Why does God allow sin to remain in His people? – Thomas Boston (1676-1732).ஏன் தேவன் தம்முடைய பிள்ளைகளிடத்தில் பாவம் இருக்கும்படியாக அனுமதிக்கிறார்? – தொமஸ் பாஸ்டன் (1676-1732).
நான் ஏன் அதே பாவ சிந்தனைகளோடு போராட வேண்டியிருக்கிறது?
பெருமை, மற்றும் பாவ இச்சைகளை வெற்றி கொள்ள ஏன் என்னால் முடியவில்லை?
ஏன் தேவன் தம்முடைய பிள்ளைகளிடத்தில் எஞ்சிய பாவம் தங்க அனுமதிக்கிறார்?
இவ்விதமான கேள்விகள், கிறிஸ்தவர்கள் அவ்வப்பொழுது கேட்பது உண்டு. ஓ! இவ்விதமான பாவ எண்ணங்கள், வார்த்தைகள், மற்றும் செய்கைகளோடு போராட்டம் இல்லையென்றால், எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நாம் நினைப்பது உண்டு. ஆனால், தேவன், தம்முடைய இறையாண்மையின் கீழாக, அவர், ஒரு நோக்கத்தோடு, தம்முடைய பிள்ளைகளிடத்தில், எஞ்சிய பாவம் தங்க அனுமதிக்கிறார்.
1. தேவன், விசுவாசிகளின் பரிசுத்தமாகுதலை ஏற்படுத்தியிருக்கிறார். அதாவது, அவர்கள் எப்பொழுதும் தங்களை தாழ்மைக்குள்ளாக, வைத்துக்கொள்வதற்கு, இவ்வுலகத்தில் இருக்கும்பொழுது, அவர்களுக்குள், பாவமானது, எந்நேரமும், செயலில் இருக்கும்படியாக, விட்டுவிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கர்த்தர், பவுலுடைய வாழ்வில், தாழ்மைக்குள்ளாக இருக்கும்படியாக, அவனுடைய மாம்சத்தில் ஒரு முள்ளை கொடுத்தார். நாம், தாவீதை குறித்து அறிந்துகொள்ளும் பொழுது, அவன், தன்னுடைய, கொடிய வீழ்ச்சிக்குப்பிறகு, தாழ்மையின் கிருபைக்குள்ளாக, வளரும்படியாக காணப்பட்டான்.
2. தேவன், தம்முடைய பிள்ளைகளின் வாழ்வில், பாவத்தின் எச்சமானது, இருப்பதற்கு அடுத்த காரணம், தொடர்ச்சியாக, அவர்கள் ஜெபத்தில் எழும்பப்படுவதற்கே ஆகும். ஒரு ஆத்துமா, எப்பொழுதும், அவருடைய மன்னிப்பை பெற்றுக்கொள்ளும், உணர்வை வைத்திருக்க ஆசைப்படுவதினால், அவ்வாத்துமா, அதிகமாக, அவருடைய பாதத்தன்டையில், தங்கியிருக்கும். தம்முடைய பிள்ளைகள் தங்கள் கடமையை நிராகரிக்கும் போது, கர்த்தர் சில சமயங்களில் அவர்களை எழுப்புவதற்கும், அவர்களின் மனசாட்சியைக் காயப்படுத்துவதற்கும், நம்மில் தங்கியிருக்கும் எஞ்சிய பாவத்தின் ஆதிக்கத்தின் பாதிப்பை அனுமதிக்கிறார், அதனால் அவர்கள் நெருப்பில் விழுந்த குழந்தையைப் போல அவரிடம் கதறுகிறார்கள், ஜெபிக்கிறார்கள்.
3. நம்மில் எஞ்சியிருக்கும் பாவம், இன்னும் அலைந்து திரியக்கூடிய நம் இருதயத்தை, காத்துக்கொள்ள, மேலும் அதிகமாக, நம்மை விழிப்புள்ளவர்களாக வைக்கிறது. ஒரு கைதி தப்பியோடும்போது, காவல்துறையினர், அவரைப் பிடித்து, முன்பை விட மிகவும் நெருக்கமான காவலில் வைப்பார்கள். பல கண்ணிகளால் நிரம்பிய உலகில் நாம் நடக்கிறோம்; நாம் விழிப்புடன் இல்லாவிட்டால், நாம் அவைகளினால் சிக்கப்பட்டுவிடுவோம்.
