நீங்கள் சபையில் சேர்ந்திருக்க வேண்டிய பத்து காரணங்கள் – பீட்டர் ஆடம் || Ten Reasons Why You Need to Belong to a Church – Peter Adam

Published April 23, 2021 by adming in Pastor's Blog

“மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டு விடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.” (எபிரெயர் 10:24,25).

1. ஏனென்றால், கிறிஸ்தவ ஐக்கியத்தின் ஆதரவும், உற்சாகமும் தொடர்ச்சியாக உங்களுக்கு தேவைப்படுகிறது.

கிறிஸ்தவ வாழ்வு என்பது தனித்து வாழும்படியான வாழ்க்கையாக வடிவமைக்கப்படவில்லை. அப்படியாக வாழ நினைப்பவர்கள், வீழ்ச்சியை சந்திப்பர். (பார்க்க எபி 10:25)

2. ஏனென்றால், கிறிஸ்தவ நண்பர்களுகிடையே உள்ள ஐக்கியம், (Christian Fellowship) சபைக்கு மாற்றாக ஒருபோதும் இருக்க முடியாது.

உங்களுடைய நண்பர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கும்பொழுது, உங்களுடைய எண்ணங்களுக்கும், வாழ்க்கை முறைகளுக்கும் ஒத்து இருக்கிறவர்வைகளை தேர்ந்தெடுக்கிறீர்கள். ஆனால், தேவனோ, ஒருவரிடத்திலிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளுவதற்காகவே, சபையில் பலதரப்பட்ட மக்களை வைக்கிறார். (பார்க்க தீத்து 2:1-10).

3. ஏனென்றால், வரங்கள், சபையில் அங்கத்தினராக உள்ளவர் மட்டுமே, சரியான விதத்தில் பயன்படுத்த முடியும்.

வரங்கள், பொதுவாக, சரியான விதத்தில் பயன்படுத்தபடுவதற்கும் சபை கட்டப்படுவதற்கும், சபையாருக்கு கொடுக்கப்பட்டதே ஒழிய, தனி நபருக்கு அல்ல. சபையானது  சரீரம் என்று சொல்லப்படுகிறது. சரீரமாகிய சபையின் அங்கங்களாய் இருக்கிற நாம் ஒவ்வொருத்தரும், நம்முடைய வரங்களை ஒருவரையொருவர் பகிர்ந்தளித்து, இசைந்து சபையை கட்டுகிறோம். நீங்கள், கண் தனியாக, கால் தனியாக அலைந்து, திரிந்து அது, அது வேலையை செய்கிறதை எங்கும் பார்க்கிறதில்லையே. ( பார்க்க 1கொரி 12).

4.ஏனென்றால், தேவனுடைய அடிப்படையான அமைப்பே சபை தான், தனி நபர் அல்ல.

வேதத்தின் சாராம்சமே, ஆபிரகாம் முதற்கொண்டு, நீங்கள் பார்ப்பீர்கள் என்றால், தேவன், தம்முடைய மக்களை, உருவாக்குகிறார், செதுக்குகிறார், சுத்திகரிக்கிறார். தனி நபர்களுடைய வாழ்க்கையை பார்ப்பீர்கள் என்றால், எடுத்துக்காட்டாக, தாவீது, ஏசாயா, சீடர்கள், அதன் பிறகு பவுல், இவர்களுடைய வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருந்தது. ஏனென்றால், இவர்களெல்லாம், தொடர்ச்சியாக, தேவனுடைய சமுதாயத்தின் ஒரு பகுதியாகவே காணப்பட்டனர். இவ்வகையான திட்டம், கிடடத்தட்ட 4000 வருடங்களாக உள்ளது. இத்திட்டத்தை, கடவுள் மாற்றினார் என்று எந்த அறிகுறியும் இல்லை. (பார்க்க ஆதி 12:1-3; 15:1-6; ரோமர் 4).

5. ஏனென்றால், நாம் கிறிஸ்தவர்களாய் செலுத்தவேண்டிய விலைகிரயத்தை செலுத்த தவறி விடுவோம்.

‘நானே ராஜா’ என்ற மனப்பான்மை வெகுவாக சிலரை கவர்ந்திருக்கிறது. ஆனால், அது சீடத்துவத்தின் விலைகிரயத்தை அழித்துப்போடுகிறது. இயேசுவானவர், அனைவருக்கும் பணிவிடை செய்யவே, தம்மை பின்பற்றுகிறவர்களை பார்த்து அழைத்தார். (பார்க்க மாற்கு 10:35-45).

6. ஏனென்றால், நீங்கள் சபையில் அங்கத்தினராய் இருந்தாலொழிய, புதிய ஏற்பாட்டை சரியான விதத்தில் புரிந்து கொள்ள முடியாது.

புதிய ஏற்பாட்டின் நிருபங்கள் அனைத்துமே சபைகளுக்கு சொல்லப்பட்டதை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் மட்டுமே, தனியாக, வீட்டில் அமர்ந்து வேதத்தை படித்துக்கொண்டிருப்பீர்கள் என்றால், கடவுளுடைய வார்த்தையை கேட்பதற்கு, நீங்கள் சரியான இடத்தில் இருக்க மாட்டீர்கள். மேலும், அவ்வேதத்தின் அர்த்தத்தை ‘தனிப்பட்டதாக்கிக்கொண்டும்’, அதை தவறான விதத்தில் புரிந்து கொண்டும் செயல்படுவீர்கள். (பவுலின் நிருபங்களை சற்று பார்க்கவும்).

