமையை காண்பிக்கவில்லை. அப்படியென்றால், நீ தீர்மானத்தோடு, அவருக்காக வாழ்ந்து, மரிக்க காத்திருக்க வேண்டும். இதுவே, அவரின் எதிபார்ப்பாய், இருக்கலாம். உன்னில் கிரியை செய்யும், தேவனுடைய கிருபையும், உன்னுடைய விசுவாசமுமே, கடைசி மட்டும், விடாமுயற்சியுடன், அவருக்காக, வாழுவதற்குண்டான, உன்னதமான, ஆதாரமாய் இருக்கிறது. நீ வாக்குத்தத்திற்காக, காத்திருக்கும்போது, கடைசி வேளையில் கூட, உனக்கு பலன் வரும் என்று உன்னை தேற்றிக்கொள். வேதம் சொல்லுகிறது. “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.         (ஏசாயா 40:31)

விதவையானவள், தன்னுடைய கடைசி அப்பம் சுடும் வரைக்கும், தீர்க்கதரிசி அனுப்பபடவில்லை. தேவனுடைய நோக்கம், நிறைவேற்றப்படுகிற வரைக்கும், யோபு, விடுவிக்கப்படவில்லை. உன்னுடைய சோதனைகள், யோபுவை விட பெரிதானவையா? அவனுடைய இருதயத்தை பெற்றுக்கொள்ள பிரயாசப்படு. நிறைவான இரக்கமும், பெரிதான உருக்கமும் கொண்ட கர்த்தருடைய கரத்தில், உன்னுடைய வாழ்க்கை உள்ளது என்பதை அறிந்துக்கொள். (யாக்கோபு 5:11)

This Excerpt has been taken from “The Christian In Complete Armour” by the Puritan William Gurnall (1617-1679).

No Response to “Four Reasons Why God’s Power Is Sometimes Hidden – William Gurnall. ஏன் சில நேரங்களில் தேவனுடைய வல்லமை மறைக்கப்படுகிறது? நான்கு காரணங்கள் – வில்லியம் குர்னால்.”

Leave a Comment