வேதபூர்வமான பரிசுத்தம் – ஜே.சி.ரைல். Biblical Holiness. – J.C.Ryle.
‘பரிசுத்தமில்லாமல், ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லை!’ (எபி 12:14)
நாம் பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்கிறோமா? நாம் கர்த்தரை தரிசிப்போமா?
இந்த அவசரமான, பரபரப்பான உலகில் – சில நிமிடங்கள் அமைதியாக, பரிசுத்தத்ததை குறித்து சற்று சிந்தித்துப்பார்ப்போம். “பரிசுத்தமில்லாமல், ஒருவனும் கர்த்தரைக் காணமாட்டான்!”
ஒரு மனிதன் மதம், பக்தி என்ற விஷயத்தில் மிகுந்த வைராக்கியமாக இருக்கலாம் – இருந்தாலும், அவன் உண்மையான பரிசுத்தத்தை அடைய முடியாது.
உண்மையான நடைமுறைக்கேதுவான பரிசுத்தம் எது?
அது அறிவு சார்ந்தது அல்ல – பிலேயாம் அதை பெற்றிருந்தான்.
அது பெரிய பதவியை கொண்டது அல்ல – யூதாஸ் காரியோத்து அதை பெற்றிருந்தான்.
அது, பெரிய, பல காரியங்களை செய்கிறது அல்ல – ஏரோது அதை கொண்டிருந்தான்.
அது, வெறும் பக்தியில் கொண்டிருக்கிற வைராக்கியம் அல்ல – யெகூ அதை கொண்டிருந்தான்.
அது, வெறும் வெளிப்புற நடத்தை மற்றும் ஒழுக்கத்தை குறித்து அல்ல – பணக்கார வாலிபன் அதை கொண்டிருந்தான்.
அது, வெறும் பிரசங்கத்தை கேட்கும் சந்தோஷத்தை கொண்டிருப்பது அல்ல – அது எசேக்கியல் காலத்தில், யூதர்கள் கொண்டிருந்தனர்.
அது தேவ பிள்ளைகளோடு கூடிய ஐக்கியம் அல்ல – யோவாப், கேயாசி, தேமா அதை கொண்டிருந்தனர்.
இருந்தும், மேலே சொல்லப்பட்ட அனைவரும் பரிசுத்தவான்கள் இல்லை. இவைகள் மட்டும், பரிசுத்தம் அல்ல. ஒரு மனிதன், இவைகளில் எதாவது ஒன்று கொண்டிருந்தாலும், – இவர்கள் ஒருபோதும் தேவனை தரிசிப்பதில்லை.
வேத பூர்வமான பரிசுத்தம் என்ன என்பதை இப்பொழுது உங்களுக்கு சொல்லுகிறேன்.
- பரிசுத்தம் என்பது, வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ள, அவருடைய மனதை அறிந்து, தேவனோடு ஒரே மனதை கொண்டது.
- ஒரு பரிசுத்தவான், தனக்கு தெரிந்த அத்தனை பாவத்தையும் தடுத்து, தெரிந்த அத்தனை கட்டளைக்கு கீழ்படிவான்.
- ஒரு பரிசுத்தவான், நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து போல வாழ முயற்சி செய்வான்.
- ஒரு பரிசுத்தவான், சாந்தம், பொறுமை, கனிவு, தயவு, மற்றும் நாவை அடக்கி ஆளுதலில் பின் தொடருவான்.
- ஒரு பரிசுத்தவான், சுயத்தை வெறுத்தல், மற்றும் நிதானத்தை கடைபிடிப்பான்.
- ஒரு பரிசுத்தவான், சகோதர சிநேகம், மற்றும் அன்பை கடைபிடிப்பான்.
- ஒரு பரிசுத்தவான், பிறர் மீது, இரக்க குணத்தையும், இரக்கத்தின் ஆவியையும் கொண்டிருப்பான்.
- ஒரு பரிசுத்தவான், பரிசுத்த இருதயத்தின் பின் செல்லுவான்.
- ஒரு பரிசுத்தவான், தேவ பயத்தை கொண்டவனாய் வாழுவான்.
- ஒரு பரிசுத்தவான், தாழ்மையை கொண்டவனாய் வாழுவான்.
- ஒரு பரிசுத்தவான், தன் வாழ்வின் அனைத்து பகுதலிலும், கடமைகளிலும், உண்மைத்தன்மையை கடைபிடிப்பான்.
- கடைசியாக, ஆனால், முக்கியமாக, ஒரு பரிசுத்தவான், ஆவிக்குரிய சிந்தையை கொண்டிருப்பான்.
No Response to “வேதபூர்வமான பரிசுத்தம் – ஜே.சி.ரைல். Biblical Holiness. – J.C.Ryle.”