ஆண்டவரே, என்னை தாழ்மையுள்ளவனாக உருவாக்கும், வைத்துக்கொள்ளும். – சி.எச்.ஸ்பர்ஜன். Lord, make and keep me humble! – C.H.Spurgeon.

Published October 16, 2020 by adming in Pastor's Blog

Lord, make and keep me humble!

C.H.Spurgeon.

ஆண்டவரே, என்னை தாழ்மையுள்ளவனாக உருவாக்கும், வைத்துக்கொள்ளும்.

“இதோ, நான் நீசன்!” யோபு 40:4

இதோ, நான் நீசன்!”யோபு 40: 4

வானத்தை நோக்கி செல்லும் ஒரு கோபுரமாக இருக்கட்டும், அல்லது சிகரமாக இருக்கட்டும். அது மேலே போக போக குறுகிப்போகும். அதேபோல், நாம் எவ்வளவு பரிசுத்தமானவர்களாக இருக்கிறோமோ – அவ்வளவுக்களவு நம்மை குறித்து  நாம் குறைத்து மதிப்பிடுவோம்.

நம்முடைய சுயத்தின் சிறந்த எண்ணங்களும், மகத்துவமுள்ள கிருபையும்-ஒருபோதும் ஒன்றாகச் செல்லாது.

எங்கு பெரிய சுய மதிப்புக்குரிய உணர்வு இருக்கிறதோ  –  கிருபையின் மகத்துவம் அங்கு இல்லை என்பதற்கான உறுதியான அறிகுறியாகும்.

தன்னை மிகைப்படுத்திக் கொண்டவன் தன் இரட்சகரை குறைத்து மதிப்பிடுகிறான்.

பக்தியில் நிறைந்தவர் – மனத்தாழ்மையால் நிரப்பப்படுவது உறுதி.

ஆம், தேவனுடைய மக்களில் மிகச் சிறந்தவர்கள் தங்களையே வெறுக்கிறார்கள்.

வைக்கோல் மற்றும் இறகுகள் போன்ற லேசான விஷயங்கள் மேலே உயரச் செல்கின்றன. விலைமதிப்புள்ள பொருட்கள், அவற்றிக்குண்டான இடங்களிலே வைக்கப்பட்டுள்ளன. அவைகள் சங்கிலிகளினால் கட்டப்பட்டதினாலோ அல்லது ஆணிகளினால் அடிக்கப்பட்டதினால் அல்ல, அவற்றின் சொந்த எடையின் காரணமாகவே, அவைகள் இருக்கிற இடத்திலே தங்கியிருக்கின்றன.

பாரத்தை சுமக்கும் கப்பல்கள் கீழே மூழ்கியும், ​​ஒன்றுமில்லாத காலியான கப்பல்கள் மேலே மிதக்கிறதுபோல, கர்த்தருடைய பிரசன்னத்தில் நாம் எவ்வளவுக்கதிகம் மூழ்கிறோமோ, அவ்வளவுக்களவு நம்முடைய சொந்த மதிப்பை குறித்து கீழாக மூழ்குவோம்.

ஆண்டவரே, என்னை தாழ்மையுள்ளவனாக உருவாக்கும், வைத்துக்கொள்ளும்! என்னை பரலோகத்திற்கு மிக அருகாமையிலும், நெருக்கமாகவும் கொண்டு வாரும்.   பின்னர் நான் என் சொந்த மதிப்பை குறித்து குறைவாகவும் குறைவாகவும் வளருவேன்.

“ஆகையால் நான் என்னை அருவருத்து,…” யோபு 42: 6

“அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன்…” ஏசாயா 6: 5

“ஆண்டவரே, நான் பாவியான மனுஷன்!” லூக்கா 5: 8

“நிர்பந்தமான மனுஷன் நான்!” ரோமர் 7:24

No Response to “ஆண்டவரே, என்னை தாழ்மையுள்ளவனாக உருவாக்கும், வைத்துக்கொள்ளும். – சி.எச்.ஸ்பர்ஜன். Lord, make and keep me humble! – C.H.Spurgeon.”

Leave a Comment