உண்மை கிறிஸ்தவம் போதிக்கும் 15 கொள்கைகள்- 15 Principles True Christianity Teaches -Grant Castleberry

Published February 25, 2021 by adming in Pastor's Blog

கிரான்ட் கேஸ்ட்ல்பெர்ரி (Grant Castleberry)

1.  கடவுள் ஒருவரே இப்பிரபஞ்சத்தின் இராஜாவாய், இப்பிரபஞ்சத்தை படைத்தவராய், அதனை அனைத்தும் ஆளுகை செய்கிறவராய்  இருக்கிறார்  என்று உண்மை கிறிஸ்தவம் போதிக்கிறது. (ஆதி 1:1; சங்கீ 47:7; சங்கீ 145:1; ரோமர் 14:17).ஆகையால், அனைத்து மக்களும், கடைசியாக அக்கடவுளுக்கு கணக்கு கூற வேண்டியவர்கள். (அப் 17:31).

2. கர்த்தருடைய வார்த்தை சத்தியமாயிருக்கிறது. ஏனென்றால், தேவன் ஒருவரே சத்தியத்தை  நிலைநாட்டுகிறவராய் இருக்கிறார் என்று உண்மை கிறிஸ்தவம் போதிக்கிறது. (யோவான் 17:17).

இந்த சத்தியம், மனுக்குலத்திற்கு கொடுக்கப்பட்ட விசேஷ வெளிப்பாடான, தவறிழைக்காத, கடவுளால் அருளப்பட்ட வேத புத்தகம். (2 தீமோ 3:16). இந்த வார்த்தையின் மூலம், தேவன் இவ்வுலகத்தை ஆட்சி செய்கிற ராஜாவாய், நம்முடைய மீட்ப்பின் அவசியத்தையும், தேவன் அருளிய நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து அறிந்து கொள்கிறோம்.  

3. கடவுள்தாமே, இறையாண்மை கொண்ட ஆட்சியாளராக, இறுதி அதிகாரத்தை கொண்டிருப்பதால், அவர் மட்டுமே நீதியின் இறுதி நடுவர் என்று உண்மையான கிறிஸ்தவம் போதிக்கிறது.  ஆகவே, இவ்வுலகத்தில் உள்ள அனைவரும், அவர்கள் கிறிஸ்தவர்களோ, அல்லது கிறிஸ்தவர்கள் இல்லாதவர்களோ அவர்கள் எவர்களாயினும், மனிதன் விதித்த சட்டத்திற்கு கீழ்படியா விட்டாலும்,(அப் 5:29) கடவுள் விதித்த சட்டத்திற்கு கீழ்படிய கடமைப்பட்டுள்ளனர்.(ரோமர் 2:12-16). எடுத்துக்காட்டாக, ஓரின சேர்க்கை திருமணத்தை வேதம் தவறு என்று கூறுவதினால், அத்திருமணத்தை புகைப்படம் எடுக்க, புகைப்படகாரர் புறக்கணிப்பதை சொல்லலாம். ஏனென்றால், கடவுளுக்கு முன்பாக தங்கள் மனசாட்சியை குற்றமில்லாமல் காத்துக்கொள்ளவும், அவர் ஒருவருக்கே கீழ்ப்படியவும் அப்படி செய்கின்றார்.   இங்கே சொல்லப்பட்ட சட்டங்கள், பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் சொல்லப்பட்ட ஒழுக்க சட்டங்கள் (யாத் 20; கலா 6:2). பழைய ஏற்பாட்டின் தேசிய சட்டமானது, இஸ்ரவேல் தேசத்திற்கு மட்டும் பொருந்த கூடியதும், பழைய ஏற்பாட்டின் பலிகளுக்குரிய சட்டமானது, கிறிஸ்துவில் நிறைவேற்றப்பட்டதாயும் இருக்கிறது.

4. உண்மையான கிறிஸ்தவம், ஒவ்வொரு இனமும், தேசமும் கொண்ட ஒவ்வொரு ஆணும், பெண்ணும், தேவனுடைய சாயலை கொண்டவர்கள்  என்றும், கடவுளுக்கு முன்பாக அனைவரும் சமம் என்றும் போதிக்கிறது. (ஆதி 1:26-28). பிரதானமாக, கடவுள் ஏன் மனுக்குலத்தை படைத்தார் என்றால், அவர்கள் இவ்வுலகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தவும், அதன்மூலம், பூமியில் கடவுளின் ஆட்சியை பிரதிபலிக்கவே படைத்தார். ஆகையால், கிறிஸ்தவர்கள், ஒழுக்க நெறிமுறைகளை கொண்டவர்கள். ஐந்து அறிவு கொண்ட விளங்குகளைபோல இல்லாமல், தேவனுடைய ஒழுக்க சட்டங்களை உணர்வுபூர்வமாக அறிந்தவர்கள். (ரோமர் 1:18-23).

