This incomparable book! – Thomas Brooks. (1608-1680) இதுவே ஒப்பிடப்படமுடியாத புத்தகம்! – தொமஸ் ப்ரூக்ஸ். (1608-1680)
முழு வேதாகமம் ஒன்றே. அதுவே தன்னுடைய பிரியமான மணவாட்டிக்கு கொடுக்கப்பட்ட கிறிஸ்து இயேசுவின் அன்பு மடல்.
ஓ! விலையேறப்பெற்ற, மகத்துவமான, மகா உன்னதமான அனைத்தும் இந்த ஒப்பிடப்பட முடியாத புத்தகத்தில் உள்ளது. இந்த புத்தகத்தை போல, வேறு எந்த புத்தகமும், உன்னை சந்தோஷமுள்ளவனாக்கி, நித்தமும், உன்னை சந்தோஷப்படுத்தும் உபயோகரமான, தேவையான, மகிழ்ச்சியான, அவசியமான புத்தகம் வேறு எதுவும் இல்லை.
ஆ, கர்த்தருடைய வார்த்தை, உன்னை நடத்துவதற்கு, வெளிச்சமாயும், உனக்கு புத்தி சொல்ல ஆலோசகராகவும், உன்னை ஆறுதல்படுத்த, ஆறுதல் அளிக்கிறவராயும், உன்னை தாங்குவதற்கு ஊன்றுகோளாயும், உன்னை பாதுகாக்க, பட்டயமாயும், உன்னை குணப்படுத்த, மருத்துவராயும் இருக்கிறது.
வேத புத்தகமானது, உன்னை வளப்படுத்த சுரங்கமாயும், உன்னை அணிவிக்க ஆடையாயும், உன்னை முடிசூட்ட ஒரு கிரீடமாயும், உன்னை பலப்படுத்த உனக்கு வேண்டிய ஆகாரமாயும், உன்னை உற்சாகப்படுத்த திராட்சை ரசமாயும், உனக்கு விருந்தாக அமைய, ஒரு தேன்கூடாயும், உன்னை மகிழ்விக்க ஒரு இசையாயும், உன்னை சந்தோஷப்படுத்த, அது உனக்கு பரலோகமாயும் இருக்கிறது.
ஆகையால், எல்லாவற்றை காட்டிலும், வேதத்தை ஆராய்ந்து பார், வேதத்தை படி, வேதத்தை தியானம் பண்ணு, வேதத்தில் சந்தோஷப்படு, வேதத்தை போக்கிஷமாகிக்கொள்.
ஆக, வேத ஞானத்தைப்போன்ற ஞானம் வேறு எதுவும் இல்லை, வேத அறிவு போன்ற அறிவு வேறு எதுவும் இல்லை, வேத அனுபவத்தை போன்ற அனுபவம் வேறு எதுவும் இல்லை, வேத வசனத்தின் ஆறுதல் போன்று வேறு எதுவும் இல்லை, வேதத்தில் உள்ள மகிழ்ச்சியை போன்று வேறு எதுவும் இல்லை, வேதம் உணர்த்திக்காட்டுவது போன்று வேறு எதுவும் இல்லை, வேதபூர்வமான மனமாற்றத்தை காட்டிலும் வேறு எதுவும் இல்லை.
நான் உனக்கு அறிவுறுத்துவது என்னவென்றால், தீவிரமாகவும், மிக கவனத்துடனும், விழிப்பாயும், வேதத்தை எடுத்து படி. ஆ! உனக்கு தெரியாது, வேதத்தை ஆராய்ந்து, வேதத்தை வாசித்து, மற்றும் வேதத்தை சிந்திப்பதின் மூலம் எவ்வளவு சீக்கிரம், உன்னுடைய குருட்டு மனம் தெளிவடையலாம். உன்னுடைய கடினமான இருதயம் மென்மையாக்கப்படலாம், உங்கள் பெருமை கொண்ட இருதயம், தாழ்த்தப்படலாம், உன்னுடைய பாவமுள்ள சுபாவங்கள் மாற்றப்படலாம், உன்னுடைய துர்மனசாட்சி சுத்திகரிக்கப்படலாம், உன்னுடைய கோபதாபங்கள் சீராக்கப்படலாம், உன்னுடைய பாவ ஆத்துமா இரட்சிக்கப்படலாம்.
ஆ, நீ ஆர்வத்துடன், உன்னை நீயே வேதத்திற்கு ஒப்புக்கொடுத்து, அதை படிப்பதிலும், ஆராய்ச்சி செய்வதிலும், சிந்திப்பதிலும், விசுவாசிப்பதிலும், கைகொள்வதிலும், அதற்கென்றே வாழும்படியான வாழ்க்கை வாழவில்லை என்றால், பிசாசின் ஆதிக்கம் அதிகமாகும், உலகத்தின் ஆதிக்கம் அதிகமாகும், பாவ இச்சைகளின் ஆதிக்கம் அதிகமாகும், சோதனைகளின் தாக்கங்கள் அதிகமாகும், வஞ்சகர்களின் பாதிப்பு அதிகமாகும், முடிவில், உன்னுடைய வாழ்க்கையே பரிதாபமாக காணப்படும்.
No Response to “This incomparable book! – Thomas Brooks. (1608-1680) இதுவே ஒப்பிடப்படமுடியாத புத்தகம்! – தொமஸ் ப்ரூக்ஸ். (1608-1680)”