மூன்று முத்தான முத்துக்கள் – 1

Published October 31, 2018 by adming in Pastor's Blog

 

 

 

 

“தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர் தமக்கு பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார். கர்த்தர் தம்மில் அன்புகூறுகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.” (சங் 145; 18-20)

இம்மூன்று வசனங்களிலிருந்து, நாம் கற்றுகொள்ளும் சத்தியம் மிக அருமையானது. இங்கே, ஒரு விசுவாசியின் மூன்று செயல்களும், அதினால் வரும் பலன்களை நாம் பார்க்கலாம்.

முதலாவதாக, 18 ம் வசனத்தின்படி -ஒவ்வொரு விசுவாசியும் ஜெபிக்கிற மனுஷனாய் இருக்கிறான். ஆம், ஜெபம், அவன் வாழ்வின் மூச்சு, ஜெபம் செய்வதை தவறமாட்டான். ஏனென்றால், அவன், தன் பிதாவோடு, தனிப்பட்ட விதத்தில், அவர் சமூகத்தில், காத்திருப்பதையே வாஞ்சிக்கிறவனாய் இருப்பான். மேலும், அவன், உண்மையாய் ஜெபிக்கிறான். அப்படியென்றால், பாரத்தோடு, ஒப்புகொடுத்த மனதோடு, தன் இருதயத்தை ஊற்றி ஜெபிக்கிறான். அப்படியாக ஜெபிக்கும்போழுது, அவனுடைய ஜெபம் கேட்கப்படுகிறது. “கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” என்பது, அவர் தம் பிள்ளைகளின் ஜெபத்தை கேட்கிறவராய் இருக்கிறார். நமது அருகில் நின்று, தமது பிள்ளைகளின் வேண்டுதலை அக்கைறையோடு கேட்கிறார். நீ ஜெபிக்கிற மனுஷனா?

இரண்டாவது, 19 ம் வசனத்தின்படி, பயப்படுகிற மனுஷனாய் இருக்கிறான். இன்றைக்கு உலகம் தெய்வ பயமில்லாத மக்கள் நிரம்பி உள்ளதை நாம் பார்க்கலாம். மனுஷர்கள் நாளுக்குநாள், பாவத்தை செய்ய துணிகரங் கொள்ளுகிறவர்களாய் உள்ளனர். இன்றைக்கு இன்டர்நெட்(Internet) உலகமாயிருப்பதினால், பாவத்தின் அகோரம் அதிகரித்துக் கொண்டேதான் உள்ளது. இச்சூழ்நிலையில், ஒரு விசுவாசி, தெய்வ பயத்தை கொண்டுள்ளவனாய் இருக்க வேண்டும். நிச்சயமாக, தேவனுக்கு பயப்படுகிற விசுவாசி, மிகப்பெரிய ஆசிர்வாதத்தை பெறுகிறான் “எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்” என்று நீதி 28: 14 ல் பார்க்கலாம். நாம் பார்க்கிற 19 ம் வசனத்திலே, அந்த ஆசிர்வாதத்தையும் பார்க்கலாம். ஆம், தேவன் இவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுகிறவராய் இருக்கிறார். மற்றுமொரு மொழிபெயர்ப்பு சொல்லுகிறது இப்படிப்பட்டவர்களின் தேவையை சந்திக்கிறார். ஆம், எவ்வளவு பெரிதான ஆசிர்வாதம். உலகமோ, உலக மக்களோ, நிறைவேற்ற முடியாததை, நமதாண்டவர் நிறைவேற்றுகிறார். இவ்வாசிர்வாதத்தை சுதந்தரிக்க, நீ தேவனுக்கு பயப்படுகிற மனுஷனாய் இருக்கிறாயா?

மூன்றாவதாக, 20 ம் வசனத்தின்படி, அன்பு கூறுகிறவனாய் இருக்கிறான்.ஆம், விசுவாசி, தன் பிதாவாகிய ஆண்டவரை, அதிகம், அதிகமாய் அனுதினமும் நேசிக்கிற அன்பு கூறுகிற இருதயம் கொண்டவனாய் இருக்கிறான். ஆம், என்றைக்கு அவன் இரட்சிக்கப்பட்டானோ, அந்தநாள் முதல், அவன், உலகத்தை அல்ல, உலக மக்களை அல்ல, தன்னை இரட்சித்த தன்னுடைய ஆண்டவரை முதலாவது வைத்து, அவரை நேசிக்கிறவனாய் இருக்கிறான். சங் 73:25, பின்வருமாறு சொல்லுகிறது. “பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை”. ஆம், இப்படியாக, அவன் தன் தேவனை முழு இருதயத்தோடும், முதன்மையான மனதோடும், அன்பு கூறும்போது, அனுதினமும், அவருடைய கரம், பிரசன்னம், பாதுகாப்பு, அரவணைப்பு, ஆளுகை செய்து அவனை வழிநடத்துகிறதாய் இருக்கிறது. நீ எவ்வாறு அவரிடத்தில் அன்பு கூறுகிறாய்?

No Response to “மூன்று முத்தான முத்துக்கள் – 1”

Leave a Comment