The Piety of David Brainerd, டேவிட் ப்ரைனார்டு அவர்களின் தெய்வ பக்தி.

Published February 20, 2019 by adming in Pastor's Blog

                                         

                ஒரு ஆத்துமா-புத்துணர்ச்சி அடைந்த வாழ்வு:

                                        டேவிட் ப்ரைனார்டு அவர்களின் தெய்வபக்தி

                                                                                         – டஸ்டின் பெஞ்ச் (Dustin Benge)

  அது ஒரு வசந்தகாலம், 1747 ம் ஆண்டு, 29 வயது நிரம்பியவராய் டேவிட் ப்ரைனார்டு, தன்னுடைய குதிரையில் பிரயாணம் செய்தவராய், நொர்தம்டன் என்ற இடத்திலுள்ள போதகர் தங்கும் இடமாகிய அந்த வீட்டிற்கு வந்தார். அந்த வீடு நியூ இங்லாந்தை சேர்ந்த போதகரும், இறையியல் அறிஞருமான ஜோனத்தான் எட்வர்ட்ஸ் (1703-1758) மற்றும் அவரின் மனைவி சாரா(1710-1758) அவர்களுடையதாய் இருந்தது. அந்த நாள், (மே,28,வியாழன்) வழக்கமான ஒரு நாளை போல் அல்ல. எட்வர்ட்ஸ் குடும்பத்தார் அடிக்கடி விருந்தாளிகளை அழைத்து, தங்க வைப்பதுண்டு. ஆம், அந்த இடம், பல ஊழியர்களுக்கு,வந்து போகும்படியான, இளைப்பாரும்படியான இடமாக இருப்பதுண்டு. எட்வர்ட்ஸ் அவர்களும், ப்ரைனார்டும் இந்த நாளுக்கு முன், ஒருவருக்கொருவர் அறியாதவராய், அன்னியராய் இருந்தனர். இதற்கு முன் 1743 ஆம் ஆண்டின் யேல் துவக்கத்தில் (Yale Commencement of 1743) ஒருமுறை மட்டுமே, ஒருவரையொருவர் சந்தித்திருந்தனர். 1747 இன் கோடை காலமானது இந்த இரு மனிதர்களுக்கிடையில் வளர்ந்து வரும் நட்பை வளர்ப்பதற்கு நிரூபணமாக இருந்தது. இந்த நட்பின் உச்சநிலையானது, அமெரிக்க சுவிசேஷக வரலாற்றில், மிகப் பெரிய மிஷனரிகளின் ஒன்றான வாழ்க்கை சரிதையை உருவாக்கியது.

ஒரு நாள், நொர்தம்டன் போதகர் வீட்டிலே தங்கிக்கொண்டிருக்கும் பொழுது, ப்ரைனார்டு அவர்கள், தன்னுடைய பத்திரிக்கைகளையும், நாட்குறிப்புக்களையும், ஜோனத்தான் எட்வர்ட்ஸ் அவர்களிடம் பகிர்ந்துக் கொண்டார். எட்வர்ட்ஸ் இதை பார்த்த உடனே, இதை அநேகருக்கு எடுத்துச் செல்லக்கூடிய ஒரு ஆவிக்குரியதும், பக்தி நிரம்பியதுமான பொக்கிஷமாக இருப்பதை கண்டார். தயக்கத்துடன், ப்ரைனார்டு, அவரது எழுத்துக்களை, பின்னர் வெளியிடுவதற்கு, ஒரு தொகுப்பாக கொண்டுவர ஏற்பாடு செய்தார். இருந்தபோதிலும், 1747 ம் ஆண்டில், இந்த இளம் மிஷனெரி, காசநோயினால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். இந்த வியாதியினால், இவர் அனேக வருடங்கள் பாதிப்படைந்தவராய் காணப்பட்டார். எட்வர்ட்ஸ், ப்ரைனார்டின் வாழ்க்கை சரிதையை வெளியிடுவதிற்கான பொறுப்பை உணர்ந்தார். 1749 ம் ஆண்டு, மறைந்த, மறைதிரு. டேவிட் ப்ரைனார்டு அவர்களின் வாழ்க்கை சரிதை வெளியியப்பட்டது. அது, பின்னாளில், சுவிசேஷ பின்னணியில் மிகச் சிறந்த படைப்பாக காணப்பட்டது. எட்வர்ட்ஸ் அவர்களுக்கு தெரியாமலேயே, அவர் படைத்த இறையியற் பணிகள் மற்றும் சிந்தாந்தங்களுக்கு மேலாக, ப்ரைனார்டு அவர்களின் வாழ்க்கை சரிதை மிகுந்த புகழ்வாய்ந்ததாய் காணப்பட்டது.

