Published February 28, 2025 by adming in Pastor's Blog
அறியாமை கொண்ட இருதயம் தூய்மையற்ற இருதயம். பாவத்தை குறித்து, கிறிஸ்துவை குறித்து அறியாத இருதயம், தூய்மையற்ற இருதயம். அறிவுதான் இருதயத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருகிறது. நீதிமொழிகள் 19:2 சொல்லுகிறது, “ஆத்துமாஅறிவில்லாமலிருப்பது நல்லதல்ல” அறியாமை, கடவுளை நேசிக்காது, விசுவாசம் இருக்காது, கடவுளை சரியான விதத்தில் ஆராதிக்காது. அறியாமை, பெருமையின் சிகரம். அனைத்து தவறுக்கும் இதுவே காரணம். ஆக, அறியாமை கொண்ட இருதயம், தூய்மையற்ற இருதயம்.
சுய – நீதி கொண்ட இருதயம், தூய்மையற்ற இருதயம். இங்கு பரிசுத்தத்திற்கே வேலையில்லை. “நான் …… எனக்கு ஒரு குறைவுமில்லை” (வெளி 3:17). தன்னுடைய உண்மையான நிலையை அறியாதபடி, தன்னையே பெருமைபராட்டிக்கொள்ளும் இருதயம்.
அக்கிரம சிந்தை கொண்ட இருதயம், பரிசுத்தமற்ற இருதயம். (சங்கீதம் 66:18). ஆம், இவ்விருதயம், பாவத்தில் இருக்கும் இருதயம், அதில் சந்தோஷப்படும் இருதயம்.
No Response to “பரிசுத்தமற்ற இருதயத்தின் அறிகுறிகள். – தொமஸ் வாட்சன்”