5. இவ்வுலகத்தில் உள்ள ஒவ்வொரு நபரும், பரிசுத்த கடவுளுக்கு முன்பாக  எந்த விதிவிலக்கு இல்லாமல் பாவம் செய்தவர்களாயும், கடவுளுடைய ஒழுக்க சட்டத்தை மீறினவர்களாயும் உள்ளனர் என்றும், (ரோமர் 3:23)     அதினால் அனைவரும் ஆவிக்குரிய மரணமாகிய நரகத்திற்கே தகுதியுடையவர்களாய் இருக்கின்றனர் என்றும் உண்மை கிறிஸ்தவம் போதிக்கிறது. (ரோமர் 6:23). ஒழுக்க சட்டமானது பல்வேறு பாவங்களை உள்ளடக்கியதாய் இருக்கிறது. திருட்டு, பொருளாசை, விக்கிக ஆராதனை, வேசித்தனம், விபச்சாரம், மற்றும் ஓரினச்சேர்க்கை இதில் அடங்கும்.(1தீமோ 1:9-10; கலா 5:19-21). இந்த ஒழுக்க சட்டங்கள் அனைத்தும்  தேவன் கூறிய இரண்டு பிரதான கட்டளையாகிய, தேவனிடத்தில் அன்புகூறுதல் மற்றும் பிறனிடத்தில் அன்புகூருதலில் அடங்கியிருக்கிறது.(மத்தேயு 22:37,39).  ஓரினச்சேர்க்கை மற்றும் பாலியல் இச்சை, தேவன் ஏற்படுத்தின திருமண உறவுக்கு அப்பாற்பட்டு இருப்பதினால், அவை தேவனுடைய சட்டத்தை மீறுவதாகும்.

6. ஒவ்வொரு மனிதனும் கடவுளின் கோபத்திலிருந்து மீட்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக உண்மையான கிறிஸ்தவம் போதிக்கிறது. ஒவ்வொரு மனிதனும் மிக மோசமான பாவியாய் இருக்கிறான். அவனுடைய இருதயம், தன்னுடைய சுய விருப்பத்தை நிறைவேற்றவே துடிக்கிறதாய் இருக்கிறது. எந்த ஒரு மனிதனும் கடவுளுடைய சட்டத்திற்கு கீழ்படிவதில் விருப்பமோ அல்லது எண்ணமோ இல்லாததினால், எந்தவித சந்தேகமுமின்றி கடவுளுடைய சட்டத்தை மீறுகிறவர்களாகவே நாம் இருக்கிறோம்.(ரோமர் 9:16).

7. கிறிஸ்து சிலுவையில் நம்முடைய பாவங்களுக்காக மரித்ததின் மூலம் நாம் பெற வேண்டிய தண்டனையை தனது அன்பினாலும் இரக்கத்தினாலும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை உண்மையான கிறிஸ்தவம் போதிக்கிறது.(ரோமர்  5:6-11). அவரிடம் தஞ்சம் புகுந்த அனைவரும்  வருகிற நரக  தண்டனையிலிருந்து தப்பிப்பார்கள் என்பதற்கு அவருடைய உயிர்த்தெழுதல் சான்றாகும் (2 கொரி. 4: 13-15) மேலும் அவர்கள், கடவுளுக்கு முன்பாக நிற்கும்படி அவருடைய நீதியை சுதந்திரிக்கின்றனர். (2 கொரி 5:21)

