கிறிஸ்துவின் இரக்கம் – ஜோன் ஃப்லேவல். (1628-1691) The Mercy of Christ – John Flavel.(1628-1691)

Published July 31, 2022 by adming in Pastor's Blog

முதலாவது, அவர் இலவசமானவராய் காணப்படுகிறார். இதினிமித்தம், அவர் தேவனுடைய ஈவு என்று யோவான் 4:10 ல் பார்க்கிறோம். இவர் எவ்விதமாய் இலவசமாய் காணப்படுகிறார், என்று பார்ப்போமானால், ரோமர் 5:8 ன் படி நாம் சத்துருக்களாய் இருக்கையில், தேவன், அவரை நமக்காக கொடுத்தார் என்று பார்க்கிறோம். ஆம், இரக்கம், இலவசமானது மட்டுமல்ல, அது தகுதியற்ற நபருக்கு கொடுக்கப்பட்டது. இது கர்த்தருடைய கொடை. முழுக்க, முழுக்க அவருடைய ஈவாகவே காணப்படுகிறது. (யோவான் 3:16).

இரண்டாவதாக, கிறிஸ்துவானவர், இரக்கம் நிறைந்தவராய் இருக்கிறார். கோபம் நிறைந்த கடவுளை திருப்தி செய்ய, கிறிஸ்து மாத்திரமே வழியாய் இருக்கிறார். ஆத்துமாவின் தேவையை சந்திக்க அவர் ஒருவரே வழியாய் இருக்கிறார். கிறிஸ்து ஒருவரே, இரக்கத்தில், விஸ்தாரமானவராகவும், தீவீரமானவராகவும் இருக்கிறார். அவரில் மாத்திரமே அனைத்து விதமான இரக்கங்களை கொண்டிருக்கிறார். அவரில் மாத்திரமே, பரீபூரண மற்றும், உயர்ந்த அளவு கொண்ட இரக்கத்தை கொண்டிருக்கிறார். சகல பரீபூரனமும், அவருக்குள்ளே வாசமாய் இருக்கும்படியாக, பிதாவானவருக்கு, பிரியமாயிற்று. (கொலோ 1:19)

மூன்றாவதாக, கிறிஸ்துவானவர், பிதாவானவரால் ஏற்ற காலத்தில் நமக்கு அனுப்பப்பட்ட, இரக்கமாய் கிறிஸ்து இருக்கிறார்.(ரோமர் 5:6) கலாத்தியர் 4:4 ன்படி ஏற்ற காலத்தில், உலகத்திற்கு வெளிப்படுத்தப்பட்டவராயும், தனிப்பட்ட விதத்தில், ஒரு ஆத்துமாவுக்கு, பயன்படுகிற இரக்கமுள்ளவராயும் காணப்படுகிறார். தேவ ஞானம், அவரை, சரியான நேரத்தில், மனித அவ தாரம் எடுக்க செய்து, அவரை சரியான விதத்தில் பயன்பட செய்தது. வறிய நிலையில் இருக்கும் ஒரு ஆத்துமா சோர்வுற்று இருக்கும் போது, எதையோ பறிக்கொடுத்த நிலையில் இருக்கும் போது, அழியும் தருவாயில் போகும்போது, கிறிஸ்து அச்சமயத்தில் வருகிறார். தேவனுடைய அனைத்து செயல்களும் அந்த அந்த காலத்தில் செய்யப்படுகின்றன, ஆனால் கிறிஸ்துவின் பெரிய வேலையாகிய இரட்சிப்பே அதில் சிறந்தது.

நான்காவதாக, கிறிஸ்துவானவர், அவசியமான இரக்கமானவராய் இருக்கிறார். ஆம், இங்கு, இயேசு கிறிஸ்துவின் மிக அவசிய தன்மையை நாம் பார்க்கிறோம். அதினால்தான், வேதம் அவரை குறித்து, “ஜீவ அப்பம்” என்று அழைக்கிறது. (யோவான் 6:41). அவர், பசித்த ஆத்துமாவிற்கு, அப்பமாய் இருக்கிறார். அவர், தாகமுள்ள நாவிற்கு அவசியமான குளிர்ந்த தண்ணீரைப்போல, கிறிஸ்துவானவர், “ஜீவ தண்ணீர்” என்று அழைக்கப்படுகிறார். யோவான் 7:37, அடிமைகளை மீட்கிறவராய், மத்தேயு 20:28. நிர்வாணத்தை மூடுகிற வஸ்திரமாய், ரோமர்:8. பசித்தவனுக்கு அப்பத்தை கட்டிலும், தாகமாயிருக்கிறவனுக்கு, தண்ணீரை காட்டிலும், நிர்வாணமாயிருக்கிறவனுக்கு உடையை காட்டிலும், அடிமைப்பட்டவனுக்கு விடுதலையை காட்டிலும், ஒரு பாவிக்கு கிறிஸ்து அதிக அவசியமாய் இருக்கிறார். நம்முடைய உயிர் மூச்சாய் கிறிஸ்து இருக்கிறார்.

