தேவன் பேரில் ஆவல்! – தொமஸ் வாட்சன். Desiring God! – Thomas Watson.

Published September 28, 2022 by adming in Pastor's Blog

“பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத்தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.” (சங்கீதம் 73:25).

நாம் தேவன் பேரில் உண்மையான ஆவல் கொண்டிருக்கும்போது, நம்முடைய இருதயங்களில் தேவனுடைய இராஜ்யம் தங்கியிருப்பதை அறியலாம். இவ்விதமான, உணர்வை நாம் கொண்டிருக்கும்போது, அங்கு வாழ்வு உண்டு என்பதை அறிந்துகொள்ளலாம்.

தேவன் பேரில் உள்ள உண்மையான ஆவல், உண்மையானதாய்(Sincere) இருக்கிறது. நாம் தேவனை, அவருக்காக, அவருடைய உள்ளார்ந்த மேன்மைகளுக்காக ஆவல் கொள்கிறோம். கிறிஸ்துவின் கிருபையான பரிமளத்தைலத்தின் வாசனையானது, கன்னியர்கள் அவருக்குப் பின் செல்ல இழுக்கிறது.(உன் 1:3). ஒரு உண்மையான பரிசுத்தவான், தேவன் வைத்திருப்பதை மட்டும் வாஞ்சிக்கிறவனாய் மாத்திரமல்ல, அவரையே வாஞ்சிக்கிறவனாய் இருப்பான். அவருடைய வெகுமதிகளை மட்டும் வாஞ்சிப்பவனாய் மாத்திரமல்ல, அவருடைய பரிசுத்தத்தை வாஞ்சிக்கிறவனாய் இருப்பான். எந்த ஒரு மாயமாலக்காரனும், கடவுள் மேல் விருப்பம் கொள்ள முடியாது. ஒருவேளை அவருடைய பொக்கிஷங்களை விரும்பலாம், ஆனால், அவருடைய அழகில் விருப்பம் கொள்ள முடியாது.

தேவன் பேரில் உள்ள உண்மையான ஆவல், மனநிறைவு உணடாக்கமுடியாதது(Insatiable). உலகமானது, பணம், பேர், புகழ், போன்றவற்றினால் நிரம்பலாம். ஆனால், அது ஒருநாளும் திருப்திபடுத்தாது. கடவுள் இல்லையென்றால், மன நிறைவை பார்க்கமுடியாது. ஒரு தாகமுள்ளவனை, இனிமையான இசையோ அல்லது அழகான மலர்களோ ஒருக்காலும் திருப்திபடுத்தாது. அதுபோல, ஆத்துமாவின் தாகத்தை தீர்க்க, கிறிஸ்துவின் இரத்தத்தினால் மாத்திரமே முடியும். அவன், தேவன் பேரில் வாஞ்சையும், தவனமுமாகவே இருக்கிறான். (சங்கீதம் 84:2; சங்கீதம் 119:20).

தேவன் பேரில் உள்ள உண்மையான ஆவல், சுறுசுறுப்புள்ளதாய்(Active) காணப்படும். ஆவல் செயலாக்கத்திற்குள்ளாக எழும்புகிறது. “என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது. எனக்குள் இருக்கிற என் ஆவியால், அதிகாலையிலும் உம்மை தேடுகிறேன்.” (ஏசாயா 26:9). அவ்விதமான விதத்தில் ஒரு ஆத்துமா வாஞ்சிக்கும்போது, இவ்விதமாக சொல்லும், “எவ்வளவு போராட்டம் வந்தாலும், நான் கிறிஸ்துவை கொள்ள வேண்டும்! கிருபையை கொள்ள வேண்டும்! பரலோகத்தை கொள்ள வேண்டும்!

