Post Tagged as ‘Pastor’s Blog’

நமது பாவத்தை அறிக்கையிடுதல்.

ரொபர்ட் மொர்ரே மெக் செய்னி (1813-1843) Confessing Our Sins Robert Murray McCheyne (1813-1843) மனசாட்சியைக் குற்ற உணர்வில்லாமல் காத்துக் கொள்வதற்காக நான்  இன்னுமதிகமாக என்னுடைய பாவங்களை அறிக்கையிடவேண்டும் என்று உணர்கிறேன். நான் மற்றவர்களோடு இருந்தாலும், படிப்பில் இருந்தாலும், அல்லது பிரசங்கித்துக் கொண்டிருந்தாலும், பாவத்தை கண்ட அதே கணத்தில் அதை அறிக்கையிட வேண்டுமென்று நினைக்கிறேன். ஆத்துமா, பாவத்தை அருவருக்க வேண்டும். நான் பாவத்தை அறிக்கையிடாமல் தொடர்ந்து என் கடமையைச் செய்வேனானால், நான் பாரமுள்ள மனச்சாட்சியோடு செல்கிறேன், தொடர்ந்து பாவத்தோடு பாவத்தைக் கூட்டிக் கொள்கிறேன். ஒரு சில குறிப்பிட்ட வேளைகளில் முந்தைய மணி நேரங்களில் என்னுடைய பாவங்களை உண்மையாக அறிக்கையிட்டு, அவைகளை முழுமையாக விட்டுவிடுவதை நாட வேண்டுமென்று நினைக்கிறேன்.      என்னுடைய பாவத்தின் தீய தன்மையைக் காண நான் அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும். என்னை நான் ஆதாமின் குற்றந்தீர்க்கப்பட்ட கிளையாக, கர்ப்பத்திலிருந்தே தேவனுக்கு விரோதமான இயல்பில் பங்குகொண்டவனாக, முற்றிலும் தீமையினால் […]

Read More

Six Purposes of The Lord’s Day – Dr.Peter Masters.

                               Six Purposes of The Lord’s Day            Here are six purposes for which the Lord’s Day has been established for as long as time endures, all of which are derived both from the commandment of Sinai and the example of the Lord’s Day observance in the New Testament. 1. Firstly, this commandment provides a regular season for gratitude and worship, when God’s people pay their spiritual vows to their God and King, directing to Him their appreciation and adoration. 2. Secondly, this commandment calls believers to consider and study the Lord, reflecting upon, inquiring into and learning more about […]

Read More

மூன்று முத்தான முத்துக்கள் – 6.

நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான். (நீதி 21:21). இங்கு நாம் ஒரு மனிதனை பார்க்கலாம். அவன் யார்? அவன் பெயர் என்ன? ஆம், அவன் பெயர் “பின்பற்றுகிறவன்” ஆம், மூல பாஷையில், ஒரே நோக்கத்தோடு, உறுதியான மனதோடு பின்தொடருகிறவன் என்று சொல்லுகிறது. யாரை பின்பற்றுகிறான்? ஆம், நீதியையும், தயையும் பின்பற்றுகிறான். அதாவது, நீதியையும், இரக்கத்தையும் கொண்ட கடவுளை பின்பற்றுகிறான். ஆம், அவர் நீதியுள்ள தேவன். “கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்” (சங் 11:7).  கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள். (சங் 119:137).  அவர் மகா நீதிபரர்(யோபு 37:23).  இது மாத்திரமல்ல, அவர் இரக்கமுள்ள தேவன். “அவருடைய இரக்கங்கள் மகா பெரியது.” (1 நாளா 21:13).   “நீர் கிருபையும் இரக்கமுள்ள தேவன்.” (நெகே 9:31) “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய்…” (எபே 2:4).  இப்படிப்பட்ட, நீதியும், இரக்கமுள்ள தேவனை பின்தொடருகிறவனாய் இருக்கிறான். எப்படியாக பின்தொடருகிறான்? “பின்பற்றுகிறவன்” தன்னை […]

