தெய்வ பயத்தைகுறித்ததான ஆறு கேள்விகள் || 6 Questions about the Fear of God.

Published May 25, 2021 by adming in Pastor's Blog

— Dr. மைக்கேல் ரீவ்ஸ்

கேள்வி 1: பயம் நல்லதா? அல்லது கெட்டதா?

அனேக இடங்களில் வேதமானது, பயம் ஒரு தவறானதும், அதிலிருந்து கிறிஸ்துவானவர் நம்மை விடுதலை பண்ண வந்திருக்கிறார் என்பதை தெளிவாக காண்பிக்கிறது. அப்.யோவான் இவ்விதமாக கூறுகிறார், “அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது. பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.”

ஒரு பக்கம், கிறிஸ்துவானவர், பயத்திலிருந்து நம்மை விடுதலை பண்ணுகிறார் என்றும் மறுபக்கம் நாம் கடவுளுக்கு மட்டும் பயப்பட வேண்டும் என்று கூறப்படுகிறோம். வேதத்தில், “தெய்வ பயமானது” பெரிய விஷயம்  ஒன்றுமில்லை என்று நம்மை அதைரியப்படுத்துகிறதாககூட இருக்கலாம்.  ஏற்கனவே கவலைப்பட நிறைய இருக்கிறது, இதில வேற நாம் இன்னும் சேர்த்துக்கொள்ளனுமோ என்று தோன்றும். இப்படி கடவுளை  குறித்த பயத்தை தவறாக நினைத்து, சுவிசேஷத்தில் காணப்படும் அன்பும், கிருபையும் நிறைந்த கடவுளோடு ஒப்பிட அவசியமில்லை.

சுவிசேஷம் ஒருபக்கம் நம்மை பயத்திலிருந்து விடுவிக்கிறது, மறுபக்கம் பயத்தை கொடுக்கிறது என்ற இந்த வித்தியாசமான முரண்பாட்டை குறித்து நீங்கள் சந்தோஷப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது நம்மை முடமாக்கும் பயத்திலிருந்து விடுவித்து, சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்த, அற்புதமான பயத்தை நமக்கு கொடுக்கிறது. வேதத்தில் சொல்லப்பட்ட “தெய்வ பயம்” என்பது கடவுளை குறித்ததான ஒருவித அச்சம் அல்லது கலக்கம் என்பதல்ல என்று நான், கிறிஸ்தவர்களாகிய உங்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

கேள்வி:2 பயமுள்ள கலாச்சாரம் இன்று ஏன் வலுவாக உள்ளது?

ஆரோக்கியமான பயத்தை மையமாக கொண்ட கடவுளை இழந்து போன இந்த சமுதாயமானது, எதிர்காலத்தை குறித்தும், எல்லா காரியத்தை குறித்தும், அனாவசியமாக மேலும் மேலும் கவலைப்பட்டும், கலங்கிகொண்டும் போகிறதை நாம் பார்க்கலாம். தகப்பனின் தன்மையான, கடவுளின் பராமரிப்பு இல்லாமல்,  நாம் ஒழுக்க நெறிகளையும், யதார்த்தத்தை குறித்தும் முழுவதும் நிச்சயமற்றவர்களாய் காணப்படுவோம். கடவுளை புறம்பே தள்ளிய சமுதாயத்தில், மற்ற கவலைகள் அதாவது சரீர சுகத்திலிருந்து உலகம் சம்பந்தமான ஆரோக்கியம் வரைக்கும் கவலைகள் ஆக்கிரமித்து விடுகிறது. சொல்லப்போனால் நல்ல விஷயங்கள் எல்லாம் கொடூரமானதாகவும், விக்கிரகமானதாகவும் மாறிவிடுகின்றன. அதினால், உதவியற்றவர்களாயும், ஸ்திரமற்றவர்களாயும். கவலைகளினால் நிரம்பினவர்களாயும் காணப்படுகிறோம்.

கேள்வி:3 பயம் பாவமாய் இருக்க முடியுமா?

