The Christian’s never-failing resort in every case, in every plight – C. H. Spurgeon. கிறிஸ்தவனின் ஒருபோதும் தவறாத புகலிடம் – சி. எச் ஸ்பர்ஜன்.
“நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.” (பிலிப்பியர் 4:6)
ஜெபம் என்பது ஒவ்வொரு விஷயத்திலும், ஒவ்வொரு அவல நிலையிலும் கிறிஸ்தவனின் ஒருபோதும் தவறாத புகலிடமாய் இருக்கிறது. உங்கள் வாளைப் பயன்படுத்த முடியாதபோது, நீங்கள் அனைத்து விதமான ஜெபம் என்கிற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளலாம். உங்கள் துப்பாக்கியில் பயன்படுத்தும் வெடி தூள் ஈரமாக இருக்கலாம், உங்கள் வில்லினுடைய கயிறு அறுபடலாம் – ஆனால் அனைத்து விதமான ஜெபம் என்கிற ஆயுதம் எப்போதும் ஆயத்தமாகவே இருக்கிறது. எதிரியானவன் ஈட்டியைப் பார்த்து சிரிக்கலாம் – ஆனால் அவன் ஜெபத்தை பார்த்து நடுங்குகிறான். வாள் மற்றும் ஈட்டிக்கு புதுபிப்பு தேவை – ஆனால் ஜெபம் ஒருபோதும் துருப்பிடிக்காது; நாம் அதை மிகவும் மலுங்கினது என்று நினைக்கும்போதுதான் – அது தன் வேலையை மிகச் சிறந்ததாக செய்கிறது.
ஜெபம் என்பது ஒரு திறந்த கதவு, அதை யாரும் மூட முடியாது! பிசாசுகள் உங்களை எல்லா பக்கங்களிலும் சூழ்ந்து கொள்ளலாம் – ஆனால் மேல்நோக்கி செல்லும் பாதை எப்போதும் திறந்திருக்கும், அந்த சாலை தடையின்றி இருக்கும் வரை, நீங்கள் எதிரியின் கையில் விழ மாட்டீர்கள். நம்முடைய தேவைகளின் நேரத்தில் நம்மை ஆதரிக்க பரலோக உதவி நமக்கு வரும் வரை ஒருபோதும் எந்தவித பலத்தினாலும், பெருங்காற்றினாலும் நம்மை அடித்துச் செல்ல முடியாது.
ஜெபம், ஒரு குறிப்பிட்ட பருவ காலத்திற்கு வருவது கிடையாது. கோடையாவது, குளிராவது எந்த சமயத்திலும், அதினுடைய அம்சங்கள் விலைமதிப்பற்றவை. ஜெபமானது, கடவுளோடு நெருங்கி ஜீவிக்கிற ஜெப வீரர்களை பெறுகிறது. இரவின் அந்தகாரத்திலும், பல்வேறு அலுவல்கள் மத்தியிலும், நண்பகலின் வெயிலிலும், மாலை பொழுதின் நேரத்திலும், ஒவ்வொரு நிலையிலும், அது, வறுமை, நோய், அல்லது குழப்பம், அல்லது அவதூறு, அல்லது பாவம் – எந்த நிலையிலும், உங்கள் உடன்படிக்கையின் தேவன் உங்கள் ஜெபத்தை வரவேற்று அவருடைய பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பதிலளிக்கிறவராய் இருக்கிறார்.
ஜெபம் எப்போதும் பயனற்றது அல்ல. உண்மையான ஜெபம் என்றென்றும் உண்மையான வல்லமை கொண்டது. கேட்பதை நீங்கள் எப்போதும் பெறாமல் போகலாம் – ஆனால் உங்கள் உண்மையான தேவைகளை எப்போதும் பெற்றிருப்பீர்கள். நீங்கள் சாதாரண உணவுக்காக ஜெபிக்கும் பொழுது, அதற்கு பதிலாக, அவர் உங்களுக்கு மிகச்சிறந்ததை கொடுப்பவராய் இருப்பதினால் நீங்கள் கோபப்பட வேண்டுமா ? நீங்கள் உடல் ஆரோக்கியத்தை நாடுகிறீர்களானால், அதற்காக நீங்கள் உங்கள் அதிருப்தியை தெரியப்படுத்த வேண்டுமா? – அவர் உங்கள் சுகவீனத்தை, ஆவிக்குரிய நோய்களைக் குணப்படுத்துவதற்கு பயன்படுத்துகிறார். அது அகற்றப்படுவதை விட, அந்த பாடுகள் பரிசுத்தப்படுவது நல்லதல்லவா? என் ஆத்துமாவே, உன் வேண்டுகோளையும் விண்ணப்பங்களையும் அவர் முன் வைக்க மறவாதே. ஏனென்றால் உன் ஆசைகளை தேவன் நிறைவேற்ற தயாராக இருக்கிறார்!
“ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்ச்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.” (எபிரெயர் 4:16)
No Response to “The Christian’s never-failing resort in every case, in every plight – C. H. Spurgeon. கிறிஸ்தவனின் ஒருபோதும் தவறாத புகலிடம் – சி. எச் ஸ்பர்ஜன்.”