டேவிட் ப்ரைனார்டு அவர்களின் பக்திக்குரிய வாழ்க்கை

எட்வர்ட்ஸ் அவர்கள், அப்புத்தகத்தின் “ஆசிரியர் முன்னுரை” யில் இவ்விதமாக ஆரம்பிக்கிறார். “இந்த உலகத்திற்கு காண்பிக்கும்படியான, ஒரு உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கையில் காணப்படவேண்டிய இரண்டு முக்கியமான ஆதாரங்கள் என்ன என்று பார்த்தால்  ஒன்று உபதேசமும் தேவனுடைய வார்த்தையும் மற்றொன்று முன்மாதிரியான வாழ்க்கை.” இரண்டாவதாக சொல்லப்பட்ட காரியத்தை மையமாக வைத்து எட்வர்ட்ஸ் அவர்கள், அப்புத்தகத்தில், டேவிட் ப்ரைனார்டு கிறிஸ்தவ வாழ்க்கையில் காணப்பட்ட அம்சங்களை பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 1. ஆவிக்குரிய தாழ்மையான சிந்தை 2. சுபாவத்தில் மாற்றம் 3. பாவத்தை குறித்ததான உணர்வு, கடைசியாக 4. பரிசுத்த வாழ்வு. இந்த நான்கு முக்கியமான அம்சங்களை மையமாக வைத்து, எட்வர்ட்ஸ் அவர்கள், இவ்விதமாக குறிப்பிடுகிறார், “திரு.ப்ரைனார்டு அவர்களின் ஆவிக்குரிய பார்வை, நோக்கம், பற்று  இவையனைத்தும் வெறுமையான, மேலோட்டமான உற்சாகத்தை காட்டிலும் வெகு வித்தியாசத்தை கொண்டுள்ளது.” எட்வர்ட்ஸ், பக்தி வைராக்கியமான வாழ்க்கைகு  டேவிட் ப்ரைனார்டின், ஆவிக்குரிய பக்தியை முன் வைக்க ஆசைப்பட்டார். இதுவே, அதி விரைவில் “பெரும் எழுப்புதல்” (Great Awakening)  உண்டாக வழி வகுத்திற்று.

    1.ஆவிக்குரிய தாழ்மையான சிந்தை   

     ஒரு கிறிஸ்தவன் தேவனுடைய மகத்துவத்தையையும், மகிமையின் மேன்மையை அடைவதற்கு, ஆவிக்குரிய தாழ்மையான சிந்தை மிக பிரதானமான ஒன்றாய் இருப்பதை டேவிட் ப்ரைனார்டு உணர்ந்தார். மே மாதம் 9ம் தேதி, 1746ம் ஆண்டு, ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட ஒரு நபரின் சாட்சியை, ப்ரைனார்டு இங்கு பகிர்ந்து கொள்கிறார். அந்த நபர் “ஒரு மந்திரவாதி, கொலைகாரன்”. ஒரு நாள் தேவனுடைய வார்த்தையை கேட்க ஆவலோடு, வாஞ்சையோடு காணப்பட்டான். தேவனுடைய சமூகத்தில் தன்னை தாழ்த்தி காத்திருந்தவனாய் கடந்து வந்தான். மேலும் ப்ரைனார்டு இவ்விதமாக எழுதுகிறார். “அவன் ஒரு வாரத்திற்கு மேலாக இவ்விதமான சூழ்நிலையை கடந்த பிறகு, நான் தேவனுடைய வார்த்தையை அனைவருக்கும் போதிக்கும் பொழுது, அவன் ஆழமாய் தேவ ஆவியினால் தொடப்பட்டவனாய், அவனுடைய ஆத்துமா புத்துணர்ச்சி அடைந்ததாய், இரட்சிப்பின் பாதைக்குள் கடந்து வந்தவனாய், அவன் உள்ளம் ஆழமாய் உடைப்பட்டு, தாழ்த்தப்பட்டு, கண்ணீருடன் மனதிரும்பினான்.” ஆம், துன்மார்க்கத்தில் விழுந்து போய் கிடக்கும் ஒரு பாவியானவன், கிறிஸ்துவை நோக்கி பார்க்கும் பொழுது, தன் ஆத்துமாவில், தாழ்மை சிந்தை கொண்டவனாய், பரிசுத்த வாஞ்சை கொண்டவனாய்,  அந்த உன்னதமான, முடிவற்ற, பரிசுத்த தேவன், சிறிதளவு பாவத்தைகூட முழுவதும் வெறுக்கிறவராகவே காணப்படுகிறார் என்று அந்த வாஞ்சை அப்படியாக அவனை பார்கச் செய்கிறது.