8. ஒவ்வொரு மனிதனும் தங்கள் பாவத்தைப் பற்றி மனந்திரும்ப வேண்டும், இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவை நம்ப வேண்டும் என்று உண்மையான கிறிஸ்தவம் போதிக்கிறது. இயேசு கிறிஸ்து மட்டுமே நியாயப்பிரமாணத்தை பரீபூரணாமாக நிறைவேற்றுகிவராய், பாவ நிவாரண பலியாய், கடவுளுடைய  நியாயமான அடைக்கலமாய் இருக்கிறார். (யோவான் 14:6; அப் 4:12).  மேலும் கிறிஸ்தவ வாழ்வானது, கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, அனுதினமும் கிறிஸ்துவை நோக்கி மனந்திரும்பும் செயலாய் இருக்கிறது. (ரோமர் 12:1-2; பிலி 2:12-13).ஆகையால், ஒரு கிறிஸ்தவன் மற்றவர்களை மனந்திரும்புதலுக்கு அழைக்கும்போது, பொதுவாக  “நாம்” அல்லது  “அவர்கள்” என்று போலித்தனமான வார்த்தைகளை கூறாமல், மாறாக நாம் ஒவ்வொருவரும் ஏற்கனவே அனுபவித்திருக்கும்  மனந்திரும்புதலின் பாதையில் நடப்பதற்கான அழைப்பாக இருக்க வேண்டும். இதுவே, ஒருவராலும் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு அன்பும், இரக்கமும், கிருபையும் கொண்ட பாதையாய் இருக்கிறது.

9. உண்மையான கிறிஸ்தவமானது,  கிறிஸ்தவர்கள் எவரையும்  “வெறுக்க கூடாது” என்றும் மாறாக இயேசு கிறிஸ்துவின் அன்பினால் பாதிக்கப்பட்டவர்களாய் கடவுளையும், அண்டை வீட்டாரையும் நேசிக்க வேண்டும் என்று நமக்குக் போதிக்கிறது. (லூக்கா 10:25-37; கலா 5:14). இயேசுவானவர், தன்னை கொலை செய்தவர்களையும் கூட அன்பு செலுத்தினார், மன்னித்தார்.(லூக்கா 23:34). ஆகவே, அவருடைய அடிச்சுவடுகளை பின்தொடர்கிற கிறிஸ்தவர்கள், அனைவரிடமும் அன்பில் நடக்கிறவர்களாய் பிரயாசப்படுவர்.(1 யோவான் 4:7)

10. ஒரு கிறிஸ்தவர் மற்றொரு நபருக்கு செய்யக்கூடிய மிக மகத்துவமான அன்பான காரியம் என்னவென்றால், அவர்களிடத்தில் உள்ள ஒரே நம்பிக்கை,  இவ்வுலகத்தில் ஆத்மாக்களை இரட்சிக்க வல்ல ஒரே இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டுவதே உண்மையான கிறிஸ்தவம் போதிக்கிறது.

பெரிய சமுத்திரத்தில் மாட்டிக்கொண்டுள்ள சிறிய படகை காப்பாற்றுகிறது போல, அவர் ஒருவரே இம்மனுக்குலத்தின் இரட்சகராய், நம்பிக்கையாய் இருக்கிறார்.(அப் 4:12) ஆகவே, ஒருவரை, அவருடைய பாவத்திலிருந்து, அது குடிபோதையோ, திருட்டோ, அல்லது ஓரினச்சேர்க்கையோ, அவ்விதமான பாவத்திலிருந்து திரும்ப செய்கிற காரியம், வலுகட்டாயமாக மதமாற்றும்   செயல் அல்ல, அன்பினிமித்தமாக செய்யும் காரியம் ஆகும்.(அப் 3:19).

11. இருள் எப்போதும் ஒளியை முந்திக்கொள்ள முயற்சிக்கிறது என்பதை உண்மையான கிறிஸ்தவம் போதிக்கிறது (யோவான் 1: 5), சாத்தான் எப்போதும் சத்தியத்தை சிதைக்க முயற்சிக்கிறவனாய் இருக்கிறான்.(யோவான் 8:44). கிறிஸ்துவை அறியாதவர்கள், தேவனுடைய சத்தியத்திற்கு குருடாக்கப்பட்டவர்களாய், பிசாசுக்கு அடிமைப்பட்டவர்களாய், இருளில் மூழ்கிப்போனவர்களாய் உள்ளனர்.(2 கொரி 4:3-6). நாமெல்லாரும் ஒருகாலத்தில் இவ்விதமான இருளில் மூழ்கிப்போய் கிடந்தோம். ஆனால், கிறிஸ்துவானவர் இன்றைக்கு நம்மை இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு வரவழைத்திருக்கிறார்.(கொலோ1:13). ஆகையால், கிறிஸ்தவர்கள் சந்திக்கிற யுத்தம், முஸ்லிம் மக்களிடத்திலோ, தாராள போக்குடைய ஊடக மக்களுடனோ, அல்லது நவீன உலகத்திடனோ அல்ல, கிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு எதிராக உள்ள அந்தகார சக்திகளோடும், துரைத்தனங்களோடும், பிசாசோடும் கொண்டுள்ள போராட்டம்.(எபே 6:10-12).