ஐந்தாவதாக, கிறிஸ்து இரக்கத்தின் நீரூற்றாய் இருக்கிறார். அனைத்து இரக்கங்களும், அவரிடத்திலிருந்துதான் வருகிறது. ஒரு விசுவாசி கிறிஸ்துவோடு ‘இவ்விதமாக சொல்லுகிறான், “என்னுடைய அனைத்து ஊற்றும் ‘உம்மிலே’. நம்முடைய மீட்பு, நீதி, பரிசுத்தமாகுதல், பரிசுத்த ஆவிக்குள் உள்ள சந்தோஷம், சமாதானம்,மற்றும் வரப்போகிற நித்திய ராஜ்யத்தின் ஆசீர்வாதம் அனைத்தும் அவரிலேயே தங்கி இருக்கிறது. “அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க……. திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்.(சகரியா 13:1).

ஆறாவதாக, கிறிஸ்துவானவர், திருப்திகரமான இரக்கமாய் இருக்கிறார். கிறிஸ்து எங்கு நிறைவாய் இருக்கிறாரோ, அங்கு குறைவானது ஒன்றுமில்லை. “இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.” 1 கொரி 2:2. கிறிஸ்து ஒருவரே, ஒரு ஆத்துமாவின் ஆவலை கட்டுகிறவரும், கட்டுபடுத்துகிறவருமாய் இருக்கிறார். ஒரு ஆத்துமாவின் இளைபாறுதலே அவராகத்தான் இருக்கிறார். பல விதங்களில் பாதிக்கப்பட்ட, வெறுமையும், பசியுள்ள ஆத்துமா, கிறிஸ்துவுக்குள் வரும்பொழுது மாத்திரமே நிறைவை காணுகிறது. இளைப்பாறுதலற்ற ஒரு ஆத்துமா, ஆசீர்வாதம் நிறைந்த சமுத்திரமாகிய கிறிஸ்துவில் மாத்திரமே இளைப்பாறுதலை அடைகிறது.

ஏழாவதாக, கிறிஸ்துவானவர், வினோதமான இரக்கமாய் இருக்கிறார். ஆம், இம்மனுக்குலத்தில், குறிப்பிட்டவர்களுக்கு, அதாவது, மீதியானவர்களுக்கு  மாத்திரமே உரியவராய் இருக்கிறார். இந்த உலகம் எவ்வளவு விஸ்தாரமாய் இருக்கிறதோ, அந்த அளவிற்கு, இந்த மீட்பை கொண்டு போகலாம். ஆனால், சுவிசேஷம், எவர்கள் விசுவாசிக்கிறார்களோ, அவர்களுக்கு மாத்திரமே உரியதாய் இருக்கிறது. அவர்கள்தான், அவருக்கு சொந்தமான ஜனமாய் இருக்கிறார்கள். (1பேதுரு 2:9) கிறிஸ்துவின் அழைப்பு, அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது. ஆனால், குறிப்பிட்டவர்களுக்கு மாத்திரமே, கிறிஸ்துவானவர் சொந்தமாகிறார். (ஏசாயா 53:1).

எட்டாவதாக, கிறிஸ்துவானவர், பொருத்தமான இரக்கமாய் இருக்கிறார். நம்முடைய அனைத்து, தேவைகள், விருப்பங்களுக்கு பொருந்தி போகிறவராய் இருக்கிறார்.(1 கொரி 1:20) அவரில் அனந்த ஞானம் எவ்வளவு அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. “அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்” (கொலோ 2:10). நாம் எதிராளிகளாய் இருக்கிறோமா? அவரே ஒப்புரவாகுதலுக்குரியவராய் இருக்கிறார். நாம் பாவத்திற்கும் பிசாசிற்கும் விற்கப்பட்டவர்களாய் இருக்கிறோமா? அவரே மீட்பாய் இருக்கிறார். நாம் நியாயபிரமாணத்தின் சாபத்தை உடையவர்களாய் இருக்கிறோமா? அவரே நம்முடைய நீதியின் கடவுளாய் இருக்கிறார். பாவம் நம்மை பாழ்படுத்திவிட்டதா? அவரே நம்முடைய பாவத்தையும், அசுத்தத்தையும் போக்க ஊற்றாய் இருக்கிறார். நாம் கடவுளை விட்டு தூரம் போனவர்களாய் இருக்கிறோமா? அவரே நம்மை ஏற்றுக்கொள்ளும் வழியாகிய பிதாவாய் இருக்கிறார். களைத்தவனுக்கு தேவைப்பட்ட இளைப்பாறுதலை விட, பசித்தவனுக்கு தேவைப்படும் அப்பத்தை விட ஒரு உணர்வுள்ள பாவிக்கு கிறிஸ்து அதிகம் தேவைப்படுகிறார்.