Read More

சபைக்கும் நமக்கும் மிகப்பெரிய தேவையான ஒன்று

                           சபைக்கும் நமக்கும் மிகப்பெரிய தேவையான ஒன்று      இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பரிசுத்தத்தின் அவசியத்தை குறித்ததான                          பத்து அம்சங்கள்:                     –  போதகர்.ஜோயல் பீக்( Dr.Joel R. Beeke)                  1)   தேவன் உன்னை பரிசுத்ததிற்கென்று அழைத்திருக்கிறார்.   “தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல,     பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். (1 தெச 4:7). கர்த்தர் நம்மை எதற்கு அழைத்திருந்தாலும், அது அவசியமான ஒன்றாய் இருக்கிறது. ஏனென்றால், அவருடைய அழைப்பே, பரிசுத்தத்தை பயிற்சி செய்யவும், அதை நாடவும் நம்மை தூண்டச் செய்கிறதாய் இருக்கிறது.     2) பரிசுத்தமானது, […]

Read More

மூன்று முத்தான முத்துக்கள் -5

மூன்று முத்தான முத்துக்கள் – 5    “கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு.” (சங்கீதம் 37:3,5,7).    இன்றைக்கு உலகம் பல்வேறு வகையில் தாறுமாறாக  போய்கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம். ஆம், பல்வேறு பேரழிவுகளையும், தீவிரவாத கும்பலினால் ஒரு நாட்டையே உலுக்கும் வண்ணமாக, வெடி வைத்து தகர்ப்பதும், அதினால் அநேகர் மாண்டுப்போவதும், ஒரு பக்கம், பாவத்தின் ஆதிக்கத்தினால், உலகம் இன்னுமாய் சீரழிவுகளை சந்தித்துக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். மேலும், பொல்லாதவர்கள், அநீதிக்காரர்கள், நியாயக்கேடு செய்கிறவர்கள் நிறைந்த இவ்வுலகத்தில், ஒரு கிறிஸ்தவன் சமாதானத்துடன், பயமில்லாமல் சந்தோஷமாய் கடந்து போக, அவன் அறிந்துக்கொள்ள வேண்டியது இந்த மூன்று முத்தான முத்துக்கள். அது என்னவென்று சங்கீதம் 37: 3,5,7 வசனங்களில் நாம் பார்க்கலாம்.     முதலாவது (வச. 3) – TRUST கர்த்தரை நம்பு, Trust […]

Read More

Ten Commandments- பத்து கட்டளைகள் – சபை விசுவாசிகளுக்கு மட்டும்.

                                                    பத்துக்கட்டளைகள்        சபை விசுவாசி – தனது போதகரைப் பார்க்கும் பத்துக்கட்டளைகள்                                                             —  போதகர்.ஜோயல் பீகி ( Dr.Joel R. Beeke) உன் போதகரை கடவுளைப்போல பாவிக்காதே. கடவுள் மட்டுமே செய்ய முடிகிறதை உன் போதகர் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்காதே. அவரே இரட்சகராக எண்ணாதே. உன் போதகர், சத்தியத்தை விட்டு விலகினாலொழிய, மற்றபடி அவரை குறை கூறாதே . அப்படி […]

Read More

மூன்று முத்தான முத்துக்கள் – 4

  “அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப் பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர். சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.”  (சங் 4:7,8) சங்கீதம் 4: 7,8ம் வசனங்களில், ஒரு இரட்சிக்கப்பட்ட, கிறிஸ்தவனுடைய வாழ்வில் காணப்படும் மூன்று முத்தான முத்துக்களை நாம் பார்க்கிறோம். ஆம், இங்கு, தாவீது, தான் இரட்சிக்கப்பட்ட வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து பேசுகிறார். இன்றைக்கு நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லுவாயானால், தாவீது கொண்டிருக்கிற மூன்று முத்தான முத்துக்களை கொண்டிருப்பது மிக அவசியம். முதலாவது – சந்தோஷம் வச 7 “அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப் பார்க்கிலும்,…… இங்கு தாவீது ‘அவர்கள்’ என்று யாரை ஒப்பிட்டு பேசுகிறார். துன்மார்க்கமான மக்கள், இரட்சிக்கப்படாத மக்கள். ஆம், இவர்களுடைய வாழ்விலும் சந்தோஷம் இருக்கிறது. எப்பொழுது? “தானியமும், திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷம்.” இரட்சிக்கப்படாத மனுஷனுடைய வாழ்வில், ஒருவேளை, பணம் நிறைய வைத்திருக்கலாம், […]

Read More

The Piety of David Brainerd, டேவிட் ப்ரைனார்டு அவர்களின் தெய்வ பக்தி.

