கவலையை பற்றி இயேசுவானவர் சொல்லும் மூன்று காரியங்கள்
கவலையை பற்றி இயேசுவானவர் சொல்லும் மூன்று காரியங்கள்.
இயேசுவானவர், நிலையற்ற, கணிக்க இயலாத இவ்வுலகத்திற்கு வந்தார். விவசாய சமூகத்தினரிடையே வாழ்ந்து வந்தார். அவர்கள் பல்வேறு காலக்கட்டங்களிலே, வறட்சியை சந்தித்து வந்த மக்கள். முக்கியமாக மீனவர்களாய், இரவு முழுவதும் பிரயாசப்பட்டும், ஒன்றும் அகப்படாதபடி, தங்கள் வாழ்வாதாரத்தை மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வந்தனர். மேலும், இயேசுவானவர் ஒவ்வொரு மனிதனுடைய இருதயத்தையையும், அவன் இவ்வுலக கவலையினால் பாதிக்கப்படுகிறதையையும் அறிந்திருந்தார். ஆதலால், இயேசுவானவர், தம்முடைய சீடர்களுக்கு கவலையைக் குறித்ததான உன்னதமான போதனையை மத்தேயு 6ம் அதிகாரத்தில் கொடுத்தார்.
“ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? “ (வச 25).
முதலாவது, இயேசுவானவர் சொல்லுகிறார், தேவன் ஒருவரே நம்முடைய மனித வாழ்வையையும், நம்முடைய சரீரத்தையையும் நமக்கு கொடுத்தார். ஆம், இந்த மனித வாழ்வும், நம்முடைய சரீரமும் மகத்தான விதத்தில் விசேஷமாய் படைக்கப்பட்டதாய் இருக்கிறது. நாம் நம்முடைய மேஜையில் வைக்கும் சாப்பாட்டை விட, நம்முடைய வாழ்வு மிக விலையேறப்பெற்றதாய் இருக்கிறது. நாம் உடுத்தும் ஆடையை விட, நம்முடைய சரீரம் மிக மதிப்புள்ளதாய் இருக்கிறது. ஆக, மிக விலை உயர்ந்த வாழ்வை, கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் பொழுது, அற்பமான உணவை அவர் நமக்கு கொடுக்கமாட்டாரா? நம்முடைய சரீரத்தை, ஆண்டவர் மிகுந்த கவனத்துடனும், அற்புதமான விதத்திலும், உருவாக்கி நமக்கு கொடுத்திருக்கும் பொழுது, அச்சரீரத்தை மறைக்க உடையை கொடுக்கமாட்டாரா? இன்னும் சொல்லபோனால், கடவுள் நித்தியமான வாழ்வை, நமக்கு கொடுத்திருக்கும் பொழுது, இந்த தற்காலிக வாழ்விற்குண்டான, தேவைகளை சந்திக்க மாட்டாரா?
“ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?” (வச 26).
இரண்டாவதாக,தேவன் எவ்வளவு உண்மையாய், வாய் பேசாத பட்சிகளை பராமரிக்கிறார் என்று, இங்கு யேசுவானவர் நமக்கு நினைவுப்படுத்துவதை நாம் பார்க்கலாம். பறவைகள் ஒருபோதும் விதைக்கிறதில்லை, அறுக்கிறதில்லை, களஞ்சியத்தில் சேர்க்கிறதும்மில்லை. நாளைய தினத்தை குறித்து கவலைபடுகிறதுமில்லை. இருந்தும் தேவன் அவைகளையும் போஷிக்கிறார். இங்கு இயேசுவானவர், மனிதப்பிறவி, கடவுளுடைய படைப்பில், மகுடமாய் திகழ்கிறது என்றும், மனுஷனை மட்டுமே, தேவ சாயலாக படைக்கப்பட்டான் என்றும், ஆகவே, ஆகாயத்துப்பறவைகளைக் காட்டிலும், மனிதன் விசேஷமாய் காணப்படுகிறான் என்றும் சொல்லுகிறார். ஆக, அற்பமான ஆகாயத்துப் பட்சிகளை, ஆண்டவர் போஷிக்கும்போது, அவருடைய சாயலில் படைக்கப்பட்ட மனிதனாகிய நம்மை எவ்வளவு நிச்சயமாக போஷிக்கிறவராய் இருக்கிறார். அதைவிட முக்கியமாக, தம்முடைய குமாரனுடைய இரத்தத்தினாலே விலைக்கொடுத்து வாங்கப்பட்ட தம்முடைய பிள்ளைகளை போஷிக்காமல் இருப்பாரா?
“கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? “(வச 27).
மூன்றாவதாக,கவலையானது ஒரு நன்மையையும் செய்யாது. அது ஒருபோதும் பணத்தையையோ, உணவையையோ, ஆடையையோ கொடுக்காது. கவலை வெறும் நமக்கு எதிர்மறையான விளைவுகளை மட்டுமே கொடுக்கிறதாய் இருக்கிறது. கவலையானது, ஆண்டவருடைய வார்த்தைக்கு இடம் கொடுக்காமலும், ஆண்டவரை விட்டு விலகச்செய்கிறதுமாய் இருக்கிறது. ஆக, இது பாவச்செயலாகவும், அவிசுவாசத்தை காட்டுகிறதாயும், விசுவாசத்திற்கு எதிரியாயும் இருக்கிறது. மாத்திரமல்ல, இது நமக்கு பயத்தையையும், பீதியையும் உண்டாக்குகிறதாய் இருக்கிறது. நாம் நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும், அதாவது, நம் மனதில் தோன்றுகிறதெல்லாம், கையில் எடுத்துக்கிட்டு,நடந்துக்கொண்டு இருக்கிற ஒரு காரியத்தையையும் தடுத்து நிறுத்த முடியாது. மாத்திரமல்ல, நாம் கவலையும், கண்ணீரோடு உட்கார்ந்து கொண்டிருக்கிறதினால், ஒரு காரியத்தையையும் சாதிக்கவும் முடியாது.
ஆக, கடைசியாக, இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்:
எதைக்குறித்தும் கவலைப்படாதிருங்கள், உங்களுக்காக அக்கறைகொள்ளுகிற, சர்வத்தையும் ஆளுகை செய்கிற உங்கள் பரம பிதாவினடத்தில் நம்பிக்கையாயிருங்கள்.
No Response to “கவலையை பற்றி இயேசுவானவர் சொல்லும் மூன்று காரியங்கள்”