ஒன்பதாவதாக, கிறிஸ்துவானவர், அற்புதமான, ஆச்சரியமளிக்கும் இரக்கமுள்ளவராய் இருக்கிறார். அவருடைய நாமம் அற்புதமானவர். (ஏசாயா 9:6). அவரும் அவருடைய பெயரை போலவே இருக்கிறார். அற்புதமான கிறிஸ்து. அவருடைய நபரில் அற்புதமாய் இருக்கிறார். “தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். அவருடைய தாழ்மை அற்புதமானது. (பிலி 2:6). அவருடைய அன்பு அற்புதமான அன்பாய் இருக்கிறது. அவருடைய மீட்பு, அற்புதங்களினால் நிறைந்தது. தேவ தூதர்கள் அதை பார்க்க ஆசைபட்டார்கள். ஆம், தேவ தூதர்களும், பரிசுத்தவான்களும், அவரை நித்திய நித்தியமாய் பார்த்து மகிழுவார்கள்.

பத்தாவதாக, கிறிஸ்துவானவர், எவரோடும் ஒப்பிடப்பட முடியாத இரக்கமாய் இருக்கிறார். “காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன். அதி கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது.” (உன் 2:3) கிறிஸ்துவையும், மற்ற அனைத்து சந்தோஷங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பரலோகத்திலோ அல்லது இப்பூமியிலோ அவரை போல எவற்றோடும் ஒப்பிடப்பட முடியாது. அவர் எல்லாவற்றை காட்டிலும் சிறந்தவர். எவ்வாறு சூரிய ஒளி, ஒரு மெழுகுவர்த்தியின் ஒளியை விட பிரகாசமாய் இருக்கிறதோ, அவ்வாறே அவர் காணப்படுகிறார். அவர், சமாதானம், ஆறுதல், சந்தோஷம் அனைத்தையும் விட மேலானவராய் இருக்கிறார். “பரலோகத்தில்  உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.” (சங்கீதம் 73:25)

பதினோறாவதாக, கிறிஸ்துவானவர், ஆராய்ந்து பார்க்க முடியாத இரக்கமாய் இருக்கிறார். அவருடைய பெயரை குறித்து விவரிக்க யாரால் சொல்லி முடியும்? (நீதி 30:4) அவருடைய ஆராய்ந்துமுடியாத ஐசுவரியத்தை குறித்து யாரால் விவரிக்க முடியும்?(எபேசியர் 3:8) ஆம், அவரிடத்திலிருந்து, புதிதான, அற்புதமான காரியங்கள் நித்தியமாய் வந்துக்கொண்டே இருப்பதினால், அவருடைய அன்பை அறிந்து கொள்வதிலோ, அவரை ஆராய்ச்சி பண்ணுவதிலோ, எந்த ஒரு ஆத்துமாவும் இளைப்படைவதில்லை. உருவாக்கப்பட்ட எந்த ஒரு வஸ்துவும், அது தேவ தூதர்களானாலும், மனிதர்களானாலும், அவரை குறித்ததான ஆழத்தை அறிந்து கொள்ளவே முடியாது.

பன்னிரண்டாவதாக, கடைசியாக,  கிறிஸ்துவானவர் நித்திய இரக்கமாய் இருக்கிறார். “அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராய் இருக்கிறார். அனைத்து விதமான சந்தோஷங்கள் அழியக்கூடியது. ஆனால், கிறிஸ்துவின் ஐசுவரியங்கள் மாத்திரம் அழியாதது.(நீதி 8:18). கிறிஸ்துவின் இரக்கம் நித்தியமான ஒன்று. (யோவான்4:14). எல்லா சிருஷ்டிகளும் மலர்களை போன்றது. ஒரு காலத்தில் பூத்து பின்பு மறைந்து விடும். ஆனால், இந்த சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்குகளின் லீலி புஷ்பம் என்றுமே அழியாதது, நித்தியமானது.


John Flavel (1628–1691) was an English Puritan who became a non-conformist after the ‘Great Ejection’ of 1662. It was 10 years before he was licenced to preach again, and then only in his own home. His writings, when collected in the 19th century, filled 6 volumes. Flavel’s writings are known for their practical nature.
Flavel’s complete works were printed five times in the eighteenth century, three times in the nineteenth century, and several times in the twentieth century. Repeated printings of his writings (also in individual paperback editions) testify to their sound doctrinal instruction and spiritual application. They have been used by the Spirit to influence many people, including notable divines such as Jonathan Edwards and George Whitefield, and Scottish evangelical leaders such as Robert Murray M‘Cheyne and Andrew Bonar.
Flavel was humble, godly, and learned. He spent much time in study and prayer. One of his children wrote, “He was always full and copious in prayer, seemed constantly to exceed himself, and rarely made use twice of the same expressions.” 

No Response to “கிறிஸ்துவின் இரக்கம் – ஜோன் ஃப்லேவல். (1628-1691) The Mercy of Christ – John Flavel.(1628-1691)”

Leave a Comment