      2. சுபாவத்தில் மாற்றம்

       சாலமன் ஸ்டோடர்ட் (1643-1729) எழுதிய “கிறிஸ்துவண்டை நடத்தும் வழிகாட்டி” என்ற  புத்தகத்தை ப்ரைனார்டு படிக்கும் பொழுது, அவருடைய உண்மையான மனமாற்றத்தின் எழுச்சி ஆரம்பமாகிறது. அவர் கூறுகிறார், அந்த ஆக்கத்தின் ஒரு தொகுப்பானது, “ என்னுடைய இரட்சிப்புக்கு, தேவனுடைய கரத்தில் அமைந்த, மகிழ்ச்சியின் வழியாய், கருவியாய், அது இருந்தது என்று நான் நம்புகிறேன்.” ஆம் அவருடைய மனமாற்றம், தேவனுடைய ஆளுகைக்கும், மகிமைக்கும் தன்னையே முற்றிலுமாய், ஒப்புக்கொடுக்கும்படியாய் மாற்றிற்று. அவருடைய இரட்சிப்பானது, உள்ளத்தின் ஆழத்திலிருந்து, இருதயப்பூர்வமாய், அவருக்கு முழுமையாய் பணி செய்ய மாற்றிறு. ஜோனத்தான் எட்வர்ட்ஸ், டேவிட் ப்ரைனார்டின் இரட்சிப்பை குறித்து இவ்விதமாக எழுதுகிறார்.    “வேதத்தில் எழுதிக்கொடுக்கப்பட்டுள்ள அத்தனை இரட்சிப்பின் அடையாளங்களையும், ப்ரைனார்டின் வாழ்க்கையில் நாம் பார்க்கலாம். அது சாதாரணமான மாற்றம் அல்ல, பெரிதான மாற்றம், நிலையான மாற்றம்; புதிய மனிதனாக, புதிய சிருஷ்டிப்பாக கொண்டு வரும் மாற்றம். அந்த மாற்றம் அவருடைய நம்பிக்கையில், சந்தோஷத்தில், அவர், தன்னை குறித்து உயர்வாக கொண்டிருக்கும் எண்ணத்தில் காணப்பட்ட மாற்றம் மாத்திரமல்ல, அவருடைய சுபாவத்தில், அவருடைய பழக்க வழக்கத்தில், அவருடைய பேச்சில், அவருடைய மனநிலையில், அவருடைய இருதயத்தில் கொண்ட மாற்றமே, மனமாற்றமாக பார்க்க முடிந்தது.”       ஆம், அவருடைய இரட்சிப்பின் ஆரம்பத்திலிருந்து, வாழ்க்கையின் கடைசி வரை, இரண்டுவிதமான வாழ்க்கையை கொண்டிருந்தார். அதாவது, ஒருபக்கம், இரட்சிக்கப்பட்ட வாழ்க்கையின் பெரும் சந்தோஷம், மறுபக்கம் ஆவிக்குரிய இருளை அனுபவித்து வந்தார். இப்படியான வெளிச்சத்திற்கும் இருளுக்கும் இடையேயான போராட்டத்தை கொண்டிருந்தாலும், அவருடைய ஆத்துமா தேவனுடைய ஒளியை கொண்டிருந்தது. ஆம், சுபாவத்தில் மாற்றமானது, ஆத்துமாவில் “உண்மையான மாற்றமாக, மகத்தான பிரகாசமான வாழ்வை கொடுக்கும் மாற்றமாக அமைகிறது. ஆம், சூரிய ஒளியானது, பரிசுத்தவானில் பிரகாசிக்கச் செய்கிறது மாத்திரமல்ல, இயற்கையான ஒளியின் வெள்ளத்தில் பங்கெடுக்கிறவர்களாய் அந்த பரிசுத்தவான்களும் சிறிய சூரியன்களாக உருவெடுக்கிறார்கள்.