7. ஏனென்றால், சபை ஐக்கியத்தில் மட்டும்தான் அடிப்படையான ஞானம் மற்றும் விசுவாசத்திற்குண்டான முதிர்ச்சியை கண்டு கொள்ளலாம்.

சபை என்ற அமைப்புக்கு ஒத்துவராத எவருடைய வாழ்விலும் முதிர்ச்சியற்ற தன்மையைதான் அவர்கள் கொண்டிருப்பர் என்று வேதம் தெளிவாக போதிக்கிறது. (தீத்து 1:5; 3:10). விசுவாச நிறைவும், முதிர்ச்சியும், ஒன்று கூடி அனுபவிக்கிற சபை ஐக்கியத்தில் மட்டுமே காணலாம். (எபேசியர் 3:14-21; 4:13-16).

8. ஏனென்றால், ஞானஸ்நானமும், திருவிருந்தும் கிறிஸ்தவனின் கீழ்படிதலுக்கு அடிப்படையாய் இருக்கிறது.

கிறிஸ்துவானவர்  கட்டளையிட்டபடியினால், இவ்விதமான திருநியமனங்களை நாம் கடைபிடிக்கிறோம். இது தனிப்பட்ட விதத்தில் செய்கிற சடங்குகள் அல்ல, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் ஒருங்கிணைந்த செயல்கள் ஆகும். பறித்துக்கொண்டு ஓடுகிற செயல் தவறான போக்கு. அதே சமயத்தில், அவைகளை பகிர்ந்து கொள்வது, சபைக்கு அடுத்த காரியமாய் இருக்கிறது. (பார்க்க 1 கொரி 10:16; 11:17-34; 12:13).

9. ஏனென்றால், கிறிஸ்தவ தலைமைக்கு அடங்கி நடக்கிற காரியம், புதிய ஏற்பாட்டின் கிறிஸ்தவத்தின் அங்கமாய் இருக்கிறது.

ஒரு குறுகிய காலத்திற்கு, ‘தனி ஆளாக செல்வதில்’ பார்க்கிறதற்கு நன்றாக இருக்கும். அதே சமயத்தில், எந்தவித மனித அதிகாராமோ, கட்டமைப்போ நமக்கு தேவையில்லை என்று கற்பனை பண்ணிகொண்டிருப்போமென்றால், கடைசியாக நாம்தான் வீழ்ச்சியை சந்திக்கிறவர்களாய் இருப்போம். சபையில் உள்ள அதிகாரமும், ஒழுங்கும், நமக்கு உதவி செய்வதற்கு, கடவுளால் ஏற்படுத்தப்பட்ட, அவருடைய உண்மையான வழியாய் இருக்கிறது. (பார்க்க எபி 13:17; தீத்து 1:5).

10. ஏனென்றால், சபைக்கு மாற்றாக எந்தவித கிறிஸ்தவ ஐக்கியமா, சுவிசேஷ குழுவோ, கிறிஸ்தவ சமுதாயமோ அமையாது.

கிறிஸ்தவ விசேஷ குழுக்கள் மற்றும் அணிகள், (Christian Special Groups and Teams) நிச்சயமாக, சபையைவிட மிகுந்த உற்சாகமுள்ளதாய் இருக்கும். ஏனென்றால், இவர்கள், ஒரே மன நிலை கொண்ட பல்வேறு யுக்திகளை கையாண்டு மக்களை கவர்ந்து இழுப்பர். இவர்கள் ஒருவேளை நல்ல பணிகளை செய்கிறவர்களாய் இருக்கலாம், ஆனால், சபையை போன்று இல்லாமல், குறிப்பிட்ட நபர்களை கொண்டு, குறிப்பிட்ட பணியை முடிக்கும் நோக்கத்தோடு செயல்படுவர். சபையானது, அப்படி இல்லாமல், தேவனுடைய இலவசமான கிருபையை பிரதிபலிக்கும் வண்ணமாக, அனைவரையும், அவர்கள், வரங்கள் கொண்டவர்களோ, இல்லையோ எல்லோரையும் ஏற்றுக்கொண்டு செயல்படுகிறதாய் இருக்கிறது.

Peter Adam is vicar emeritus at St. Jude’s Carlton, formerly principal of Ridley College Melbourne, and vicar of St. Jude’s.
He speaks at training conferences for preachers. Peter Adam was a founding member of the Council of The Gospel Coalition Australia.


2 Responses to “நீங்கள் சபையில் சேர்ந்திருக்க வேண்டிய பத்து காரணங்கள் – பீட்டர் ஆடம் || Ten Reasons Why You Need to Belong to a Church – Peter Adam”

  1. Simon Ramesh
    September 3, 2021

    Very excellent truth please keep post the sermons may the Lord bless you.

    Reply
    • adming
      October 6, 2021

      Thank You dear brother.

      Reply

Leave a Comment