Ten Commandments- பத்து கட்டளைகள் – சபை விசுவாசிகளுக்கு மட்டும்.

Published March 29, 2019 by adming in Pastor's Blog

                                                    பத்துக்கட்டளைகள்

       சபை விசுவாசி – தனது போதகரைப் பார்க்கும் பத்துக்கட்டளைகள்

                                                            —  போதகர்.ஜோயல் பீகி ( Dr.Joel R. Beeke)

    1. உன் போதகரை கடவுளைப்போல பாவிக்காதே. கடவுள் மட்டுமே செய்ய முடிகிறதை உன் போதகர் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்காதே. அவரே இரட்சகராக எண்ணாதே.
    1. உன் போதகர், சத்தியத்தை விட்டு விலகினாலொழிய, மற்றபடி அவரை குறை கூறாதே . அப்படி விலகும்போது, கண்ணீரோடே செயல்படு, தயவு செய்து அவரிடத்தில் பரிபூரணத்தை எதிர்பார்க்காதே. அவரும், உன்னைப் போல, சாதாரணமான, பெலவீனமுள்ள, பாவமுள்ள மனுஷன், அவருடைய பணி தெய்வீகமானது. ஆனாலும் அவரும் ஒரு மனுஷனே. அவரும், மண்பாண்டத்தில்  இருக்கிற ஒரு பொக்கிஷமே நீ இதை நினைவில் கொள்ளவில்லையென்றால், இன்றைக்கு அவரை போற்றுவாய், நாளைக்கு அவரை தூற்றுவாய்.
    2. உன் போதகரை தவிர்க்காதே, அவரிடம் போ, உன் ஆத்துமாவை திறந்து உன் தேவைகளை அவரிடம் சொல். உன்னுடைய ஆவிக்குரிய பிரச்சனைகள் மற்றும் கேள்விகளுடன் அவரிடம் செல்வது உன்னுடைய கடமை,உரிமையாகும். அப்படி செய்வது, உன் போதகருக்கு பெரிய சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும்.
    1.  உன் போதகருக்காக ஜெபம்பண்ணு. அவருடைய ஆத்துமா தாழ்மையையும் பரிசுத்தமாயும் இருக்கும்படியாக ஜெபம் பண்ணு. அவருடைய சரீரம், அநேக வருஷங்கள் உயிரோடிருந்து இவ்வூழியத்திற்காக பயன்படுத்தப்படவும், பெலப்படும்படியாகவும், ஜெபம்பண்ணு. எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் இருக்கும்படியாக ஜெபம்பண்ணு. அவர் செய்கிற ஊழியத்திற்காக, அவருடைய மனைவிக்காக,   அவருடைய குடும்பத்திற்காக, அவருடைய பிரசங்க ஆயத்தபணிக்காக அப்பிரசங்கத்தை தேவ ஆவியானவருடைய ஒத்தாசையோடு பிரசங்கிப்பதற்காக, அவர் கொடுக்கும் ஆலோசனைக்காக ஜெபம்பண்ணு. அவர் உனக்கு அதிகம் பிரயோஜனமாகும்படி அவற்றுக்காக அதிகம் ஜெபி.
    1. நன்கு கேட்கிற மனதுடையவனாய் இரு. உன் போதகர் பிரசங்கிக்கிற பிரசங்கத்தை கேட்டு அதன்படி செய்து உன் போதகர்களுக்கு கீழ்ப்படி. அவர் வேதத்திலிருந்து பிரசங்கிக்கும்பொழுது, அதை உனக்கு கொடுக்கப்படுகிற தேவ வார்த்தையாக எடுத்துக்கொள். அவர் உனக்கு கொடுக்கபட்டிருக்கிற “கிறிஸ்துவின் ஈவு” என்று நினைவுகூற மறவாதே.
    1.  உன்னுடைய போதகரோடு அக்கரையுள்ளவனாய் இரு. அவரிடத்தில் உரையாடும்போது உன்னுடைய பேச்செல்லாம் உன்னைபற்றியே அமைந்திருக்கும்படி செயல்படாதே. அவருடன் அன்பாய் நடந்துக்கொள். அவரும் சாதாரண மனிதராய் இருப்பதினால், உன் போதகர், அவருடைய வாழ்க்கை, அவருடைய குடும்ப வாழ்க்கையை குறித்து உற்சாகத்தை காண்பி.
    1. உன்னுடைய போதகருடைய பலவீனத்தை குறித்து குறைவுபடுத்தி கூறாமல், அவருடைய பலத்தைகுறித்து அதிகமாக பாராட்டு, உற்சாகபடுத்து. உன்னுடைய போதகரை மற்ற போதகரோடு ஒப்பிட்டு பேசாதே. அதேசமயத்தில், ஒவ்வொரு போதகரிடத்தில் காணப்படும் விசேஷமான வரங்களை குறித்து பாராட்ட பழகிக்கொள்.
    1. உன்னுடைய போதகருக்குமேலாக, உன்னுடைய  போதகர் காண்பிக்கும் ஆண்டவரை நோக்கிப்பார்.
  1. உன்னுடைய சபையோடும், உன்னுடைய போதகரோடும் இணைந்து, உழைக்கிறவனாய் இரு. சுயத்தை மறக்கிறவனாயும், கிறிஸ்துவை உயர்த்துகிறவனாயும், செயல்படு. தாழ்மையும், ஞானத்தையும், சமாதானத்தையும், ஒருமனப்பாட்டையும், அதற்கும் மேலாக அன்பையும் தரித்துகொள்.
  2. உன்னுடைய போதகரின் ஊழியம் நித்தியத்திற்கு அடுத்தது. நியாயத்தீர்ப்பின் நாளிலே, உன் போதகர், உன் ஆத்துமாவைக் குறித்து தேவனிடத்தில் நல்ல கணக்கு ஒப்புவிக்க ஜெபி. நியாயத்தீர்ப்பின் நாளிலே, உன் போதகரின் பெலத்தையும், பெலவீனத்தையும் குறித்து, நீ கணக்கு ஒப்புவிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நினைவுக் கொள். நீ இரட்சிப் படையவில்லையென்றால், அவர் மூலம் கர்த்தர் உனக்கு தேவனுடைய வார்த்தையை கொடுக்கிறார் என்பதை விலைமதித்து தாழ்மையாய் நட.

போதகர் . ஜோயல் பீக். (Dr. Joel R. Beeke is president of Puritan Reformed Theological Seminary and pastor of Heritage Netherlands Reformed Congregation in Grand Rapids).       

No Response to “Ten Commandments- பத்து கட்டளைகள் – சபை விசுவாசிகளுக்கு மட்டும்.”

Leave a Comment