    3. பாவத்தை குறித்ததான உணர்வு      

            டேவிட் ப்ரைனார்டு அவர்களின் வாழ்க்கையில், மன அழுத்தம் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. ஆவிக்குரிய விதத்தில், பாவத்தை குறித்த உணர்வு, ஆரோக்கியமானதுதான். அதே சமயத்தில், அந்த உணர்வு, மன அழுத்தத்திற்கு இடம் கொடுப்பது ஆரோக்கியமானது அல்ல. எட்வர்ட்ஸ் எழுதின, ப்ரைனார்டின் வாழ்க்கை சரிதை புத்தகத்தில், அவர், ப்ரைனார்டு அவர்கள், கடந்துபோன வாழ்க்கை போராட்டத்தை குறித்து ஒரு சில காரியங்களை, மிக கவனமாக கையாண்டு எழுதுகிறார். இருள் கவ்விபிடிக்கப்பட்டு, மன அழுத்தத்தோடு, குழப்பமான மனதோடு, கிறிஸ்து இயேசுவின் இனிமையை அனுபவிக்க முடியாதபடி கடந்துபோகிற இப்படியான ப்ரைனார்டின் அனுபவங்களை அடிக்கடி அவர் பேசுகிறார். ப்ரைனார்டின் இப்படியான மனச்சோர்வுக்கு அனேக காரணங்களை சொல்லலாம். டேவிட் ப்ரைனார்டு மரித்து நூறு வருடத்திற்கு மேலான பிறகு, அவருடைய குடும்பத்தின் வழியில் பிறந்த  நபர் ஒருவர் இவ்விதமாக கூறுகிறார், “ கட்டாயமாக ஒத்துக்கொள்ள வேண்டிய காரியம் என்ன வென்றால், டேவிட் ப்ரைனார்டு அவர்களின் முழு குடும்பத்திலும், ஒருவிதமான மன அழுத்தம், உடல் நலத்தை குறித்ததான மன வாட்டம் இருநூறு ஆண்டுகளாக இருந்து கொண்டேதான் இருந்தது.” ஆம் டேவிட் தன் வாழ்க்கை முழுவதிலும், ஊழியத்திலும் பல கடினமான போராட்டங்களை தொடர்ந்து சந்தித்தவராய், அது அடிக்கடி அவரை மன அழுத்ததிற்குள்ளாக தள்ளிற்று. இருந்தபோதிலும், இவ்விதமான மனப்பாங்கு, டேவிட் ப்ரைனார்டின் ஆவிக்குரிய குறைப்பாடு என்று சொல்லவே முடியாது. நாம் ஒன்று மட்டும் மறந்து விடக்கூடாது, சரித்திரத்தில், அனேக புகழ் வாய்ந்த தேவ பிள்ளைகள், எடுத்துக்காட்டாக, சார்ல்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன், ஜோன் கால்வின், மார்டின் லூத்தர், போன்றோர்கள் அடிக்கடி, இவ்விதமான மன அழுத்தத்தோடு போராடியுள்ளனர்.  டேவிட் ப்ரைனார்டு, இவ்விதமான பள்ளத்தாக்குகளின் வழியாய் கடந்து போகும் போதெல்லாம், ஊக்கமான ஜெபத்தையும், தேவ ஆவியானவரின் பிரசன்னத்தின் உணருதலையும் தன் வாழ்க்கையில் கொண்டிருந்தார்.

     4. பரிசுத்த வாழ்வு.