கடவுளைப் பற்றிய இந்த பாவ பயம், எதுவென்றால், பிசாசுகள் விசுவாசித்து, நடுங்குகின்றன என்று நமக்குச் சொல்லும் பயம். (யாக்கோபு 2:19). சினாயில் இஸ்ரவேலரிடமிருந்து மோசே அகற்ற விரும்பிய பயம் அது. ஆதாம், முதலில் பாவம் செய்து கடவுளிடமிருந்து மறைந்தபோது அவனுக்கு இருந்த பயம் அது.(ஆதி 3:10). இந்த பயத்தை முதலில் உணர்ந்தவன் ஆதாம், அத்தருணத்தில் அவன் வெளிப்படுத்தின அவனுடைய சுபாவத்தை காணலாம். ஆம், இந்த பாவமுள்ள பயம் உன்னை கடவுளை விட்டே துரத்தி விடுகிறதாய் இருக்கிறது. இது தான் ஒரு அவிசுவாசியின் பயமாய் இருக்கிறது. இங்கு இவன் கடவுளை வெறுக்கிறவனாயும், தொடர்ந்து தன் இருதயத்தில் கலககுணம் கொண்டவனாயும், அப்பயம், தொடர்ந்து அவனை ஒரு பாவியென்று உணர்த்தி, கடவுளை விட்டே ஓடுகிறவனாய் காணப்படுகிறான். இந்த பயம்தான் நாம் தேவனை நேசிக்க விடாமல் செய்கிறது. இந்த பயம்தான் நம்முடைய  இருதயத்தின் ஆழத்தில், வேரூன்றி இருக்கிறது. இந்தபயமானது, நாம் கடவுளை எதிர்த்து, பின்வாங்கி, பீதி அடையச்செய்து அவிசுவாசத்தை வளர்த்துவிடுகிறதாய் இருக்கிறது.

கேள்வி:4 கடவுளுக்கு பயப்படுவது ஒரு துணிச்சலானதா அல்லது மனச்சோர்வடைந்த யோசனையா?

ஒரு உண்மையான தெய்வ பயம் என்பது, ஒரு பக்கம் கவலைக்கிடமான காரியமாகவும் மறு பக்கம்  கடவுளுக்குள் சந்தோஷமான ஒன்றாய் இருப்பது அல்ல, மாறாக, இவ்விதமான தெய்வ பயமானது, கடவுளுக்குள் இருக்கும் பரிசுத்தவான்களின் சந்தோஷத்தை குறித்து உற்சாகமாய் பேசுவதே ஆகும். மற்றுமொரு வார்த்தையில் சொல்வோமானால், வேதப்பூர்வமான தெய்வ பயமானது, விசுவாசிகளுக்கு உரிய பிரத்யேகமான சந்தோஷத்தை காண உதவி செய்கிறது. கடவுளுக்காக கொண்ட வைராக்கியம், அவரில் கொண்ட மகிழ்ச்சி இவை அனைத்தும் ஏனோதானோ என்ற காரியம் அல்ல. கடவுள் மேல் இருக்கும் அன்பானது, அது உன்னதமான, மகத்தான, பயப்பக்திகுரிய சந்தோஷம் கொண்டதாய் இருக்கிறது. ஏனென்றால் சந்தோஷத்திற்குரிய காரண கர்த்தாவாய் அமைந்திருக்கிற கடவுளே உன்னதமானவரும், மகத்துவமுள்ளவருமாய் இருக்கிறார். இப்படிப்பட்ட கடவுளுக்கு முன்பாக, நாம் நடுக்கத்துடனும், ஆரவாரத்துடனும், அவரை நேசிக்கவும், அவரில் மகிழவும் படைக்கப்பட்டுள்ளோம்.

5. நரகத்தில் பயம் இருக்குமா?