தேவன் பேரில் உள்ள உண்மையான ஆவல், உன்னதமானது(Supreme). நாம் கிறிஸ்துவை நேசிக்கிறோம் என்றால், உலகத்தை காட்டிலும் அல்ல, பரலோகத்தை காட்டிலும் நேசிக்கிறோம். “பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைதவிர எனக்கு வேறே விருப்பமில்லை.”(சங்கீதம் 73:25). கிறிஸ்து இல்லாமல் பரலோகத்திற்கே திருப்தி இருக்காது. ஆம், மகிமை என்ற மோதிரத்தில், கிறிஸ்து ரத்தினமாய் இருக்கிறார்.

தேவன் பேரில் உள்ள உண்மையான ஆவல் வளர்ந்துகொண்டிருப்பது(Increasing). கர்த்தருடைய சிறிய காரியம் ஒருநாளும் திருப்திபடுத்தாது. ஒரு பக்தியுள்ள ஆத்துமா, இன்னும் வாஞ்சிக்கும். ஒரு தாகமுள்ள பிரயாணிக்கு, துளி தண்ணீர் போதவே போதாது. ஒரு கிறிஸ்தவன் மிக குறைந்த அளவு, அவருடைய கிருபைக்கு, நன்றியுள்ளவனாக இருந்தாலும், இன்னும் அவருடைய பெரிய அளவிலான கிருபையால் அவன் திருப்தியடைவதில்லை. அவன், இன்னும், கிறிஸ்துவின் பேரிலும், அவருடைய ஆவியின் பேரிலும் வாஞ்சையுள்ளவனாய் இருக்கிறான். ஒரு பரிசுத்தவானுக்கு, அதிக அறிவு, அதிக பரிசுத்தம், கிறிஸ்துவின் பிரசன்னம் அதிகமாகவே இருக்கலாம். ஒரு கட்டளையின் தொகுப்பின் மூலம், கிறிஸ்துவின் ஒரு பார்வை இனிமையானது. ஆனால், அந்த ஆத்துமா, அவரை நேருக்கு நேர் சந்திக்கும் வரை, அவர் மீது வைத்துள்ள ஏக்கத்தை, வாஞ்சையை நிறுத்தாது. அது எப்போதும், கிருபையை, மகிமையில் பூரனபடுத்த வாஞ்சிக்கிறது. கர்த்தருடைய, இனிமையில், முழுவதுமாக, மூழ்கிவிட எப்போதும் விரும்புகிறது. நாம், கடவுளில், மூழ்கடிக்கப்பட்டு, அவருடைய வலது பாரிசத்தில், ஓடும், அந்த இன்பத்தின் வாசனை நீரில், என்றென்றும் நனைந்திருப்போம்.

நிச்சயமாக, இவ்விதமான, தேவன் பேரில் உள்ள உண்மையான பற்று, ஆசை, கிருபையின் ராஜ்யம் நம்முடைய இருதயத்தில், வந்திருப்பதற்கான ஆசீர்வாதமான அடையாளமாய் இருக்கிறது. இவ்விதமான வாஞ்சையின் துடிப்பு – வாழ்வை காண்பிக்கிறது. கர்த்தருக்காக கொண்டிருக்கிற வாஞ்சைகள் – கர்த்தரிடத்திலிருந்து வருகிறதாய் இருக்கிறது.  இரும்பு, அதன் இயல்புக்கு மாறாக, மேல்நோக்கி நகர்ந்தால் – ஏதோ ஒரு காந்தம் அதை தன்னிடத்தில், இழுத்துக்கொள்வதற்குண்டான அறிகுறியாக இருக்கிறது. அவ்வண்ணமாகவே, ஒரு ஆத்துமா, உண்மையான ஆசைகளுடன் தேவனை நோக்கி நகர்ந்தால், ஆவியின் காந்தம் அதை தன்னிடத்தில் இழுத்துக்கொள்வதற்குண்டான அறிகுறியாகும். “அவர் தமக்கு பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்கிறார்.” (சங்கீதம் 145:19)

No Response to “தேவன் பேரில் ஆவல்! – தொமஸ் வாட்சன். Desiring God! – Thomas Watson.”

Leave a Comment