          அக்டோபர் 20,1740, டேவிட் ப்ரைனார்டு, தன்னுடைய நாட்குறிப்பேட்டில், இவ்விதமாக பதிவு செய்கிறார், “இந்த நாள் காலையிலும், மாலையிலும், கர்த்தருடைய சமூகத்திலே காத்திருந்து, தேவ ஆவியானவரின் பிரசன்னத்தின் இனிமையை மறுபடியும் உணர்ந்தேன். அந்த நாள் முழுவதும், பக்திக்குரிய ஆறுதலையும், வாழ்வையையும் கண்டேன்.” டேவிட் ப்ரைனார்டின் நாட்குறிப்பேடு முழுவதும், அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சியையும், பரிசுத்த வாழ்வும் நிறைந்து இருப்பதை நாம் பார்க்கலாம். எட்வர்ட்ஸ் இவ்விதமாக எழுதுகிறார், “ஒரு கிறிஸ்தவ நடைமுறை வாழ்க்கையில், கிருபை மிகுந்ததும், பரிசுத்த வாஞ்சையும் கொண்ட கனிகளை கொண்டிருப்பர்.” இங்கே, எட்வர்ட்ஸ், ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையானது, தேவனால் நமக்கு கொடுக்கப்பட்ட, நடைமுறைக்கு ஏதுவான வாழ்க்கையை கொண்டுள்ளதாய் இருக்கிறது என்றும் விவரிக்கிறார். மற்றுமொரு விதத்தில் சொல்லபோனால், தேவன் நம்முடைய இருதயத்தில் வாசம் செய்வாரென்றால், “அவர் தம்முடைய வல்லமையான கிரியைக்கொண்டு, தாம் கடவுள் என்று கான்பிக்கிறவராய் இருப்பார். எங்கு கிறிஸ்துவானவர் ஒரு இருதயத்தை இரட்சிக்கிறோரோ, அங்கு அவர் வாசம் செய்கிறவராய், உயிர்த்தெழுதலின் வல்லமையினாலே, அவர் தம்மையே முழுவதுமாய் வெளிப்படுத்துகிறவராய் செயல்படுவார்” ஆம், தேவன் தாமே ஒரு இரட்சிக்கப்பட்டவனில், அவரே சகல பெலத்தை கொடுத்து, நடைமுறை மற்றும் பரிசுத்த வாழ்க்கைக்கு ஏதுவாக, உண்மையான ஆவியின் கனிகளை கொடுக்கிறவராய் இருக்கிறார்.

     முடிவுரை

     ஜோனத்தான் எட்வர்ட்ஸ், சொல்லுகிறபடி, தேவன்தாமே, உண்மையான ஆவிக்குரிய வாஞ்சைக்கு, உத்வேகமாய் இருப்பாரென்றால், பல்வேறு பாடுகள் மத்தியிலும் கூட, அந்த ஆவிக்குரிய பக்தி விடாமுயற்சியோடு செயல்படுகிறதாய் இருக்கும். மற்றுமொரு விதத்தில் சொல்லுவோமானால், இரட்சிக்கப்படாத மனுஷன், தன்னுடைய உலகப்பிரகாரமான ஆசை, இச்சைகள், ஆவிக்குரிய பக்தியினாலே இழந்து போகிறதை அறிந்தவுடனே, அப்பக்தியை, விட்டுவிடுகிறவனாய் இருப்பான். அதே சமயத்தில், ஒரு இரட்சிக்கப்பட்டவன், ஆண்டவருக்காக, மேன்மையான காரியத்தை அடைய எதையும் இழக்க தயாராக இருப்பான். டேவிட் ப்ரைனார்டு, தேவனையும், தேவனுக்கடுத்த காரியத்தையும் மிகுந்த அன்பு காட்டியவராய், அவருடைய தெய்வீக மகத்துவத்தின் மேன்மையினாலே உந்தப்பட்டவராய் காணப்பட்டார். அவருடைய சாட்சியான ஆவிக்குரிய வாழ்க்கை, எப்பேர்பட்ட போராட்டங்கள், இன்னல்கள், இழப்புகள், அவருடைய பரலோக பிரயாணத்தை தடை செய்ததில்லை.    

Dustin Benge(Ph.D., The Southern Baptist Theological Seminary) is visiting professor at Munster Bible College, Cork, Ireland and lecturer for The Andrew Fuller Center for Baptist Studies.

No Response to “The Piety of David Brainerd, டேவிட் ப்ரைனார்டு அவர்களின் தெய்வ பக்தி.”

Leave a Comment