நரகம் என்பது அனைத்து அவிசுவாசிகளின் முடிவு ஆகும். மிக கொடிய இடமான ஒன்றாய் காணப்படும். மரணம் என்பது “பயங்கரங்களின் ராஜா”(யோபு 18:14) மற்றும் நித்திய மரணத்தின் இடமாய் இருக்கிறது. இது அனைத்துவிதமான பாவமுள்ள பயங்களுக்குண்டான இடமாயும், பரிசுத்தத்திற்கு எதிரான அகோரமான முடிவாகும். விசுவாசித்து, நடுங்குகின்ற பிசாசுகளை போல நரகத்தில் உள்ளவர்களும், கடவுளை வெறுக்கிறவர்களாய் இருப்பர்.    அவருக்கு முன்பாக, “இருதயங்களெல்லாம் உருகி, கைகளெல்லாம் தளர்ந்து, மனமெல்லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல அலைவுண்ணும்.” (எசே 21:7). “பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்.”( வெளி 6:16) ஆகவே, நரகத்தில், அனைவரும் தங்களை மறைத்துக்கொள்ள ஏங்கித் தவிப்பர். “ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே” (எபி 10:31). ஆம், மனந்திரும்பாத,  நரகத்தில் உள்ள அனைவரும் இவ்விதமாகவே வாதிக்கப்படுவர்.

 ஏசாயாவில் கூரும்வண்ணமாக, பயங்கரமான பாவிகளாய் நரகத்தில் காணப்படுவர்.

  “சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடுக்கம் பிடிக்கிறது; பட்சிக்கும் அக்கினிக்கு முன்பாக நம்மில் தரித்திருப்பவன் யார்? நித்தியஜுவாலைக்கு முன்பாக நம்மில் தாபரிப்பவன் யார் என்கிறார்கள்.” (ஏசாயா 33:14).

பாவமானது, முதலாவது இவ்வுலகத்தை பயமுள்ளதாய் மாற்றினது. நரகமானது, அதினுடைய முடிவானதாய் இருக்கிறது. ஆம், அது முடிவடையாத பயம் நிறைந்ததாயும் இருக்கிறது.

6. பரலோகத்தில் பயம் இருக்குமா?

1738ம் ஆண்டில், ஜோனத்தான் எட்வர்ட்ஸ் அவர்கள், 1 கொரிந்தியர் 13 ம் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு, அதை தொடர்ச்சியாக பிரசங்கித்துவந்தார். அவ்விதமாக பிரசங்கித்து வந்து, கடைசியாக இவ்விதமாக முடித்தார், “பரலோகம் என்பது அன்பு நிறைந்த இடம்” பரலோகம் ஒரு பயம் நிறைந்த உலகம் என்று அவர் சொல்லியிருக்க முடியும், ஏனென்றால் அவர் விவரித்த அன்பு ஒரு பயமுள்ள மகிழ்ச்சியும் ஆச்சரியமுமாய் இருந்தது. அங்குள்ள பரிசுத்தவான்கள், “அன்புடன் கூடிய நெருப்புச் சுடரைப் போல” இருப்பார்கள் என்று சொன்னார்.  நரகத்தில், பயங்கரமான எல்லா பாவ அச்சங்களும் இருக்கும் அதேசமயத்தில், பரலோகம் என்பது வரையறுக்கப்படாத, அதிகபட்சமான, மகிழ்ச்சியால் நிறைந்த, தகப்பன், பிள்ளை குரிய பயத்தை கொண்ட இடமாகும்.

பரலோகமே, இந்தவிதமான பயத்தை கொண்ட வீடாய் இருக்கிறது.

  “அவருடைய கண்டிதத்தால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.” (யோபு 26:11).

தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர். (சங்கீ 89:7).

அங்கு பரிசுத்தவான்கள், அவரை முக முகமாய் பார்த்து, அவருக்கு பயந்து மகிழுவார்கள். அனைத்தையும் படைத்த சிருஷ்டிகராக அவரை கண்டு, அவருக்கு முன்பாக பயந்து நடுங்குவர்.

தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்.

 நீர் ராகாபை வெட்டுண்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; உமது வல்லமையான புயத்தினால் உம்முடைய சத்துருக்களைச் சிதறடித்தீர்.

 வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர். (சங்கீ 89:9-11).


This article is adapted from Rejoice and Tremble: The Surprising Good News of the Fear of the Lord by Michael Reeves.


Michael Reeves (PhD, King’s College, London) is president and professor of theology at Union School of Theology in Bridgend and Oxford, United Kingdom. He is the author of Delighting in the TrinityRejoicing in Christ; and The Unquenchable Flame.

No Response to “தெய்வ பயத்தைகுறித்ததான ஆறு கேள்விகள் || 6 Questions about the Fear of God.”

Leave a Comment