12. இந்த அந்தகார சக்திகளாலும், இருளில் கிடக்கிற மக்களாலும்  கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவார்கள், வெறுக்கப்படுவார்கள் என்று உண்மையான கிறிஸ்தவம் போதிக்கிறது. (மாற்கு 13:13). கிறிஸ்துவே, தன்னில் உள்ள தேவனுடைய ராஜ்யத்தை குறித்து சொன்னதிற்காக, வெறுக்கப்பட்டிருக்கும் போது, நீயும் நானும் அவரோடுகூட அடையாளப்படுத்தும் போது, நன்மையான காரியங்களை எதிர்பார்ப்பது எப்படி (யோவான் 15:20)?

13. மிகவும் கடின இருதயம் கொண்ட பாவி, குறிப்பாக கடவுளையும் கடவுளின் சட்டங்களையும் புறக்கணித்து வெறுப்பவர்கள் கடவுளுடைய கிருபைக்கு தூரமானவர்கள் அல்ல என்று உண்மையான கிறிஸ்தவம் போதிக்கிறது.( மத்தேயு 9:12).  சவுல், சபையை துன்பபடுத்தினவனாயும், கிறிஸ்தவர்களை கொலை பண்ணுகிறவனாயும் இருந்தவன், ஏன் கிறிஸ்தவர்களுக்கு எதிராக  போய்கொண்டிருந்த வேளையில், தேவனுடைய மகத்துவமான கிருபையினால் சந்திக்கப்பட்டு, மனமாற்றமடைந்தான். (அப் 9).

14. கிறிஸ்துவில் நம்பிக்கை உண்டு என்றும், கிறிஸ்துவானவர் ஒரு நாள் திரும்பி வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார், எல்லா தவறுகளையும் சரி செய்வார், எல்லாவற்றையும் புதியதாக ஆக்குவார் (1 கொரி 15) என்று  உண்மையான கிறிஸ்தவம் போதிக்கிறது. கடைசி நாளில், ஒவ்வொருத்தரும், கிறிஸ்தவர்களும், கிறிஸ்துவை வெறுக்கிறவர்களும், இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக வந்து தலை வணங்குவர், சிலர் நித்திய வாழ்விலும், சிலர் நித்திய அழிவாகிய நரகத்திலும் காணப்படுவர். (பிலி 2:10-11).

15. “இப்பொழுதே அனுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.” (2 கொரி. 6:2). என்று உண்மையான கிறிஸ்தவம் போதிக்கிறது. நீங்கள் இதைப் படித்துவிட்டு, கடவுளின் சட்டங்களை வெறுத்து, கிறிஸ்துவை நிராகரித்திருந்தால்,  விசுவாசத்தோடு, மனந்திரும்பி, கிறிஸ்துவண்டை வருவதில், இப்பவும் கூட தாமதம் ஒன்றுமில்லை. இதை நீ செய்வாய் என்றால் கற்பனைக்கு எட்டாத விதத்தில் கிறிஸ்துவில் உன்னதமான மகிழ்ச்சியும், சமாதானமும், ஆழமான ஐக்கியமும் கொண்ட வாழ்வை காண்பீர். கிறிஸ்துவினுடைய நீதியின் அழகை பார்க்கவும், உன்னுடைய பாவத்தின் அகோரத்தன்மையை உணரவும், உன்னைப்போல, என்னைப்போல உள்ள பாவிகளுக்காக கிறிஸ்து மரித்தார் என்று விசுவாசிக்க தேவன் தாமே உன் கண்களை திறக்க வேண்டும் என்று ஜெபி.

Grant Castleberry is the Senior Pastor of Capital Community Church in Raleigh,NC. He is a Ph.D. candidate in Historical Theology at Southern Baptist Theological Seminary, Louisville,KY.

No Response to “உண்மை கிறிஸ்தவம் போதிக்கும் 15 கொள்கைகள்- 15 Principles True Christianity Teaches -Grant Castleberry”

Leave a Comment