ஆவியில் வல்லமையாய் ஜெபிப்பது எப்படி? – Dr. ஜோயல் பீகி.

Published June 30, 2020 by adming in Pastor's Blog

   How To Pray in Sprit Effectively?

   

-Dr. Joel Beeke.

  • சார்ந்துக்கொள்

அவரில் சார்ந்து ஜெபிக்கிற ஜெபமானது வல்லமை கொண்டது.

  • ஜெபத்தை முதன்மைபடுத்து. ஜோன் பனியன் இவ்விதமாக கூறுகிறார், “நீ ஜெபிக்காத வரைக்கும், எந்த காரியத்தையும் நிறைவாய் செய்ய முடியாது. அதே சமயத்தில், நீ ஜெபித்த பின்பு செய்யும் காரியம் நிறைவாயிருக்கும்.”

  • ஜெபத்தில் உள்ள இனிமையை கண்டுக்கொள். எனக்கு ஒன்பது வயதாயிருக்கும்போது என்னுடைய  அப்பா சொல்லுவார், ‘எப்பொழுதும் ஞாபகம் வைத்துக்கொள், ஒரு உண்மையான விசுவாசி செல்லுவதற்க்கான ஒரு இடம் உண்டு, அதுதான், கிருபாசனத்தண்டை. ஜெபம் என்பது அவரண்டை செல்லுவதற்கான கடவுளுடைய பரிசு.  அவர் ஜெப ஆவியை கொடுக்கிறவரும், ஜெபத்தை கேட்கிறவரும், ஜெபத்திற்கு பதில் அளிக்கிற கடவுளுமாய் இருக்கிறார்.’

வில்லியம் பிரிட்ஜ், இவ்விதமாக கூறுகிறார், ‘நான் எதற்காக ஜெபிக்கிறேனோ அதை நான் பெறாவிட்டாலும், ஜெபிப்பதே ஒரு இரக்கம்தான்.’ 

ஜோசப் ஹால், கூறுகிறார், ‘ஒரு நல்ல ஜெபம் ஒருபோதும் அழுதுக்கொண்டு வெறுமையாய் திரும்பி வராது. ஏனென்றால், ஒன்று நான் எதற்காக ஜெபிக்கிறேனோ அதை பெற்றுக்கொள்வேன். அல்லது எதற்காக ஜெபிக்க வேண்டுமோ நான் அதை கற்றுகொள்வேன்.’

  • தேவனுடைய வாக்குத்தத்தத்தை மீண்டும் மீண்டும் நினைவு கூறு.  அவருடைய சொந்த வார்த்தையை குறித்து அவர் கனிவுள்ளவராய் இருக்கிறார். அவருடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொள். உனக்காக அவர் உன்னுடைய ஜெபத்தை வல்லமையுள்ளதாக மாற்றுவார்.

No Response to “ஆவியில் வல்லமையாய் ஜெபிப்பது எப்படி? – Dr. ஜோயல் பீகி.”

Leave a Comment