                                                          ஒரு ஆத்துமா-புத்துணர்ச்சி அடைந்த வாழ்வு:                                         டேவிட் ப்ரைனார்டு அவர்களின் தெய்வபக்தி                                                                                       […]

Read More

மூன்று முத்தான முத்துக்கள் – 3

                மூன்று முத்தான முத்துக்கள் – 3   நாம்  31 ம் சங்கீதத்தில் மூன்று முக்கியமான அம்சங்களை பார்க்க இருக்கிறோம். இதுவே, நம் ஆவிக்குரிய வாழ்வில் காணப்படவேண்டிய மூன்று முத்தான முத்துக்களாக உள்ளன. முதலாவதாக, பயப்படுகிற இருதயம் (வச.19.) “உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது! இவ்வசனத்தில் முக்கியமாக “மிகுந்த நன்மைகளை குவித்து அல்லது சேகரித்து வைத்திருக்கிறார்” என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறது. ஆம், அளவில்லா நன்மைகள், எண்ணற்ற நன்மைகள் சேகரித்து/ குவித்து  வைத்திருக்கிறார். இத்தனையும் யாருக்கு? ஆம், தெய்வ பயத்தைகொண்டிருக்கிற தன்னுடைய பிள்ளைகளுக்கு. ஆம், பின்வரும் வசனங்களை நாம் பார்க்கும்போது வேதம் எவ்வளவு உண்மையுள்ளதாய் இருக்கிறது. தேவனுக்கு பயப்படுகிறவன் 1). தேவனுடைய வழியை கற்றுக்கொள்ளுகிறான் – சங் 25:12, 2). தேவனுடைய இரகசியத்தை கற்றுக்கொள்ளுகிறான் – சங் 25:14. […]

Read More

மூன்று முத்தான முத்துக்கள் – 2

  மூன்று முத்தான முத்துக்கள் – 2 நமது ஆண்டவர் நம்மை படைத்ததின் நோக்கம் அவரை மகிமைப்படுத்துவதே ஆகும். இதைத்தான், அப். பவுலும் தெசலோனிக்கே சபைக்கு வலியுறுத்துவதைப் பார்க்கலாம். 2தெசலோனிக்கேயர்1:11,12ல் முக்கியமாக, அப்.பவுல் இச்சபைக்காக எப்பொழுதும் ஜெபிக்கிற மனுஷனாக இருப்பதை நாம் பார்க்கலாம். அதுவும் இச்சபையார் எப்பொழுதும் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, வாஞ்சையோடு ஜெபிப்பதை நாம் பார்க்கலாம். மேலும் தேவனுடைய நாமம் மகிமைப்பட வேண்டுமெனில், மூன்று முத்தான காரியத்தில் சபையார் எழும்ப வேண்டும் என்று சொல்லி  அதற்காக ஜெபிக்கிறார். இன்றைக்கு  நீ, உன்னுடைய வாழ்வில், தேவனுடைய நாமம் மகிமைப்பட வேண்டும் என்று நோக்கம், கொண்டிருக்கிறாயா ? அப்படியென்றால் இங்கு பவுல் சொல்லும் மூன்று முக்கியமான காரியத்தில் கவனம் செலுத்து, அதற்காக அனுதினமும் ஜெபி. அப்பொழுது நீ தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவாய். அழைப்புக்கு உரியவராகுதல்: முதலாவதாக, தேவன் நம்மை அழைத்த  அழைப்பை சிந்தித்துப் பார்த்து, அதற்கு பாத்திரராக அதாவது […]

Read More