4. கர்த்தர், சில கானானியர்களை தம் மக்களைச் சோதிப்பதற்காக தேசத்தில் இருக்க அனுமதித்தது போல, அவர்களின் ஆவிக்குரிய வாழ்வில், சோதனையை ஊடாய் கடந்து செல்ல, அவர்களில், இயற்கையான பாவத்தின் எச்சங்களை அவர் விட்டுச் சென்றுள்ளார். நம்மில் தங்கியிருக்கும் எஞ்சிய பாவம், கிறிஸ்துவின் பலத்தில் நாம் சார்ந்திருக்கவும், தேவனுடைய கவசத்தை போரில் பயன்படுத்தவும் செய்கிறது.
5. பாவம் நம்மில் எஞ்சியிருப்பதன் மூலம், கிறிஸ்துவின் அவசியத்தையும், நம்முடைய குற்றம், தினமும், நீக்கப்பட்டு, நாம் அனுதினமும் புதிதாக்கப்பட, அவருடைய விலைமதிப்பற்ற இரத்தத்தின் அவசியத்தையும், நாம் மேலும் மேலும் உணர்கின்றோம். மேலும், நம், கிறிஸ்தவ வாழ்வில் பலப்பட, இவ்வனாந்திரத்தை விட்டு வெளியே வந்து, அவரில் சார்ந்துக்கொள்ள உதவுகிறது.
6. எஞ்சியிருக்கும் பாவத்தின் மூலம், கிறிஸ்து மகிமைப்படுத்தப்படுகிறார். எதிரி, பாவம், நம்மில் குடியிருக்கையில், கிறிஸ்துவின் கிருபையும் பரிசுத்த ஆவியும் நம்மில் செயல்படுகின்றன, இதனால் எதிரி நம்மை வெல்லவோ, ஆதிக்கம் செலுத்தவோ அல்லது அழிக்கவோ முடியாது. நம்மில் தங்கியிருக்கும் பாவத்தின் காரணமாக, நாம் நம்மை நியாயப்படுத்த முடியாது என்பதை அறிவோம், ஆனால் கிறிஸ்துவின் பரிபூரண கீழ்ப்படிதலால் மட்டுமே நியாயப்படுத்தப்பட முடியும், அதை நாம் விசுவாசத்தால் பிடித்துக் கொள்கிறோம். இதில், கிறிஸ்து மகிமைப்படுத்தப்படுகிறார்.
7. இத்தகைய நச்சுப் பொருட்களிலிருந்து (எஞ்சிய பாவம்) கர்த்தர் எப்படி ஒரு சிறந்த மருந்தை உருவாக்குகிறார் என்பதைப் பார்க்காமல் இருக்க முடியாது! அது மிகவும் மகிழ்ச்சியானதே! ரோமர் 8:28
நம்மில் இருக்கும் எஞ்சிய பாவத்திற்கு எதிரான போராட்டம் நிச்சயமாக கடினமானது. ஆனால், தேவனுடைய இறையாண்மையானது, நம்மில் தங்கியிருக்கும் பாவத்தை, அவருடைய மக்களில் அவர்களின் நன்மைக்காகவும் அவருடைய மகிமைக்காகவும் பயன்படுத்துவதை நாம் நினைவுகூரும்போது, அது, இயேசுவின் மீது நம் கண்களை நிலைநிறுத்தி விசுவாசத்தில் முன்னேற உதவுகிறது. பாவத்தின் மீதான முழு வெற்றியையும் ஒரு நாள் கிருபையாக தருவார்!
“தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.”(ரோமர் 8:29).
“அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.”(2 பேதுரு 3:13).
“வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,
தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.”(யூதா 1:24,25).
No Response to “Why does God allow sin to remain in His people? – Thomas Boston (1676-1732).ஏன் தேவன் தம்முடைய பிள்ளைகளிடத்தில் பாவம் இருக்கும்படியாக அனுமதிக்கிறார்? – தொமஸ் பாஸ்டன் (1676-1732).”